சதுர அடிக்கு ரூ.1 லட்சம் கொடுத்தாலும் உங்க கார் வெள்ளத்துல தான் மிதக்கும் – இயக்குநர் கொந்தளிப்பு..

மும்பை: இந்தியாவில் மும்பை ,டெல்லி, சென்னை ,பெங்களூர் உள்ளிட்ட நகரங்கள் எல்லாம் பொருளாதார ரீதியாக பெரிய அளவில் வளர்ச்சி பெற்றிருக்கின்றன. பல்வேறு சர்வதேச நிறுவனங்களும் தொழில் தொடங்குவதற்காக இந்த நகரங்களை நோக்கி வருகின்றன. வேலைவாய்ப்பு தேடி நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் இந்த நகரங்களை நோக்கி வந்த வண்ணம் இருக்கின்றனர்.

ஆனால் ஒரு நாள் மழை வந்தால் கூட இந்த நகரங்களால் தாக்கு பிடிக்க முடிவதில்லை. மும்பையில் பருவமழை தொடங்கிய முதல் நாளிலேயே கனமழை கொட்டி தீர்த்தது. இதன் விளைவாக பல்வேறு இடங்களிலும் சாலைகளில் மழைநீர் தேங்கி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர் . மும்பையில் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் அதனால் தங்களுக்கு ஏற்பட்ட சிரமங்கள் குறித்து பலரும் தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்ட வண்ணம் இருக்கின்றனர்.

சதுர அடிக்கு ரூ.1 லட்சம் கொடுத்தாலும் உங்க கார் வெள்ளத்துல தான் மிதக்கும் – இயக்குநர் கொந்தளிப்பு..

அந்த வகையில் காஷ்மீர் ஃபைல்ஸ் உள்ளிட்ட படங்களின் இயக்குனரான விவேக் ரஞ்சன் அக்னிகோத்ரி , "மழை பெய்தால் மும்பை நகரம் எப்படி இருக்கிறது பாருங்கள்" என்ற அவல நிலையை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தங்கள் குடியிருப்புக்கு அருகில் இருக்கக்கூடிய பெட்டார் சாலை மற்றும் லீபியன் கடல் சாலை உள்ளிட்டவற்றில் எப்படி மழை நீர் தேங்கி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி இருக்கின்றனர் என்பதை விவரிக்கும் வகையிலான ஒரு வீடியோவை பதிவு செய்திருக்கிறார்.

மும்பையின் ஆடம்பர பகுதியாக காணப்படும் பெட்டார் சாலையின் நிலைமை இதுதான் பாருங்கள் எனக் கூறியிருக்கிறார். இங்கே நீங்கள் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து ஒரு சதுர அடி நிலம் வாங்கினாலும் மழை பெய்தால் உங்கள் கார் மழை நீரில் தான் மிதக்கும் என்பதே உண்மை என கூறியுள்ளார். உலகத் தரத்தில் ரியல் எஸ்டேட் விலை இருக்கிறது ஆனால் மழைநீர் வடிகால் வசதி மூன்றாம் உலக தரத்தில் இருக்கிறது மழை நீர் பாய்ந்தோடுவதை கண்டு ரசிக்கும் வகையிலான வீடு வேண்டுமா மும்பையில் கிடைக்கும் என நக்கலாக பதிவு செய்துள்ளது.

இந்தியாவின் பெரும்பணக்காரர்கள் தங்கி இருக்கக்கூடிய நேபியன் கடல் சாலை ஒரு நாள் மழைக்கே இப்படி மிதக்கிறது என மற்றொரு பதிவில் அவர் வெளியிட்டு இருக்கிறார். டெல்லி, பெங்களூரு மற்றும் பிற இந்திய நகரங்களின் நிலவரம் இதுதான் எனக் கூறியிருக்கும் அவர் இந்தியாவில் பரிதாபகரமான நகரமயமாக்கல் இதுதான், இங்கே நகரமயமாக்கல் என்பது ஒரு மோசடி என அவர் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

அவருடைய இந்த பதிவுக்கு மும்பை வாழ் மக்கள் பலரும் தங்களுடைய ஆதரவை தெரிவித்து இருக்கின்றனர், மத்திய அரசு பெருநகரங்களில் வடிகால் வசதிகளை மேம்படுத்த வேண்டிய நேரம் இது என ஒரு பயனர் தெரிவித்திருக்கிறார். ஒரு சிலர் ஒரே நாளில் அதிகபட்ச மழை பெய்தது இந்த நிலைமைக்கு காரணம் என கூறி இருக்கின்றனர். இந்த ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் 35 ஆண்டுகளில் இல்லாத அளவு முன்கூட்டியே பருவமழை தொடங்கி விட்டது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+