கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு மும்பையில் புதிய ரயில் டெர்மினல் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. மும்பையில் ரயில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் புதிதாக டெர்மினல் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாளாக முன் வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் மும்பை மக்களுக்கு ஒரு நற்செய்தி வந்துள்ளது. ஜோகேஸ்வரி ரயில் டெர்மினல் கட்டப்பட்டு இந்த ஆண்டுக்குள்ளே பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. மும்பையில் 1991 ஆம் ஆண்டு லோக்மானிய திலக் டெர்மினல் கட்டப்பட்டது. அதன் பின்னர் 30 ஆண்டுகள் கழித்து மும்பையில் புதிய ரயில் டெர்மினல் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

ஜோகேஸ்வரி டெர்மினஸ் என அழைக்கப்படும் இந்த ரயில் டெர்மினல் ராம் மந்திர் புறநகர் ரயில் நிலையத்திற்கு அருகே அமைந்திருக்கிறது. 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் இதன் கட்டுமான பணிகள் முழுமை பெற்று இது பயன்பாட்டுக்கு வந்துவிடும் என சொல்லப்படுகிறது. மும்பையில் தற்போது செயல்பட்டு வரும் தாதர் , பாந்த்ரா மற்றும் மும்பை சென்ட்ரல் ஆகிய டெர்மினல்களில் நாளுக்கு நாள் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் இங்கே பணிச்சுமை அதிகரித்துவிட்டது.
எனவே ஜோகேஸ்வரி டெர்மினல் இந்த பணிச்சுமையை குறைக்கும் என நம்பப்படுகிறது. ஜோகேஸ்வரி டெர்மினலுக்காக 76.84 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மூன்று பிளாட்பார்ம்கள் கொண்டதாக இந்த டெர்மினல் இருக்கும் என்றும் முதல் கட்ட கட்டுமான பணியில் இரண்டாவது மற்றும் மூன்றாவது பிளாட்பார்ம்கள் கட்டும் பணிகள் நடைபெற்று இருப்பதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
ராம் மந்திர் ரயில் நிலையத்திற்கு செல்வதற்காக ஆறு மீட்டர் அகலம் கொண்ட நடை மேம்பாலம் கட்டப்பட்டிருக்கிறது, இதில் லிப்ட் வசதியும் ஏற்படுத்தி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தவிர அனைத்து பிளாட்பார்ம்களுடன் இணைக்கும் வகையில் 12 மீட்டர் அகலம் கொண்ட நடை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது . 24 பெட்டிகள் கொண்ட ரயில்களை கையாளும் திறன் கொண்டதாக இந்த டெர்மினல் இருக்கும்.
பயணிகளுக்கு தேவையான கழிவறை, மொபைல் சார்ஜிங் வசதி மற்றும் உணவகங்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன. தங்குமிடங்களும் இத்துடன் கட்டப்பட்டிருக்கிறது. வாகனங்கள் நிறுத்தும் இடங்கள், வாடகை வாகனங்களின் பிக்கப் மற்றும் டிராப் பாயிண்ட்டுகளும் கட்டப்பட்டுள்ளன. மும்பையில் ரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் ஜோகேஸ்வரி டெர்மினல் ரயில் இணைப்பை மேலும் எளிமையாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் அக்டோபர் மாதத்திலேயே இந்த ரயில் டெர்மினல் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications