இந்திய பெண் சுஷ்மிதா சுக்லா நியூயார்க் பெடரல் ரிசர்வ்-ன் முதல் சிஓஓ ஆனார்.. யார் இவர்..?!

அமெரிக்காவின் நியூயார்க் பெடரல் ரிசர்வ் வங்கி-யின், முதல் துணைத் தலைவர் மற்றும் தலைமை இயக்க அதிகாரியாக (COO) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுஷ்மிதா சுக்லா நியமிக்கப்பட்டு உள்ளார்.

இதன் மூலம் நியூயார்க்கின் ஃபெடரல் ரிசர்வ் வங்கியில் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஜான் சி வில்லியம்ஸுக்குப் பிறகு இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். மார்ச் 2023 முதல் சுஷ்மிதா சுக்லா-வின் துணைத் தலைவர் மற்றும் தலைமை இயக்க அதிகாரியாக (COO) பதவியில் பணியாற்ற உள்ளார்.

இந்த நியமனத்திற்குப் பெடரல் ரிசர்வ் அமைப்பின் ஆளுநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

 நியூயார்க் பெடரல் ரிசர்வ் வங்கி

நியூயார்க் பெடரல் ரிசர்வ் வங்கி

நியூயார்க் பெடரல் ரிசர்வ் வங்கி-யின், முதல் துணைத் தலைவர் மற்றும் தலைமை இயக்க அதிகாரியாக (COO) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுஷ்மிதா சுக்லா நியமிக்கப்பட்டு உள்ளார். இதோடு நியூயார்க் மத்திய வங்கியின் இரண்டாவது உயர் அதிகாரியாக இருப்பார் என நியூயார்க் பெடரல் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 சுஷ்மிதா சுக்லா

சுஷ்மிதா சுக்லா

நியூயார்க் பெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுடன் சேர்ந்து, சுஷ்மிதா சுக்லா இவ்வமைப்பின் மூலோபாயத் திசையை நிறுவி, செயல்படுத்துவார். இதோடு சுஷ்மிதா சுக்லா பெடரல் ஓபன் மார்க்கெட் கமிட்டியின் மாற்று வாக்களிக்கும் உறுப்பினராகவும் பணியாற்றுவார்.

 யார் இந்தச் சுஷ்மிதா சுக்லா..?

யார் இந்தச் சுஷ்மிதா சுக்லா..?

ஜனவரி 2018 முதல், சுஷ்மிதா சுக்லா நியூயார்க் நகரை தலைமையிடமாகக் கொண்டு உலகின் மிகப்பெரிய சொத்து மற்றும் விபத்து காப்பீட்டு நிறுவனமான Chub-ல் பணியாற்றி வருகிறார். அவர் Chub நிறுவனத்தில் சர்வதேச விபத்து மற்றும் ஆரோக்கியப் பிரிவுக்கான மூத்த துணைத் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார்.

 51 நாடுகள்

51 நாடுகள்

சுஷ்மிதா சுக்லா சுமார் 51 நாடுகளில் Chub நிறுவனத்தின் வாயிலாக மூலோபாயத் திட்டங்கள், செயல்பாடுகள் மற்றும் உரிமைகோரல் தொழில்நுட்பத்தை வழிநடத்தியுள்ளார்.

 Healthfirst நிறுவனம்

Healthfirst நிறுவனம்

சுக்லா இதற்கு முன்பு Healthfirst என்னும் நிறுவனத்தில் பணிபுரிந்தார், அங்கு அவர் 2016 இல் எண்டர்பிரைஸ் பிசினஸ் சொல்யூஷன்ஸின் துணைத் தலைவராகத் பணியைத் தொடங்கினார். பின்னர் 2017 இல் அவர் Enterprise Transformation பிரிவின் இடைக்கால மூத்த துணைத் தலைவராகப் பணியாற்றினார்.

 முக்கிய நிறுவனம்

முக்கிய நிறுவனம்

இதற்கு முன்பு The Hartfordல் 10 வருடம், Merrill Lynch, Liberty Mutual, மற்றும் GiantBear Inc ஆகிய நிறுவனத்தில் பணியாற்றினார்.

 மும்பை டூ அமெரிக்கா

மும்பை டூ அமெரிக்கா

சுஷ்மிதா சுக்லா நியூயார்க் பல்கலைக்கழகத்தில் நிதி மற்றும் நிர்வாகப் பிரிவில் எம்பிஏ முடித்துள்ளார் மற்றும் மும்பை பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்.

 ஜான் சி வில்லியம்ஸ்

ஜான் சி வில்லியம்ஸ்

சுஷ்மிதா ஒரு ஆற்றல்மிக்க, ஊக்கமளிக்கும் மற்றும் மிகவும் சிறப்பாகப் பணியாற்ற கூடிய தலைவர் ஆவார், அவருடைய விரிவான அனுபவத்தை வங்கிக்கு பெரிய அளவில் நன்மை அளிக்கக் கூடியதாக இருக்கும் என்று நியூயார்க் மத்திய வங்கியின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜான் சி வில்லியம்ஸ் கூறினார்.

 பெருமைப்படும் சுஷ்மிதா சுக்லா

பெருமைப்படும் சுஷ்மிதா சுக்லா

சுஷ்மிதா சுக்லா தொழில்நுட்பம் மற்றும் அஜைல் இன்னோவேஷன் முறைகள் பற்றிய ஆழமான அறிவைக் கொண்டுள்ளார் என நியூயார்க் மத்திய வங்கியின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜான் சி வில்லியம்ஸ் கூறினார். மேலும் நியூயார்க் ஃபெட் போன்ற அமைப்பில் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றதற்கு நான் பெருமைப்படுகிறேன் என்று சுஷ்மிதா சுக்லா கூறினார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+