பங்குச் சந்தையில் லாபத்தை அள்ளி கொடுக்கும் பங்குகள் ஏராளம். சில பங்குகள் சரியான நேரங்களில் செய்யப்படும் அதன் முதலீடுகளால் முதலீட்டாளர்களுக்கு எண்ணற்ற பல நன்மைகளை வழங்குகின்றன. பென்னி பங்குகளாக சந்தையில் நுழையும் பங்குகள் விரைவில் அதீத வளர்ச்சியடைந்து அதன் முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் வருவாயை அள்ளிக்கொடுக்கின்றன. அந்த வகையில் ஒரு பங்குதான் விஏ டெக் வபாக்.
விஏ டெக் வபாக் என்பது முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் ஆதாயங்களை வழங்கிய ஒரு பங்கு ஆகும். கடந்த 5 ஆண்டுகளில் பங்கு விலை ரூ.75ல் இருந்து ரூ.1,540 ஆக உயர்ந்துள்ளது. ரூ.10,000 முதல் ரூ.2 லட்சம் வரை முதலீட்டை உயர்த்திய பங்கு ஆகும். இதன் வளர்ச்சியின் அடிப்படையில் 1,910% லாபத்தை கொடுத்துள்ளது.

இது சுற்றுச்சூழல் சேவைகளைக் கையாளும் ஒரு சிறிய நிறுவனமாகும். உலகளவில் தொழிற்சாலைகள் மற்றும் நகராட்சிகளுக்கு நிலையான நீர் தீர்வுகளை வழங்குதல் சேவையை செய்கிறது. இது சுத்தமான நீர் மற்றும் கழிவு நீர் உள்கட்டமைப்பைக் கையாளும் ஒரு முன்னணி நிறுவனமாகும். 1924 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்நிறுவனம் ஒரு நூற்றாண்டின் அரிய செயல்பாட்டு மரபைக் கொண்டுள்ளது. இது நாட்டின் நீர் மேலாண்மைத் துறையில் மூன்றாவது பெரிய நிறுவனமாகவும் உள்ளது. தற்போது, நிறுவனம் டிசம்பர் 2024 காலாண்டு முடிவுகளை அறிவிக்கவில்லை.
ஏப்ரல் 3, 2020 அன்று நிறுவனத்தின் பங்கின் விலை ரூ.75.40 ஆக முடிந்தது. அதுவே இன்றைய நிலவரப்படி, 5 ஆண்டுகளில் ரூ.1542 ஆக உயர்ந்து சுமார் 1910% மல்டிபேக்கர் லாபத்தை அளித்துள்ளது.
கடந்த ஒரு வருடத்தில் இந்த பங்கு 143.61% மல்டிபேக்கர் லாபத்தையும் கொடுத்துள்ளது. பங்கு கடந்த ஒரு மாதத்தில் 5.86% சரிவுடனும், கடந்த ஒரு வார காலத்தில் 7.77% லாபத்தையும் கொடுத்துள்ளது. 6 மாதங்களில் 22.78%, 9 மாதங்களில் 51.85%, 2 ஆண்டுகளில் 374.24%, 3 ஆண்டுகளில் 378.10% மற்றும் 4 ஆண்டுகளில் 650.79% லாபத்தை கொடுத்துள்ளது.
சமீபத்திய தகவல்களின்படி, விஏ டெக் வாபாக் புரோமோட்டர்கள் 19.13% பங்குகளை வைத்திருக்கின்றனர். செப்டம்பர் 2024 காலாண்டில், உடனடியாக முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில், புரோமோட்டர்கள் இருப்பில் எந்த மாற்றமும் இல்லை. அவர்கள் எந்த பங்குகளையும் அடகு வைக்கவில்லை. சில்லறை முதலீட்டாளர்கள் 62.60% பங்குகளை வைத்துள்ளனர். வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் (எஃப்ஐஐ) 14.68%, மியூச்சுவல் ஃபண்டுகள் 2.90% மற்றும் மற்றவை 0.69% வைத்துள்ளன.


Click it and Unblock the Notifications