மும்பை: இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்களான ஐஐடிகளில் நடப்பு ஆண்டில் படிப்பை முடித்த பெரும்பாலான மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் ஐஐடி மும்பையில் நடப்பு ஆண்டில் படிப்பை முடித்த மாணவர்களுக்கு கேம்பஸ் பிளேஸ்மெண்ட் மூலம் சராசரி ஆண்டு ஊதியம் 23.5 லட்சம் ரூபாயில் வேலை வாய்ப்பு கிடைத்திருப்பது தெரிய வந்துள்ளது.
ஐஐடி மும்பை கல்லூரி மாணவர்கள் 1 கோடி ரூபாய் ஆண்டு ஊதியத்தில் தொடங்கி குறைந்தபட்சம் 4 லட்சம் ரூபாய் ஆண்டு ஊதியம் வரை வேலைக்கு தேர்வாகியுள்ளனர். ஐஐடி மும்பையில் மாணவர்கள் இவ்வளவு குறைந்த ஆண்டு ஊதியத்தில் வேலை பெறுவது இது முதல் முறையாகும். ஐஐடி மும்பை கல்லூரியில் பட்டம் பெற்று முடிந்த மாணவர்களில் சுமார் 10 பேர் 4 லட்சம் முதல் 6 லட்சம் ரூபாய் வரையிலான ஆண்டு ஊதியத்தில் வேலை வாய்ப்பினை ஏற்றுக் கொண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சராசரியாக மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊதிய தொகுப்பு 7.7 சதவீதம் அதிகரித்து இருந்தாலும் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலை வாய்ப்பை பெறும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. நடப்பாண்டில் படிப்பை முடித்த சுமார் 75% பேர் வேலைவாய்ப்பு பெற்றனர் என ஐஐடி மும்பை அறிக்கை வெளியிட்டுள்ளது. சுமார் 123 நிறுவனங்கள் ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாய்க்கு மேல் 558 மாணவர்களுக்கு ஆஃபர் லெட்டர்களை வழங்கியுள்ளன.
ஐஐடி மும்பையில் நடப்பாண்டில் படிப்பை முடித்த மாணவர்களில் 1979 பேர் கேம்பஸ் இன்டர்வியூவில் கலந்து கொண்டனர். இவர்களில் 1475 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 72 பேர் சர்வதேச நிறுவனங்களில் வேலைவாய்ப்பினை பெற்றுள்ளனர்.
22 பேர் 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான ஆண்டு ஊதியம் ஊதியத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளனர். 558 மாணவர்கள் ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான ஊதிய தொகுப்பில் வேலை வாய்ப்பை பெற்றனர். 230 பேர் 16 முதல் 20 லட்சம் ரூபாய் வரையிலான ஆண்டு ஊதியத்தில் வேலை பெற்றுள்ளனர். 10 மாணவர்கள் 4 முதல் 6 லட்சம் ரூபாய் வரையிலான ஆண்டு ஊதியத்திற்கு வேலைவாய்ப்பினை பெற்றுள்ளனர்.
இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி பிரிவினை சேர்ந்த நிறுவனங்கள் சுமார் 400க்கும் அதிகமான மாணவர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கியுள்ளன. கோர் இன்ஜினியரிங் நிறுவனங்கள் 160 பேருக்கு வேலை வாய்ப்பினை வழங்கியுள்ளன. அடுத்ததாக டிரேடிங் ,பேங்கிங் மற்றும் ஃபின்டெக் நிறுவனங்கள், செயற்கை நுண்ணறிவு , மிஷின்லெர்னிங், டேட்டா சயின்ஸ் உள்ளிட்ட துறைகளில் செயல்படும் நிறுவனங்களும் அதிக எண்ணிக்கையில் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கியுள்ளன.
Story written by: Devika


Click it and Unblock the Notifications