5 பென்னி ஸ்டாக்குகள் கடந்த ஆறு மாதங்களில் 390 சதவீத லாபத்தை முதலீட்டாளர்களுக்கு ஈட்டித் தந்துள்ளன. ஜே டபரியா ப்ராஜெக்ட்ஸ், கென்வி ஜூவல்ஸ், விவாண்டா இண்டஸ்ட்ரீஸ், பிராங்க்ளின் இண்டஸ்ட்ரீஸ், சுஸ்லான் எனர்ஜி ஆகியவை தான் இந்த குறைந்த விலை பென்னி ஸ்டாக்குகள்.
இதில் பெரும்பாலான பங்குகள் தொடர்ந்து 52 வார உச்சத்தை தொட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்றைய வர்த்தகத்தில் J Taparia Projects Ltd பங்கு விலை ரூ.31.40 ஆக மும்பை பங்கு சந்தையில் இருந்தது. வர்த்தக நாளில் 1.98 சதவீதம் உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு லாபத்தை கொடுத்தது. ஆகஸ்ட் 23,24,25 ஆகிய நாட்களில் 52 வார உச்சத்தில் இருந்தன. 52 வார உச்சபட்சமாக ரூ.31.40 ஆகவும் 52 வார குறைந்தபட்சமாக ரூ.4.80 ஆகவும் இருந்தது.
இதன் மார்க்கெட் மூலதனம் ரூ.50.87 கோடி ஆகும். J Taparia Projects Ltd பங்குகள் கடந்த ஆறு மாதங்களில் 398 சதவீத லாபத்தை தந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் 4,692 சதவீத லாபத்தை தந்தது.
ஆகஸ்ட் 25 ஆம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் Kenvi Jewels Ltd இன் பங்கின் கடைசி வர்த்தக விலை ரூ.9.36 ஆக இருந்தது. ஆகஸ்ட் 23, 24, 25 ஆம் தேதிகளில் இந்தப் பங்கு அப்பர் சர்க்யூட்டை தொட்டிருந்தது. 52 வாரத்தில் அதிகபட்சமாக ரூ.15.70 ஆகவும் குறைந்த பட்சமாக ரூ.2.97க்கு ஒரு பங்கின் விலை இருந்தது.
இன்றைய வர்த்தகத்தில் 0.32 சதவீதம் சரிந்து 9.37 ரூபாயாக குறைந்துள்ளது. இதன் மூலம் சந்தை மூலதனம் ரூ.118.42 கோடியாக குறைந்தது. கடந்த 6 மாதங்களில் Kenvi Jewels Ltd இன் பங்கு 160 சதவீதம் அதிகரித்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில் 713 சதவீதம் உயர்ந்தது.
Vivanta Industries பென்னி ஸ்டாக் மும்பை பங்கு சந்தையில் இன்றைய வர்த்தகத்தில் ரூ.5.96 ஆக இருந்தது. 52 வாரத்தில் அதிகபட்சமாக ரூ.6.93 ஆகவும் குறைந்த பட்சமாக ரூ.1.29 ஆகவும் ஒரு பங்கின் விலை இருந்தது.
இதன் சந்தை மூலதனம் ரூ.59.60 கோடியாகும். கடந்த ஆறு மாதங்களில் இதன் மதிப்பு 197 சதவீதம் அதிகரித்தது. கடந்த மூன்று ஆண்டுகளில் 1875 சதவீதம் உயர்ந்தது.
ஆகஸ்ட் 25 ஆம் தேதியன்று மும்பை பங்குச் சந்தை வர்த்தக முடிவில் Franklin Industries பங்கு விலை ரூ.26.98 ஆக இருந்தது. இன்று Franklin Industries பங்குகள் 2 சதவீதம் உயர்ந்து 28.06 ரூபாயாக உள்ளது. 52 வாரத்தில் அதிகபட்சமாக ரூ.28.06 ஆகவும் குறைந்த பட்சமாக ரூ.8.87 ஆகவும் ஒரு பங்கின் விலை இருந்தது. இதன் சந்தை மூலதனம் ரூ.9.75 கோடியாகும். Franklin Industries பங்கு விலை கடந்த ஆறு மாதத்தில் 159 சதவீதம் அதிகரித்தது. கடந்த ஒரே மாதத்தில் 111 சதவீதம் உயர்ந்துள்ளது.
ஆகஸ்ட் 25 ஆம் தேதியன்று Suzlon Energy
பங்கு ரூ.22.38 ஆக இருந்தது. ஆகஸ்ட் 23, 24, 25 ஆகிய தேதிகளில் 52 வார உச்சத்தில் இருந்தது. இன்றுSuzlon Energy பங்குகள் 4.89 சதவீதகம் உயர்ந்து 24.65 ரூபாயாக உள்ளது.
Suzlon Energy பங்கு விலை கடந்த ஆறு மாதங்களில் 300 சதவீதம் அதிகரித்தது. கடந்த மூன்று ஆண்டுகளில் 519 சதவீதம் அதிகரித்தது. அதன் மார்க்கெட் மூலதனம் ரூ.30,356 கோடியாகும்.
More From GoodReturns

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?

ஒரு நேர சாப்பாட்ட நிறுத்திட்டு அந்த காசுக்கு வெள்ளி வாங்கி வைங்க!! ராபர்ட் கியோசாகி அதிரடி!!

வெறும் ரூ.200 போதும்! உங்கள் மகளின் எதிர்காலத்திற்கு ரூ.40 லட்சம் சேமிக்கலாம் - எப்படி தெரியுமா?

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!



Click it and Unblock the Notifications