பணம் என்பது ஒரு மனிதனின் தேவைக்கு அடிப்படையான விஷயம். அப்பணத்தை நாம் சம்பாதிக்க கடினமாக உழைக்க வேண்டும். ஆனால் பலர் உழைக்காமல் எளிதாக பணம் சம்பாதிக்க பல வழிகளை கண்டுபிடிக்கின்றனர். சிலர் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி பண மோசடி சம்பவங்களை செய்கின்றனர். இது போன்ற பண மோசடிகள் தற்போது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஒரு குடும்பம் இன்சூரன்ஸ் நிறுவனங்களை குறிவைத்து பல லட்சம் ரூபாயை ஏமாற்றி உள்ளது.
ஒரு பெண், அவருடைய கணவர், மகன் மேலும் ஒரு மருத்துவர் இணைந்து, ஒரு திட்டத்தை வகுத்து பல இன்சூரன்ஸ் நிறுவனங்களை ஏமாற்றி ரூ.1 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்துள்ளனர். இவர்கள் சுமார் 4 தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களை ஏமாற்றியுள்ளனர்.

போலீசார் பதிவு செய்த FIR-இன் படி, மும்பையின் பயந்தர் பகுதியை சேர்ந்த பெண், காஞ்சன் பாய் மற்றும் பவித்ரா ஆகிய இரண்டு பெயர்களை பயன்படுத்தி 4 இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் இருந்து காப்பீட்டு பாலிசியை வாங்கியுள்ளார். அவர் வாங்கிய மொத்த காப்பீட்டின் தொகை சுமார் 1.1 கோடி ரூபாய். இந்த காப்பீட்டு மோசடி சம்பவத்தில் காஞ்சன், அவரது மகன் தன்ராஜ் பாய், அவரது கணவர் ரோஹித் பாய், அசுதோஷ் யாதவ் என்ற மருத்துவர் ஆகியோரும் ஈடுபட்டுள்ளனர்.
காப்பீட்டைப் பெற்ற பிறகு, அந்தப் பெண் இறந்து விட்டதாக குடும்பத்தினர் அறிவித்து காப்பீட்டு கோரிக்கையை விண்ணப்பித்தனர். அவர்கள் போலியான இறப்புச் சான்றிதழ் மற்றும் போலி ஆவணங்களை சமர்ப்பித்து இன்சூரன்ஸ்க்கான பணத்தை கேட்டுள்ளனர். சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து ஆவணங்களும் போலியானது என்று கண்டறியப்பட்ட பின்னர் அந்தந்த இன்சூரன்ஸ் நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட குடும்பத்தின் மீது பூகார் அளித்துள்ளனர்.
அந்த 4 இன்சூரன்ஸ் நிறுவனங்களின் புகார்களின் அடிப்படையில், அவர்கள் மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட அந்த 4 பேரும் தற்பொழுது தலைமறைவாக உள்ளனர். மோசடி செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர். 2021-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு வரையில், காஞ்சன் பாய் மற்றும் பவித்ரா என்ற பெயரில் பெற்ற பாலிசியை கிளைம் செய்யும் வகையில் ICICI ப்ரூடென்ஷியல், மேக்ஸ் லைஃப், பார்தி AXA, HDFC & பியூச்சர் ஜெனரலி ஆகிய இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம், அந்த குடும்பம் ரூ. 70 லட்சத்தை பெற்றுள்ளது. இதற்கிடையில், ரூ.41 லட்சத்திற்கான மற்றொரு கோரிக்கை இன்னும் செயல்முறையில் உள்ளது.
ஒரு நிறுவனம், ரூ. 41 லட்சம் இன்சூரன்ஸ் பெற விண்ணப்பித்த போது, சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் சில முரண்பாடுகளை கண்டறிந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்நிறுவனம் விசாரணை நடத்த முடிவு செய்தது. பின்னர், இதன் முன் கொடுக்கப்பட்ட விண்ணப்ப ஆவணங்களை ஆய்வு செய்துள்ளனர். இரண்டு பெயரில் பதிவாகி இருந்த விண்ணப்பத்தில் உள்ள நபர்களின் இறப்பு சான்றிதழ் ஒரே மருத்துவரிடமிருந்து வெவ்வேறு தேதிகளில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கண்டறிந்தனர். மேலும் விசாரணை செய்ததில் இவர்கள் மோசடி செய்துள்ளது தெரியவந்தது. போலீசார் இவர்களை தொடர்ந்து தேடி வருகின்றனர்.
மேற்கூறிய சம்பவம் நம்மை சிந்திக்க வைக்கிறது. காப்பீடு என்பது நமது எதிர்காலத்திற்கான முதலீடு. எனவே, நம்பகமான நிறுவனங்களிடம் சரியான தகவல்களுடன் காப்பீடு எடுப்பது அவசியம். அதே நேரம், காப்பீட்டு நிறுவனங்களும் தங்கள் சரிபார்ப்பு நடைமுறைகளை மேம்படுத்தி, இதுபோன்ற மோசடிகளைத் தடுக்க வேண்டும்.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications