600% லாபம்.. எல்லோருக்கும் 'தெரிந்த மறைந்த' நிறுவனம்.. டெக்ஸ்டைல் டூ ஏரோஸ்பேஸ் சென்ற Raymond!

பங்குச்சந்தை முதலீட்டு வரும் பெரும்பாலான முதலீட்டாளர்களின் இலக்கு குறைந்த காலகட்டத்தில் அதிகப்படியான லாபத்தைப் பெற வேண்டும் என்பது தான். அப்படி மல்டி பேக்கர் பங்குகளைத் தேடும் முதலீட்டாளர்கள் பலரும் பிரபலமான நிறுவனங்களைத் தவறவிடுவது வழக்கம்.

அப்படி இந்தியாவில் நீண்ட காலமாக இயங்கி வரும் ஒரு சில வர்த்தக சாம்ராஜ்ஜியங்களில் ரேமண்ட் குழுமம் மிகவும் முக்கியமானது, சமீபத்தில் இக்குழுமம் தனது உண்மையான மதிப்பை முதலீட்டாளர்களுக்கு வழங்க வேண்டும் என்பதற்காகத் தனது வர்த்தகத்தின் அடிப்படையில் தனித்தனியாகப் பிரித்தது.

600% லாபம்.. எல்லோருக்கும் 'தெரிந்த மறைந்த' நிறுவனம்.. டெக்ஸ்டைல் டூ ஏரோஸ்பேஸ் சென்ற  Raymond!

இதன் அடிப்படையில் தனது ஆஸ்தான வர்த்தகமான டெக்ஸ்டைல், ஆடை வர்த்தகத்தை ரேமண்ட் லைப்ஸ்டைல், ரியல் எஸ்டேட் வர்த்தகத்தை ரேமண்ட் ரியாலிட்டி, ஏரோஸ்பேஸ், ஆட்டோமொபைல் உதிரிப்பாகங்கள், பாதுகாப்புத் துறை சார்ந்த வர்த்தகம் ஆகியவற்றை Raymond Limited கீழ் கொண்டு வந்தது.

இந்த வர்த்தக பிரிப்புக்குப் பின்பு சிறப்பான வளர்ச்சியைப் பெற்றுவந்த நிலையில் உற்பத்தித் துறையில் இருக்கும் Raymond Limited மாபெரும் வளர்ச்சியை முதலீட்டாளர்களுக்கு வழங்கியுள்ளது என்றால் மிகையில்லை.

இந்நிறுவனப் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் மட்டும் 7 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது, 3 மாத காலகட்டத்தில் பார்க்கும் போது 77 சதவீதமும், 2026ல் 144 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த அதிரடி வளர்ச்சிக்கு 2-3 காரணங்கள் உள்ளது, அக்டோபர் மாதம் நடக்க உள்ள இந்நிறுவனத்தின் EGM கூட்டத்தில் preferential issue வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல் செப்டம்பர் 8ஆம் தேதி மின்னெர்வா வென்சர்ஸ் பண்ட்-க்கு 33.29 லட்சம் கன்வெர்டிபிள் வாரென்ட்ஸ் கொடுத்து முதலீட்டை ஈர்த்தது, சமீபத்தில் சிஇஓ நியமிக்கப்பட்டது, ஏரோஸ்பேஸ் கான்டிராக்ட் பெற்றது போன்றவை முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையைப் பெற்றுள்ளது.

இதன் வாயிலாக ரேமெண்ட் லிமிடெட் பங்குகள் 2 வாரத்தில் 35.42 சதவீதமும், ஒரு மாதத்தில் 62.8 சதவீதமும், 3 மாதத்தில் 78.67 சதவீதமும், 6 மாதத்தில் 181 சதவீதமும், 2026ல் 145 சதவீதமும், 5 வருடத்தில் 610 சதவீதமும், 10 வருடத்தில் 460 சதவீதமும் வளர்ச்சி அடைந்து முதலீட்டாளர்களுக்கு பெரும் லாபத்தைக் கொடுத்துள்ளது.

உற்பத்தித் துறையில் ரேமெண்ட் நிறுவனத்திற்கு பெரும் வாய்ப்பு உள்ளதால் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது, இதை உறுதி செய்யும் வகையில் அடுத்தடுத்து ஆர்டர்கள் குவிந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+