தற்போது பெரும்பாலான துறைகளில் ஏஐ வந்துவிட்டதால் பணி பாதுகாப்பு இல்லாமல் போய்விட்டது. திடீரென பணிநீக்கம் செய்யப்படுவது, ஊதிய உயர்வே இல்லாமல் வேலை செய்வது என ஐடி வேலைகளீல் இருப்போருக்கு கத்தி மேல் நடப்பது போல தான் உள்ளது. பல துறைகளிலும் தொடக்க நிலை வேலைகளுக்கான சராசரி சம்பளமே 25,000 ரூபாய் தான்.
இங்கே முடிதிருத்தும் தொழிலாளி ஒருவரே மாதம் 1 லட்சம் ரூபாய் சம்பாதிப்பதாக கூறி ஆச்சர்யப்படுத்துகிறார். ஹர்ஷ் குப்தா மதுசூதன் என்பவர் மும்பையில் 'அர்பன் கம்பெனி' செயலி மூலம் தனது வீட்டிற்கே பார்பரை வரவழைத்து முடிவெட்டியுள்ளார். அப்போது அந்த பார்பரிடம் அவர் நடத்திய உரையாடலை எக்ஸ் பக்கத்தில் பகிர அது வைரலாகியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் அசம்கர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தான் பார்பராக வந்திருகிறார். அவரிடம் பேசிய போது, வாரத்தில் 6 நாட்கள் காலை முதல் இரவு வரை இடைவிடாமல் வேலை செய்வதாகவும், பயண செலவுகள் போக, அவருக்கு மாதத்திற்கு சுமார் 1 லட்சம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறதாம். அவரிடம் அரசு வேலை கிடைத்தால் போவீர்களா என கேட்டதற்கு போக மாட்டேன் இந்த தொழிலில் எனக்கு உள்ள சுதந்திரமும் , சுயசார்பும் மிக பிடித்துள்ளதாக பதில் அளித்தாராம்.
இவருக்கு ஒரு மகன் உள்ளார். அவரை ஒரு தனியார் மழலையர் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து வருகிறார். மற்றொரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், அவரது வருமானத்திலிருந்து TDS பிடிக்கப்படுகிறது. இதனால் அவர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்து வருவதாகவும், தனக்கு வரி ரீஃபண்ட் கிடைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தின் தற்போதைய நிலை குறித்து ஹர்ஷ் குப்தா கேட்டபோது, முன்பு தனது கிராமத்திலிருந்து லக்னோ செல்ல 7 முதல் 8 மணி நேரம் ஆனது. ஆனால் தற்போது சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளதால், எளிதாக செல்ல முடிகிறது என்றாராம். பார்பர் ஒரு மாதத்திற்கு 1 லட்சம் ரூபாய் சம்பாதிகிறார் வருமான வரி கணக்கு தாக்கல் செய்கிறார் என்ற இந்த பதிவு எக்ஸ் தளத்தில் வைரலானதை அடுத்து பல்வேறு தரப்பினரும் விவாதித்து வருகின்றனர்.
கிக் வேலைகள் (Gig work) இந்தியாவில் பெரிதும் பாராட்டப்பட வேண்டியவை, இவை பலருக்கும் வாழ்வு தந்துள்ளன என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இதுபோன்ற சேவைகள் மூலம் உழைக்கும் திறமைசாலிகள் நல்ல வருமானம் ஈட்டுகின்றனர். இருப்பினும், படித்த லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு இன்னும் STEM மற்றும் பிற துறைகளில் முறையான வேலைவாய்ப்புகள் கிடைக்கவில்லை என சிலர் கூறியுள்ளனர்.ஏஐ வருகையால் பறிபோகாத வேலைகளில் பார்பர், எலக்ட்ரீஷியன், பிளம்பர் உள்ளிட்ட வேலைகள் அடங்கும் எதிர்காலத்தில் இதற்கு தான் அதிக ஆட்கள் தேவை என சிலர் பதிவிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications

