இரு மடங்கிற்கும் மேலாக லாபம் கொடுத்த தீபக் நைட்ரேட்.. வாங்கியிருக்கீங்களா.. இனியும் அதிகரிக்கலாம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சாமானிய மக்களும் நாட்டின் மிகப்பெரிய முன்னணி நிறுவனங்களில் கூட முதலீடு செய்ய முடியும் என்றால், அதற்கு சிறந்த வழி பங்கு சந்தை தான்.

 

அதோடு பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு பெரிய அளவிலான முதலீடுகள் தேவை என்ற கருத்தும் நிலவி வருகிறது. ஆனால் சிறிய அளவில் கூட பங்கு சந்தையில் நிறைய முதலீடு செய்ய முடியும்.

பலருக்கு இருக்கும் கேள்வி சிறிய தொகையுடன் பங்குச்சந்தையில் எவ்வாறு வர்த்தகம் செய்வது, சிறிய முதலீட்டில் வர்த்தகம் செய்தால் நஷ்டம் ஆகி விடாதா? என்று பல கேள்விகள் எழுகிறது.

சென்னையில் ஏர்டெல் ரூ.5000 கோடி முதலீடு.. மெகா டேட்டா சென்டர்.. புதிய வேலைவாய்ப்பு..!

எவ்வளவு முதலீடு

எவ்வளவு முதலீடு

ஆனால் இதற்கு சிறந்த பதில் நீங்கள் பங்குகளில் எவ்வளவு எவ்வாறு முதலீடு செய்யும் செய்ய விரும்புகிறீர்கள், என்பதை விட உங்களின் இலக்கு என்ன என்பதை முதலில் வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு உங்களது முதலீட்டை தேர்வு செய்யுங்கள். எல்லாவற்றையும் விட முதலில் பங்கு சந்தை பற்றிய அடிப்படைகளைத் தெரிந்து கொண்டு, அதன் பின்னர் முதலீடு செய்வது மிக உத்தமம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

முதலீடு செய்யும்போது உணர்ச்சிகள் வேண்டாம்

முதலீடு செய்யும்போது உணர்ச்சிகள் வேண்டாம்

நல்ல வருமானத்தை பெறுவது என்பது மகிழ்ச்சியைத் கொடுத்தாலும், பங்குச் சந்தையில் நஷ்டம் என்பதும் இருக்கத்தான் செய்யும். ஆக அதனையும் தெரிந்து கொண்டு அதற்கேற்ப, . உங்களது உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும். உணர்ச்சிவசப்படும் நிலையில் நீங்கள் பங்குசந்தையில் முதலீடு செய்ய தகுதியற்றவராகவே கருதப்படுவீர்கள்.

பாதுகாப்பாக இருக்கும்
 

பாதுகாப்பாக இருக்கும்

பங்குச் சந்தை பற்றிய அடிப்படை விஷயங்களை முதலில் தெரிந்து கொள்ள, அதற்கான நேரத்தை ஒதுக்கி தெரிந்து கொள்ளுங்கள். பங்கு சந்தை முதலீடுகளில் முதலில் முதலீடுகளை பன்முகப்படுத்தல், நீண்டகால நோக்கில் முதலீடு செய்தல் உள்ளிட்ட அம்சங்களை கடைபிடியுங்கள். இது நீண்டகால நோக்கில், நல்ல லாபம் பெறவும், பாதுகாப்பான முதலீடு முதலீட்டாளராக இருக்கவும் வழிவகுக்கும்.

தீபக் நைட்ரைட்டில் முதலீடு

தீபக் நைட்ரைட்டில் முதலீடு

குறிப்பாக நீண்ட கால முதலீடு என்பது பங்குசந்தையில் ஒருவரை, லட்சாதிபதியாக ,கோடீஸ்வரராக கூட மாற்றலாம். அந்த அளவுக்கு பொறுமையும் நிதானமும் பங்குசந்தையில் மிக மிக அவசியம்.

முதலீட்டாளர்களை லட்சாதிபதியாக்கிய பங்கினை பற்றி தான் நாம் இன்று பார்க்க இருக்கிறோம். அந்தவகையில் நாம் இன்று பார்க்கவிருக்கும் பங்கு தீபக் நைட்ரைட். இந்த பங்கில் ஒரு வருடத்திற்கு முன்பு முதலீடு செய்திருந்தால், இன்று அவர்களது முதலீடு இரு மடங்காகும்.

வரலாற்று உச்சத்தில் பங்கு

வரலாற்று உச்சத்தில் பங்கு

இந்த பங்கின் விலையானது இன்று 6% அதிகரித்து, இன்று அதன் வரலாற்று உச்சத்தினை தொட்டுள்ளது. இதன் விலை 2753.7 ரூபாயாக அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்த பங்கின் விலையானது சீனாவின் கடும் மின்வெட்டுக்கு பிறகு 25% அதிகரித்துள்ளது.

ஏன் இந்த அதிகரிப்பு

ஏன் இந்த அதிகரிப்பு

தீபக் நைட்ரேட் ஒரு கெமிக்கல் நிறுவனம் ஆகும். இது பல்வேறு வகையான கெமிக்கல்களை விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் பொருட்களுக்கான தேவையானது வரவிருக்கும் ஆண்டுகளில் அதிகரிக்கலாம் என்ற நிலை நிலவி வருகிறது. குறிப்பாக சீனாவில் கடும் மின்வெட்டு நிலவி வரும் நிலையில், அது கெமிக்கல் உற்பத்தியினை பாதிக்கலாம். இதனால் சப்ளை சங்கிலியில் பாதிப்பு ஏற்படலாம் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.

கெமிக்கல் உற்பத்தி குறையலாம்

கெமிக்கல் உற்பத்தி குறையலாம்

இந்தியாவைப் பொறுத்தவரையில் அதிக அளவிலான கெமிக்கல்கள், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது. ஏற்கனவே சீனாவில் சுற்றுச் சூழலை சரி செய்யும் விதமாக, பல கெமிக்கல் நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை குறைத்துள்ள நிலையில், தற்போது மின்வெட்டின் காரணமாக இன்னும் உற்பத்தி குறைய வாய்ப்பு இருப்பதாக கணிப்புகள் இருந்து வருகின்றன. இந்த நிலையில்தான் இந்த பங்கின் விலையானது வரலாறு காணாத அளவு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

 நினைத்து கூட பார்க்க முடியாத அளவு ஏற்றம்

நினைத்து கூட பார்க்க முடியாத அளவு ஏற்றம்

இந்த நிலையில் தான் இந்த மல்டி பேக்கர் பங்கின் விலையானது 808 ரூபாயில் இருந்து, 2753.7 ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து 185% அதிகரித்துள்ளது. இதே கடந்த ஓராண்டில் 241% அதிகரித்துள்ளது. இதே கடந்த 5 ஆண்டுகளில் இந்த பங்கின் விலையானது 1986% ஏற்றம் கண்டுள்ளது. இது கடந்த 10 ஆண்டில் இந்த பங்கின் விலையானது, 15,242% ஏற்றம் கண்டு நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவில் ஏற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனமானது 36,703 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இனியும் அதிகரிக்கலாம்

இனியும் அதிகரிக்கலாம்

இந்த பங்கின் விலையானது இன்னும் டெக்னிக்கலாக சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. குறிப்பாக 5 நாள், 20 நாள், 50 நாள், 100 நாள் மற்றும் 200 நாள் மூவிங் ஆவரேஜ்ஜூக்கும் மேலாக வர்த்தகமாகி வருகிறது. இதனால் நீண்ட கால நோக்கில் இந்த பங்கின் விலையானது, இன்னும் அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகிறது.

சாதகமான ஃபண்டமெண்டல் காரணிகள்

சாதகமான ஃபண்டமெண்டல் காரணிகள்

மார்க்கெட் மோஜோ அறிக்கையின்படி இந்த நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் தொடர்ச்சியாக, கடந்த நான்கு காலாண்டுகளாகவே வலுவான அறிக்கையினை கொடுத்து வருகின்றது. இந்த நிலையில் ஃபண்டமெண்டல் ரீதியாகவும், இந்த நிறுவனத்திற்கு சாதகமான காரணிகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் இந்த நிலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகிறது.

டெக்னிக்கல் பேட்டர்ன் என்ன சொல்கிறது?

டெக்னிக்கல் பேட்டர்ன் என்ன சொல்கிறது?

இவற்றோடு எம் ஏ சி டி, பொலிங்கர் பேன்ட்ஸ், கே எஸ் டி மற்றும் டவ் உள்ளிட்ட டெக்னிக்கல் குறியீடுகளும், இந்த பங்கின் விலையானது சற்று ஏற்றம் காணலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது. எப்படி இருப்பினும் இந்த பங்கின் விலையானது தற்போது உச்சத்தில் உள்ள நிலையில், சற்று குறைந்தால் வாங்கலாம் என்று நிபுணர்கள் கணித்து வருகின்றனர்.

இருமடங்கிற்கு மேல் லாபம்

இருமடங்கிற்கு மேல் லாபம்

இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 302.63 கோடி ரூபாயாக கடந்த ஜூன் காலாண்டில் அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் இதன் நிகர லாபம் 98.95 கோடி ரூபாயாக இருந்தது. இதே செயல்பாட்டின் மூலமாக கிடைத்த வருவாய் ஆனது 126% அதிகரித்து, 1526.22 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 674.49 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Multibagger stock! Rs.808 to Rs2,753: Deepak Nitrite share price zoomed over 240% in one year

Multibagger stock! Rs.808 to Rs2,753: Deepak Nitrite share price zoomed over 240% in one year/ தீபக் நைட்ரேட் பங்கின் விலையானது இன்று 6% அதிகரித்து, இன்று அதன் வரலாற்று உச்சத்தினை தொட்டுள்ளது. இதன் விலை 2753.7 ரூபாயாக அதிகரித்துள்ளது.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X