இந்தியாவின் முன்னணி தொழில் அதிபரான முகேஷ் அம்பானி மற்றும் நீடா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் வருங்கால மனைவி ராதிகா மெர்ச்சண்ட் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம் மும்பையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இதனை அடுத்து இந்த விழாவில் ஏராளமான பாலிவுட் பிரமுகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் வருகை தந்து ராதிகா அவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் சி.இ.ஓ விரென் மெர்சென்ட், சாய்லா மெர்சென்ட்டின் மகளான பரதநாட்டிய கலைஞர் ராதிகா மெர்சென்ட்டின் பரதநாட்டிய அரங்கேற்றம் மிகவும் சிறப்பாக அமைந்ததாக அனைவரும் கருத்து கூறினர்.
ராதிகா மெர்ச்சண்ட்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் நீடா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு ராதிகா மெர்ச்சண்ட் அவர்களுக்கு திருமணம் முடிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த 8 ஆண்டுகளாக பரதநாட்டியம் பயின்று வரும் ராதிகா அவர்களின் நாட்டிய அரங்கேற்ற விழா மும்பை ஜியோ வேர்ல்ட் சென்டரில் உள்ள கிராண்ட் தியேட்டரில் நடைபெற்றது.
நாட்டிய அரங்கேற்றம்
இந்த நாட்டிய அரங்கேற்ற விழாவில் கலந்து கொண்ட பல முக்கிய தலைவர்கள், தொழிலதிபர்கள், உறவினர்கள், நண்பர்கள் என பலரும் ராதிகா மெர்சன்டை வாழ்த்தி அவருக்கு ஊக்கம் அளித்தனர்.
பரத நாட்டியம்
ராதிகா கடந்த 8 ஆண்டுகளாக பரத நாட்டியம் கற்று கொண்டு வரும் நிலையில் இந்த அரங்கேற்றம் விழா ராதிகாவின் சிறப்பாக நிகழ்வாக அமைந்தது. மேலும் அவரது குரு பாவனா தாக்கருக்கும் மனநிறைவான ஒரு விழாவாக அமைந்ததாக தெரிகிறது.
குரு-சிஷ்ய உறவு
நாட்டிய அரங்கேற்றம் என்பது ஒரு பரதநாட்டிய கலைஞரின் வாழ்க்கையின் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று. பாரம்பரியத்தின் தொடர்ச்சி, குரு-சிஷ்ய உறவின் முக்கியத்துவத்தை இந்த அரங்கேற்றம் குறிக்கிறது. இந்த அரங்கேற்ற நிகழ்ச்சியின்போது, அனைத்து பாரம்பரிய அம்சங்களையும் கொண்ட ராதிகாவின் நடனம், பாவனையை அனைவரும் பாராட்டினர்.
புஷ்பாஞ்சலி
மேலும் இந்த அரங்கேற்ற விழாவில் பார்வையாளர்களின் ஆசீர்வாதத்தை வேண்டி புஷ்பாஞ்சலி தொடங்கி, கணேஷ் வந்தனா மற்றும் பாரம்பரிய அலாரிப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கைதட்டல்
ராதிகாவின் பரதநாட்டிய திறமை, நடன முத்திரைகள் மூலம் காட்டும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் திறன் கண்களுக்கு விருந்தளித்தன என பார்வையாளர்கள் தெரிவித்தனர். அரங்கேற்ற நிகழ்ச்சி முடியும்போது பார்வையாளர்களின் கைதட்டல் ஓசை விண்ணை பிளந்தது என்று கூறலாம்.
நீடா அம்பானி
ஏற்கனவே நீடா அம்பானி பரதநாட்டிய கலையை முறையாக பயின்றவர் என்ற நிலையில் தற்போது அவரது குடும்பத்தில் இன்னொரு நேர்த்தியான, நடன அசைவுகள் கொண்ட பரதநாட்டிய கலைஞர் உருவாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலிவுட் பிரபலங்கள்
இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்களான சல்மான் கான், ரன்வீர் சிங், அமீர் கான் போன்றவர்களும், கிரிக்கெட் வீரர் ஜாகீர் கான், மனைவியும் நடிகையுமான சகரிகா காட்கே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications