20 லட்சம் பேரின் வேலை பறிபோகலாம்.. கதறும் மும்பை வாசிகள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையில் செவ்வாய்கிழமையன்று தான் 11-வது கறுப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த அலை மக்கள் மனதில் இருந்து ஓயும் முன்னரே, தற்போது மீண்டும் ஒரு துயர சம்பவம் மும்பை வாசிகளை ஆட்டிப்படைத்து வருகிறது.

மும்பைக்கு அருகிலுள்ள பிவாண்டி பகுதியில் உள்ள, கிட்டதட்ட 62 கிராமங்களில் பரவி இருக்கும் ஜவுளி மற்றும் கிடங்கு மையமானது இது 14 கோடி சதுர அடி பரப்பளவில் உள்ளது.

இங்கு ஆயிரக்கணக்காக தொழில்துறைகள் மற்றும் முக்கிய கார்ப்பரேட்டுகளின் கிடங்குகள், சிறிய அளவிலான சிறு நிறுவனங்கள் என பல உள்ளன. இங்கு சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இங்கு பணி புரிந்து வருகின்றனர்.

சட்ட விரோதமான கட்டிடங்கள்

சட்ட விரோதமான கட்டிடங்கள்

இந்த 62 கிராமங்களில் உள்ள எட்டு இடங்களில் உள்ள சட்ட விரோதமான கட்டிடங்களை இடிக்க, மும்பை பெருநகர பிராந்திய மேம்பாட்டு ஆணையம் (Mumbai Metropolitan Region Development Authority) நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த அதிரடி நடவடிக்கையால் பலர் தங்களது வேலையினை இழந்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் பிவாண்டில் நிஜாம்பூர் நகர மாநகராட்சி மற்றும் மாநில வருவாய் துறை கடந்த வாரம், மும்பை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், விவசாய பண்ணை நிலங்களில் சட்ட விரோதமாக கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தொழிலாளர்கள் போராட்டம்

தொழிலாளர்கள் போராட்டம்

இவ்வாறு சட்டவிரோதமாக கட்டப்பட்ட இந்த கட்டிடங்களை இடிக்க கடந்த மே மாதம் ஒரு கணக்கெடுப்பும் நடத்தப்பட்டது. எனினும் அங்கு பணி புரியும் தொழிலாளர்களும் குடியிருப்பாளர்களும் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், அதிகாரிகள் மீண்டும் திரும்பும் சூழ்நிலை ஏற்பட்டது. இதே போல செவ்வாய்கிழமை நடந்த இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான உள்ளூர் வாசிகள் மற்றும் தொழிலாளர்கள் செவ்வாய் கிழமையன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை அணிவகுத்து சென்றனர்.

பொருட்களை பறிமுதல் செய்யலாம்
 

பொருட்களை பறிமுதல் செய்யலாம்

சட்டவிரோதமாக கட்டப்பட்டிருக்கும் இந்த குடோன்களில் இருக்கும் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்யலாம் என்ற நிலையில், மீண்டும் இப்படி போராட்டம் வெடித்துள்ளதாக கருதப்படுகிறது. இது தவிர இன்று உள்ளூர் போக்குவரத்து சங்கம் பிவாண்டியில் இன்று பந்த் என்றும் அறிவித்துள்ளது.

முன்னனி நிறுவனங்களின் கிடங்குகள்

முன்னனி நிறுவனங்களின் கிடங்குகள்

அமேசான் மற்றும் பிளிப்கார்ட் மற்றும் அனைத்து முக்கிய ஈ காமர்ஸ் நிறுவனங்களும் இந்த பகுதியில் தங்களது பொருள் இருப்பு குடோகளை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இது தவிர மருந்து மற்றும் எஃப்.எம்.சி.ஜி நிறுவனங்கள் பிவாண்டியில் உள்ள தங்களது கிடங்குகளில் தான் இருப்பு வைத்துள்ளதாகவும் கூறியுள்ளன. மேலும் இங்கிருந்து தான் மும்பை மற்றும் புனேவுக்கு தேவையான அனைத்து பொருட்களும் சப்ளை செய்யப்படுவதாகவும் அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

பிவாண்டி பகுதியில் என்னென்ன உள்ளன?

பிவாண்டி பகுதியில் என்னென்ன உள்ளன?

இந்த கிராமங்களில் கட்டப்பட்ட 14 கோடி சதுர அடியில் 75 - 80 சதவிகிதம் கிடங்குகள் என்றும் கூறப்படுகிறது. மீதமுள்ள 20 - 25 சதவிகிதம் மின் தறிகள், பொறியியல், பிரிண்டிங் மற்றும் பேக்கேஜிங் பிரிவுகள் உள்ளது என நினாத் ஜெயவந்த், பிவாண்டியின் தலைவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இது குறித்து சரியானதொரு நடவடிக்கை எடுக்க TSSIA கூட்டம் இன்று கூட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

20 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடம்

20 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடம்

இங்கு கட்டப்பட்ட கட்டிங்களில் பெரும்பாலானவை சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு புற நகர்பகுதிகளுக்கு இடம் பெயர்ந்ததாகக் ஜெயவந்த் கூறியுள்ளார். இதில் ரேமாண்ட் நிறுவனம் 2.5 லட்சம் சதுர அடியிலும், இதே கோத் ரேஜ் 2 லட்சம் சதுர அடியிலும், இதே ஈகாமர்ஸ் நிறுவனமான அமேசான் 10 லட்சம் சதுர அடியிலும் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

வேலை இழப்பு நேரிடலாம்

வேலை இழப்பு நேரிடலாம்

இந்த கட்டிங்கள் இடிக்கப்படும்போது பல ஆயிரம் பேருக்கு அடிப்படை ஆதாரமாக கொண்டிருக்கும் பலர், வேலையை இழக்க நேரிடும் என்று கூறப்படுகிறது. மேலும் இங்குள்ள நிறுவனங்கள் வேறு இடங்களுக்கு புலம்பெயரலாம் என்றும் கருதப்படுகிறது. எப்படியோ இன்று நடக்கவிருக்கும் கூட்டத்தில் இதற்கு சாதகமான முடிவு கிடைத்தால் சரிதான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: mumbai மும்பை
English summary

Mumbai Bhiwandi demolition get around 20 lakh people may lose their job

Mumbai Bhiwandi demolition get around 20 lakh people may lose their job. Reymond, godrej, amazon, flipkart and some other industries running here. if any problem her, those companies are may move other places.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X