மும்பை: ஹூரன் ஆய்வு அமைப்பு 2024ஆம் ஆண்டுக்கான உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் ஆசிய பணக்காரர்களின் மையமாக சீனாவின் பெய்ஜிங் நகரை பின்னுக்கு தள்ளி மும்பை முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
ஹூரன் ஆய்வு அமைப்பு வெளியிட்டுள்ள பில்லினியர்கள் பட்டியலின் படி, 92 பில்லினியர்கள் வசிக்கும் இந்தியாவின் மும்பை நகரம் ஆசியாவிலேயே பணக்காரர்கள் அதிகம் வசிக்கும் நகரமாக முதலிடத்தை பிடித்துள்ளது. இதற்கு முன்பு சீனாவின் பெய்ஜிங் நகரம் தான் இந்த பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. தற்போது பெய்ஜிங் நகரம் 91 பில்லினியர்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

ஒட்டுமொத்தமாக சீனாவில் 816 பில்லினியர்களும், இந்தியாவில் 271 பில்லினியர்களும் உள்ளனர். அதே போல உலக அளவில் பணக்காரர்கள் அதிகம் வசிக்கும் நகரங்களில் 119 பில்லினியர்களுடன் அமெரிக்காவின் நியூயார்க் முதலிடத்திலும் 97 பில்லினியர்களுடன் லண்டன் இரண்டாம் இடத்திலும் உள்ளது. உலகளவில் மும்பை மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.
கடந்த ஓராண்டு காலத்தில் மும்பையில் 26 புதிய பணக்காரர்கள் உருவாகியுள்ளனர். இதன் மூலம் கடந்த ஓராண்டு காலத்தில் இங்கே உள்ள பணக்காரர்களின் செல்வம் 445 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. ஓராண்டு காலத்தில் இது 47 % அதிகரித்துள்ளது.
இதுவே பெய்ஜிங் நகரில் உள்ள பணக்காரர்கள் மொத்த செல்வத்தின் மதிப்பு 265 பில்லியன் டாலர்கள் ஆகும். இங்கே பில்லியனர்களின் மொத்த செல்வத்தின் மதிப்பு 28% குறைந்துள்ளது.
மும்பையில் பணக்காரர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு எனர்ஜி மற்றும் மருந்து துறைகளே காரணம் என்றும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. மும்பை சேர்ந்த பணக்காரர்களில் ரியல் எஸ்டேட் அதிபரான மங்கள் பிரபாத் ஸ்லோதா மற்றும் குடும்பத்தினர் சொத்து மதிப்பு கடந்த ஓராண்டு காலத்தில் 116% அதிகரித்துள்ளது .
உலக பணக்காரர்கள் பட்டியலை பொறுத்தவரை ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி தொடர்ந்து பத்தாவது இடத்தில் இருக்கிறார். கௌதம் அதானி சற்றே முன்னேறி 15ஆவது இடத்தில் இருக்கிறார்.
சன் பார்மா நிறுவனத்தின் திலிப் சாங் மற்றும் குமார் மங்கலம் பிர்லா ஆகியோரும் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். ஹெச்சிஎல் நிறுவனத்தின் சிவ நாடார் மற்றும் குடும்பத்தினர் 34ஆவது இடத்தை பிடித்துள்ளனர். சீரம் நிறுவனத்தின் சைரஸ் எஸ் பூனவல்லா 55 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
அதேபோல டி மார்ட் நிறுவனத்தின் ராதாகிஷன் தமாணி எட்டு இடங்கள் முன்னேறி முதல் 100 பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
Story written by: Devika
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications