மும்பை: இந்தியாவின் முன்னணி டாக்சி சேவை நிறுவனங்களில் ஒன்றான உபர் சமீபத்தில் பெங்களூரில் ஆட்டோ சேவைக்கு அதிகப்படியான கட்டணத்தை வசூலித்த காரணமாக ஆட்டோ சேவை 3 நாட்களுக்குத் தடை செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து தற்போது மும்பையில் 4 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தின் மூலம் தொடுக்கப்பட்ட வழக்கிற்குத் தற்போது மும்பை நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
இந்தத் தீர்ப்பில் பாதிக்கப்பட்ட உபர் வாடிக்கையாளரான கவிதா ஷர்மா-வுக்கு ரூ.20,000 தொகையை நஷ்டஈடாக வழங்க உபர் நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இதில் மன உளைச்சலுக்காக உபர் நிறுவனம் ரூ.10,000 மற்றும் புகார்தாரரான கவிதா சர்மாவுக்கு வழக்கு செலவாக ரூ.10,000 செலுத்த வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது.
உண்மையில் என்ன நடந்தது..?
கவிதா ஷர்மா
மும்பை டோம்பிவில் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞராக இருக்கும் கவிதா ஷர்மா, ஜூன் 12, 2018 அன்று மும்பையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் செல்ல திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில் கவிதா ஷர்மா புக் செய்தி விமானத்தைப் பிடிக்க விமான நிலையம் செல்ல வேண்டும்.
உபர் செயலி
இந்த நிலையில் கவிதா ஷர்மா-வின் வீட்டில் இருந்து 36 கிமீ தொலைவில் உள்ள மும்பை விமான நிலையத்திலிருந்து அவருடைய விமானம் மாலை 5:50 மணிக்கு புறப்பட உள்ளது. இதனால் கவிதா ஷர்மா மதியம் 3.29 மணிக்கு உபர் செயலியில் டாக்சி புக் செய்தார்.
தொலைப்பேசி அழைப்பு
கவிதா ஷர்மா புக் செய்த காரின் ஓட்டுநர் 14 நிமிடங்களுக்குப் பிறகு அவரது வீட்டிற்கு வந்தார். இங்கு தான் பிரச்சனை துவங்கியுள்ளது. கவிதா ஷர்மா அளித்த புகாரின் படி, தன்னை அழைத்துச் செல்ல வந்த உபர் ஓட்டுநர் தொலைப்பேசியில் பேசிக்கொண்டு இருந்ததால் காரை இயக்க மறுத்தார். தொலைப்பேசி அழைப்பை முழுமையாக முடித்துவிட்ட பிறகுதான் அவர் பயணத்தைத் தொடங்கினார் எனக் கவிதா ஷர்மா குற்றம் சாட்டினார்.
தவறான பாதை
தனது வீட்டில் இருந்து வெளியேறிய பிறகும், வாகனத்தைச் சரியான வழியில் செலுத்தாமல் தவறான பாதையில் சென்றதால் 15-20 நிமிடங்கள் வீண் ஆனது என்று அவர் குற்றம் சாட்டினார். இறுதியாகக் கவிதா ஷர்மா மாலை 5:23 மணிக்கு விமான நிலையத்தை அடைந்தார்.
தாமதம்
சரியான நேரத்தில் வந்து, சரியான முறையில் கிளம்பி, சரியான பாதையை அந்த உபர் டிரைவர் தேர்வு செய்திருந்தால் கவிதா சர்மா மாலை 5 மணிக்கு முன்னதாக விமான நிலையத்தை அடைந்திருக்க முடியும்.
விமானத்தைத் தவறவிட்ட கவிதா
ஆனால் தாமதமாக வந்த காரணத்தால் அவர் புக் செய்த விமானத்தைத் தவறவிட்டார், அதனால் அடுத்த விமானத்தில் சென்னை சென்றதாக வழக்கறிஞராக இருக்கும் கவிதா ஷர்மா வழக்குத் தொடுத்தார்.
வழக்கு
இதன் பின்னர் வழக்கறிஞர் கவிதா ஷர்மா தானே-வில் கூடுதல் மாவட்ட நுகர்வோர் பிரச்சனைகளைத் தீர்க்கும் ஆணையத்தை நாடினார், உபர் ஓட்டுநரின் கவனக்குறைவு மற்றும் தொழில்முறையின்மை மட்டும் தான் அவரது விமானத்தைத் தவறவிட்டதற்குக் காரணம் என்று குற்றம் சாட்டினார். அதற்கு முன்பு கவிதா ஷர்மா உபர் நிறுவனத்திற்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியிருந்தார், ஆனால் அதற்கு எவ்விதமான பதிலும் கிடைக்கவில்லை.
கூடுதல் கட்டணம்
கவிதா ஷர்மா அவருடைய வழக்கில் பயணத்தின் தொடக்கத்தில் மதிப்பிடப்பட்டதை விட இப்பயணத்திற்கான பில் அதிகமாக இருப்பதாகவும் புகார் அளித்திருந்தார். அதிகக் கட்டணம் வசூலித்தது குறித்து அவர் ட்விட்டர் மூலம் புகார் அளித்தபோது, உபர் நிறுவனம் 139 ரூபாய் அளவிலான தொகையைத் திருப்பி அளித்ததுள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications