இந்தியாவில் கொரோனா தொற்றுக் காரணமாக மாநில அரசுகள் கடுமையான லாக்டவுன் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்து வரும் வேளையில் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் மூடப்பட்டு நாட்டின் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம் ஏற்படும் வரி வருவாய் பாதிப்பை மத்திய அரசு பெட்ரோல், டீசல் விற்பனை மூலம் கிடைக்கும் வரியை வைத்து ஈடுசெய்துகொள்ளத் தொடர்ந்து விலையை உயர்த்தி வருகிறது.
லாக்டவுன் அறிவிப்பு
லாக்டவுன் அறிவிப்புக்கு முன்பே பெட்ரோல், டீசல் விலை உயர்வால் உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிக்க உள்ளதாகக் கூறப்பட்டது, குறிப்பாகக் கார், பைக் விலை கூட உயர்த்த வேண்டும் என ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஆலோசனை செய்தது.
விலை உயர்வு முடிவு
ஆனால் லாக்டவுன் காரணத்தால் வர்த்தகமும் குறைந்துள்ள நிலையில் விலை உயர்த்துவது குறித்த முடிவுகளை நிறுவனங்கள் கைவிட்டது. ஆனால் இன்னுமும் போக்குவரத்தை நம்பியிருக்கும் பல நூறு வர்த்தகங்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பாதிப்பு அடைந்து வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு
இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ஒரு நாள் லீவ் விட்ட கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் சனிக்கிழமை ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 25 முதல் 26 பைசா வரையிலும், டீசல் விலை 28 முதல் 30 பைசா வரையிலும் உயர்த்தியுள்ளது.
ரூ.100 தாண்டிய முதல் மெட்ரோ நகரம்
இந்தப் புதிய விலை உயர்வின் மூலம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை மும்பையில் 100.19 ரூபாயாகவும், டீசல் விலை 92.17 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவிலேயே முதல் மெட்ரோ நகரமாக மும்பையில் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்துள்ளது.
மும்பைக்கு அடுத்தது எது..?!
மேலும் மும்பைக்கு அடுத்தாக எந்த மெட்ரோ நகரத்தில் பெட்ரோல் விலை 100 ரூபாய்க்கு உயர்த்த வேண்டும் என்ற திட்டத்தில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் இருக்கிறது எனத் தெரியவில்லை.
அடுத்தது சென்னை..?!
மும்பையில் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்துள்ள நிலையில் அடுத்தது எந்த மாநிலத்தில் பெட்ரோல் விலை 100 ரூபாய் அடையும் என்ற கேள்வி இருக்கும் நிலையில், இன்றைய விலை நிலையைப் பார்க்கும் போது..
மும்பைக்கு அடுத்ததாக ஹைதராபாத், பெங்களூர், பாட்னா அதன் பின்பு தான் சென்னை.
இன்றைய பெட்ரோல் விலை நிலவரம்
மும்பையைத் தொடர்ந்து நாட்டின் பிற முக்கிய நகரங்களில் பெட்ரோல் விலை நிலவரம்
டெல்லி - 93.94 ரூபாய்
கொல்கத்தா - 93.97 ரூபாய்
சென்னை - 95.51 ரூபாய்
பெங்களூர் - 97.07 ரூபாய்
ஹைதராபாத் - 97.63 ரூபாய்
நொய்டா - 91.49 ரூபாய்
போபால் - 102.04 ரூபாய்
பாட்னா - 96.10 ரூபாய்
லக்னோ - 91.41 ரூபாய்
இன்றைய டீசல் விலை
இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய டீசல் விலை
டெல்லி - 84.89 ரூபாய்
கொல்கத்தா - 87.74 ரூபாய்
சென்னை - 89.65 ரூபாய்
பெங்களூர் - 89.99 ரூபாய்
ஹைதராபாத் - 92.54 ரூபாய்
நொய்டா - 85.36 ரூபாய்
போபால் - 93.37 ரூபாய்
பாட்னா - 90.16 ரூபாய்
லக்னோ - 85.28 ரூபாய்
கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள்
5 மாநில தேர்தல் நாள் அறிவிக்கப்பட்ட போது உலகிலேயே நாங்க தான் நல்லவர்கள் போல் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் இருந்தது BPCL, IOCL, HPCL கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள்.
மே மாத விலை உயர்வு
ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியானது முதல் அதாவது 4ஆம் தேதிக்குப் பின் மே மாதத்தில் மட்டும் சுமார் 16 நாட்கள் எரிபொருள் விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வின் மூலம் பெட்ரோல் விலை 3.61 ரூபாயும், டீசல் விலை 4.11 ரூபாயும் உயர்ந்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications