இந்தியாவின் சிலிக்கான் வேலியாக இருக்கும் பெங்களூரில் கடந்த சில மாதங்களாக இலவச பஸ் சேவை அறிமுகம் செய்த பின்பும், பைக் டாக்சி சேவை வாயிலாகவும் ஆட்டோக்காரர்கள் அதிகளவிலான வருமானத்தை இழந்து வருகிறார்கள் என்வும், ஒரு ஆட்டோ டிரைவர் வெறும் 50 ரூபாய் சம்பாதித்தாக கூறும் வீடியோ வைரலானது.
ஆனால் இப்போது நிலைமை மிகவும் மோசமாகியுள்ளது என்பது தெரிகிறது, மும்பையை சேர்ந்த ஒரு நிறுவனத்தின் சிஇஓ பெங்களூருக்கு முக்கிய நிகழ்ச்சிக்காக வந்த நிலையில் ஆட்டோ-வில் செல்ல வேண்டிய கட்டயம் உருவானது. பெங்களூர் போன்ற பெரு நகரங்களில் ஆட்டோ மிகவும் முக்கியமான பங்கு விகிக்கிறது, ஆனால் அதிகப்படியான கட்டணம் வசூலிப்பதால் ஆட்டோ ஓட்டுனர்கள் மீதான பார்வை மாறுகிறது.

பெங்களூர்-க்கு வந்த மும்பை நிறுவனத்தின் சிஇஓ ஆட்டோ ஏறினார், வெறும் 500 மீட்டர் மட்டுமே செல்ல வேண்டிய நிலையில் ஆட்டோகாரர் அவரிடம் 100 ரூபாய் வசூலித்துள்ளார். இதில் கடுப்பான அவர் டிவிட்டரில் முக்கியமான பதிவை செய்துள்ளார். NeuralGarage என்னும் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சிஇஓ ஆக இருக்கும் மாந்தர் நடேகர் பெங்களூர் ஆட்டோ பயணம் குறித்து செய்த டிவீட் தற்போது பெரிய அளவில் டிரெண்டாகியுள்ளது.
மாந்தர் நடேகர் தனது டிவீட்டில் இந்த போட்டோவில் நீங்கள் பெங்களூரில் மிகவும் போலியான விஷயத்தை பார்க்க முடியும், ஆம் ஆட்டோ மீட்டர். இது பயன்படுத்தப்படாமல் இருக்கும் காரணத்தால் மிகவும் காஸ்ட்லியான ஒன்றாக உள்ளது. வெரும் 500 மீட்டர் செல்ல 100 ரூபாய் கொடுத்தேன், மும்பையில் இந்த 100 ரூபாய்க்கு தோராயமாக 9 கிலோமீட்டர் பயணிக்கலாம் என PeakBengaluru-வை டேக் செய்துள்ளார்.
மாந்தர் நடேகர் பதிவிட்ட அடுத்த பதிவில் இந்த ஆட்டோக்காரர் வேற லெவல், ஆட்டோவில் மீட்டர் வைக்க கூட இல்லை. இந்த பெங்களூர் டிரைவர்-ஐ கண்டு நான் வியக்கிறேன் என தெரிவித்தார். இவருடைய டிவீட்-க்கு பலர் விமர்சனம் செய்த நிலையில் தனக்கு மருத்தவ ரீதியில் பிரச்சனை இருப்பதால் நீண்ட தூரம் நடக்க முடியாது என விளக்கம் கொடுத்தார் மாந்தர் நடேகர்.
இதை தாண்டி இணைய வாசிகள், பெங்களூர் மற்றும் மும்பை மக்கள் சாலையின் தரம், ஆட்டோ ஓட்டுனர், சட்ட விதிகளை மதிப்பது என பல விஷயங்களில் சண்டை போட ஆரம்பித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications