சமீபத்தில் ஒரு பயனர் தனது X பக்கத்தில் வேலை வாய்ப்பு விளம்பரத்தின் ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்திருந்தார். அந்த ஸ்கிரீன்ஷாட்டில் கூறப்பட்டிருந்தது தான் பார்ப்போரை அதிர்ச்சிக்கு உள்ளாகியது. ஏனெனில் அந்த விளம்பரத்தில், வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிப்பவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதை பொறுத்துதான் முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
ஸ்கிரீன் ஷாட்டில் தெற்கு பகுதியை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் வேண்டாம் என்று எழுதியிருந்தார்கள். மும்பையில் உள்ள விக்ரொலி என்ற இடத்தில் இருக்கும் அலுவலகத்திற்கு இரண்டு டெக்னீசியன்கள் தேவைப்படுவதாகவும் கூறப்பட்டிருந்தது. அதோடு குறைந்தது 2 வருட அனுபவம் இருக்க வேண்டும் என்றும் உடனே வேலைக்கு சேர தயாராக இருக்க வேண்டும் என்றும் தெள்ளத்தெளிவாக கொடுக்கப்பட்டிருந்தது.

அதோடு அலுவலகத்திற்கு வந்து வேலை செய்ய வேண்டும் என்றும், வேலைக்கு ஆண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே தேவை. தென்பகுதியைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் தேவையில்லை என்றும் கூறப்பட்டிருந்தது. வேலைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு என்னென்ன தகுதி இருக்க வேண்டும் என்றும் விளம்பரத்தில் தெளிவாக கொடுத்திருந்தார்கள். உங்களுக்கு இந்த தகுதிகள் இருந்து எங்களுடைய டீமில் சேர்ந்து பணியாற்ற தயாராக இருந்தால் விண்ணப்பியுங்கள்! என்றும் அந்த விளம்பரத்தின் கடைசி வரியில் கூறப்பட்டிருந்தது.
அதே X பயனர். வேலைவாய்ப்பு விளம்பரத்தை பார்த்துவிட்டு அந்நிறுவனத்தை சாடிய ஒரு நபரின் ஈ-மெயிலையும் பகிர்ந்திருந்தார். அந்த மெயிலை அனுப்பியவர் வேலை வாய்ப்பு விளம்பரத்தை பார்த்து கோபமாகி நிறுவனத்தை கடுமையாக விமர்சித்து எழுதியிருந்தார். அவருடைய வார்த்தைகள் அனைத்தும் கடுமையானதாக இருந்தன.
அதில் அந்த நபர், "நான் வேலை வாய்ப்பு விளம்பரத்தை பார்க்கும் போது தெற்கு பகுதியை சேர்ந்தவர்கள் தேவையில்லை என்று போட்டிருந்தார்கள். உங்களைப் போல நார்த் இந்திய நிறுவனங்களில் சேர்ந்து நாய்கள் போல உழைப்பவர்கள் அல்ல நாங்கள் என்று கூறியிருந்தார். அந்த நபரின் வார்த்தைகள் அனைத்தும் வட இந்தியர்களை கடுமையாக சாடும் வகையில் இருந்தது. வட இந்தியர்கள் அங்குள்ள நிறுவனங்களில் வேலை செய்வதை தங்கள் சொந்த நிறுவனமாக நினைத்துக் கொண்டு நடந்து கொள்கின்றனர் என்றும் குற்றம் சாட்டியிருந்தார். கடைசியாக அந்த மெயிலை அனுப்பியவர் தன் பெயருக்கு பதிலாக பான் இந்தியா என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த போஸ்டுக்கு பலரும் தங்களுடைய கமெண்ட்ஸ்களை தெரிவிக்க தொடங்கினர். ஏன் உங்கள் ஆட்கள் யாரும் மற்ற மாநிலங்களுக்கு போய் வேலை செய்யவில்லையா? இது என்ன இரட்டை வேடம்? என்று ஒருவர் கேள்வி கேட்டிருந்தார். மற்றொரு பயனரோ டெக்னாலஜி தொடர்பான வேலைவாய்ப்புக்கு ஏன் இந்த பாகுபாடு? என்று கேள்வி கேட்டிருந்தார். நீங்கள் அனுப்பிய மெயிலுக்கு பதில் கிடைத்ததா? இதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன் என்று ஒருவர் எழுதியிருந்தார். இன்னொரு நபர் தென்பகுதியைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் தேவையில்லை என்பது தென்னிந்தியாவை குறிக்கிறதா? அல்லது தெற்கு மும்பையை குறிக்கிறதா? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.


Click it and Unblock the Notifications