முரட்டு விருந்து.. திருமண வரவேற்பிற்கு ரூ.8 லட்சத்துக்கு விஸ்கி ஆர்டர்.. கலக்கும் தம்பதிகள்!

மும்பை: திருமண விருந்து என்றாலே அங்கு மது என்ற ஒரு விருந்து இல்லாமல் இருக்காது. அந்த வகையில் மும்பையை சேர்ந்த உடித் மற்றும் சைலி தம்பதியினர் தங்களது திருமண நாளை தாங்கள் மட்டும் அல்ல, அதை திருமணத்திற்கு வரும் யாரும் மறக்க கூடாது என்று நினைத்துள்ளனராம்.

மேலும் தங்களது திருமணம் தனித்துவமானதாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனராம்.

இதற்காக இந்த தம்பதியினர் 10,000 டாலர் மதிப்பிலான (இது தவிர கூடுதலாக வரி) Jack Daniel's whiskeyயை ஆர்டர் செய்துள்ளனராம்.

சுவை

சுவை

இதன் இன்றைய இந்திய மதிப்பு சுமார் 8 லட்சம் ரூபாயாம். அதிலும் தங்களது திருமண விழாவிற்கு என்று தனித்துவமான சுவைகளுடன் பேரலில் ஆர்டர் செய்துள்ளனராம். வரவிருக்கும் நவம்பர் 14ம் தேதி அவர்களது திருமணம் என்ற நிலையில், இந்த பேரலில் 200 - 225 பாட்டில்காள் பிரத்தியேக விஸ்கியை கொண்டுள்ளதாகவும் இருக்குமாம்.

திருமணத்திற்கு வருபவர்களுக்கு பரிசு

திருமணத்திற்கு வருபவர்களுக்கு பரிசு

அதிலும் இவை ஒவ்வொன்றும் தனித்துவமான சுவையுடன், சுவை விவரங்களுடனும், வேறு வேறு சுவைகளுடன் வருகிறதாம். இந்த பாட்டில்கள் ஒவ்வொன்றும் தங்களது திருமணத்திற்கு வரவிருக்கும் ஒவ்வொருவருக்கும் பரிசாக வழங்க இருப்பதாகவும் கூறியுள்ளனர் அந்த தம்பதிகள். மேலும் இந்த பாட்டில்கள் இது தவிர திருமணத்திற்கு முன்பு கொண்டாடப்படும் அனைத்து விழாக்களிலும் கொண்டாடப்படும் என்றும் கூறியுள்ளனர்.

பேரலாக ஆர்சர் செய்த முதல் தம்பதி

பேரலாக ஆர்சர் செய்த முதல் தம்பதி

இதில் முக்கியமான விஷயம் என்னெவனில் முதல் முதலாக தனிப்பட்ட இப்படி ஐடியாவை தேர்தெடுத்த தம்பதிகள் என்றும், அதிலும் ஜாக் டேனியலை தேர்தெடுத்திருப்பது, அதிலும் பேரலாக ஆர்டர் செய்த முதல் தம்பதிகள் இவர்கள் தான் என்றும் கூறப்படுகிறது. மேலும் இதற்காக உடித்தின் வீட்டில் தனி அறையும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

தனிப்பட்ட அனுபவம்

தனிப்பட்ட அனுபவம்

மேலும் இந்த திட்டம் ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட அனுபவத்தை வழங்குவதாக அவர்கள் கூறுகின்றனர். இந்த பேரலை அவர்கள் தேர்தெடுக்க பல்வேறு வழிகளைக் கொண்டுள்ளனர். ஒன்றும் இதில் உள்ள சுயவிவரங்களின் அடிப்படையில் மாதிரிகளைப் பெறலாம் அல்லது அவர்கள் இல்லையெனில் லிஞ்ச்பர்க்கில் உள்ள டிஸ்டில்லரிக்குச் சென்று மாஸ்டர் டிஸ்டில்லர் அல்லது டேஸ்டர்களின் குழுவின் உதவியுடன் தங்கள் பீப்பாயைத் தேர்தெடுக்கலாம்.

பட்டில்களிலும் வித்தியாசம்

பட்டில்களிலும் வித்தியாசம்

இது தவிர இந்த ஜாக் டேனியல் நிறுவனம் ஆடம்பரமான டிகாண்டர் மற்றும் கண்ணாடி பொருட்கள் உள்ளிட்ட ஒவ்வொரு சேகரிப்பு தேர்விலும் அனுபவமிக்க பிரிமீயம் வசூல் மற்றும் அனுபவங்களை ஜாக் டேனியல்ஸ் உருவாக்கியுள்ளதாம். மேலும் கூடுதலாக இந்த விஸ்கியை வாங்குபவர்கள் அவர்களது பெயர் பதிக்கப்பட்ட பாட்டிலையும் பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+