இந்தியாவின் நிதி தலைநகரமான மும்பையில் ஆண்டுதோறும் அதன் மக்கள்தொகை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பல கோடி இளைஞர்களின் கனவு நகரமான மும்பையல் வசிக்க இடம் இல்லாவிட்டால் பெரும் பிரச்னை தான்.
ஆனால் அதேநேரத்தில் வசிக்க ஒரு இடம் இருந்தாலும் செலவு அதிகம்தான், வாடகைக்குக் கட்டி மாளாது என்று புலம்புகின்றனர் மும்பைக்காரர்கள்.

இந்த நிலையில் மும்பையில் உள்ள ஒரு பகுதியில் ஒரு பெண் 2பிஎச்கே பிளாட்டைக் காட்டும் வீடியோ சமுகவலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.
வைரலான இந்த வீடியோவில், கிழக்கு கண்டிவலி பகுதியில் உள்ள 323 சதுர அடி பரப்பளவில் 2பிஎச்கே பிளாட் ஒன்றை அந்தப் பெண் காட்டுகிறார்.
இந்த வீடு 23 மாடிகள் கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பில் அமைந்துள்ளது. இதன் விலை ரூ.75 லட்சம் என்று கூறப்படுகிறது.
323 சதுர அடி பரப்பளவைக் கொண்ட இந்தச் சொத்தின் அளவு மற்றும் விலை சமூக ஊடகத்தில் பலகையும் மிரள வைத்துள்ளது.
இந்த வீடியோ கிளிப் ஆன்லைனில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
இந்த வீடியோ ஆன்லைனில் பகிரப்பட்டதிலிருந்து ஏழு லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைக் குவித்துள்ளது. சமூக ஊடக பயனர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினர் என்று சொல்ல தேவையில்லை. சிலர் கிண்டல் நிறைந்த எதிர்வினைகளையும் பதிவு செய்துள்ளனர்.
அது உங்களுக்கான மும்பை. சூப்பர் பில்ட் அப் ஏரியாவுக்கும் கார்பெட் ஏரியாவுக்கும் உள்ள வித்தியாசம் கிட்டத்தட்ட 40% உள்ளது. மேலும் பல நகரங்களில் உள்ள வாடகைத் தொகைக்குச் சமமான பராமரிப்பை கட்டணத்தையும் செலவிட வேண்டியுள்ளது என்று ஒரு பயனர் இதுபற்றி எழுதியுள்ளார்.
மற்றொரு பயனர், "இதை 2பிஎச்கே என்று அபத்தமாக அழைப்பதற்குப் பதிலாக, அவர்கள் அதை ஒரு ஸ்டுடியோ வீடு எனக் கூற வேண்டும். இது ஒரு வசதியான பேச்சுலர்களின் வசிப்படமாக இருக்க வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார்.
இதில் முதலீடு செய்யும் பணம் வீண்விரயம். இந்த 75 லட்சம் ரூபாய்க்கு ஹைதராபாத்தில் 1000 சதுர அடியில் 2பிஎச்கே கிடைக்கும் என்று மூன்றாவது பயனர் குறிப்பிட்டுள்ளார்.
நான்காவது பயனர், ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் புறாக் கூண்டு போல இந்தப் பிளாட் உள்ளது. கழிவறைகள் குளிப்பதற்குப் போதாததாக உள்ளது. இதை வாங்கியவர்கள் மழை காலத்தில் கண்ணீர் விட்டு கதறி அழலாம், யாருக்கும் தெரியாது என மற்றொரு பயணர் தெரிவித்துள்ளார்.
மும்பையில் வசிக்குமிடங்கள் அந்தளவுக்கு விலை உயர்ந்ததாக இருக்கிறது. சாதாரணப்பட்ட மக்களால் மும்பையில் நிச்சயம் வீடு வாங்கி வசிக்க முடியாது. நிலைமை அந்தளவுக்கு மோசமாக உள்ளது. வீடு மெயின்டனன்ஸ் எக்கச்சக்கமாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications