IPL-MI VS LSG: சாதிக்குமா மும்பை இந்தியன்ஸ்? 19000 ஆதரவற்ற குழந்தைகள் கண்டுகளிக்கும் போட்டி.!!

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025ன் ஒரு பகுதியாக, மும்பை இந்தியன்ஸ் அணி ஏப்ரல் 27ஆம் தேதி ஆன இன்று ஞாயிற்றுக்கிழமை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வான்கடே மைதானத்தில் எதிர்கொண்டு விளையாடி வருகிறது. இந்த போட்டி வழக்கமான கிரிக்கெட் போட்டியாக மட்டுமல்லாமல், ஒரு உன்னதமான நோக்கத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

நீதா அம்பானியின் கல்வி மற்றும் விளையாட்டுக்கான அனைவருக்குமான (ESA - Education and Sports for All) முயற்சியின் ஒரு அங்கமாக, மும்பை நகரின் பல்வேறு அரசு சாரா நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 19,000 ஆதரவற்ற குழந்தைகள் இந்த ஆட்டத்தை நேரலையில் பார்த்து வருகின்றனர். இதில், 200க்கும் மேற்பட்ட சிறப்புக் குழந்தைகளும் அடங்குவர். மும்பை இந்தியன்ஸ் அணியின் நீல மற்றும் தங்க நிறங்களால் மைதானம் நிரம்பி வழியும் இந்த நிகழ்வு, பல குழந்தைகளுக்கு அவர்களின் வாழ்நாளில் மறக்க முடியாத முதல் நேரடி கிரிக்கெட் அனுபவமாக இருக்கும்.

IPL-MI VS LSG: சாதிக்குமா மும்பை இந்தியன்ஸ்? 19000 ஆதரவற்ற குழந்தைகள் கண்டுகளிக்கும் போட்டி.!!

இந்த சிறப்பு போட்டிக்கு முன்னதாக, அணியின் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் வீரர்களிடம் பேசிய நீதா அம்பானி, இந்த ஆட்டம் அவர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்த்தினார். பின்தங்கிய குழந்தைகள் நம்மைப் பார்க்க வருகிறார்கள் அந்தச் சூழ்நிலையின் ஆற்றல் மிகவும் சிறப்பானது. எனவே, அவர்களுக்காக உங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள். இந்தப் போட்டியைப் பார்க்க அவர்கள் பல ஆண்டுகளாகக் காத்திருக்கிறார்கள் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

முந்தைய ESA தினத்தின் ஒரு உருக்கமான சம்பவத்தை நினைவுகூர்ந்த நீதா அம்பானி, ஒரு சிறுமி தனக்கு வழங்கப்பட்ட உணவை முழுமையாக உண்ணாமல் இருந்ததையும், தனது சகோதரனுக்காக அதை எடுத்துச் செல்வதாகக் கூறியதையும் குறிப்பிட்டார். ஏனெனில், அவரது சகோதரர் இதுவரை கேக் சுவைத்ததே இல்லை. இதுபோன்ற விஷயங்களைத்தான் தாங்கள் ஆதரிக்க விரும்புவதாகவும், பல்வேறு பின்னணியில் இருந்து வந்திருந்தாலும், இந்தக் குழந்தைகள் தங்களது கனவுகளை அடைய முடியும் என்பதை ஊக்குவிப்பதே ESAவின் முக்கிய நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.

2010ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ESA initiative, ரிலையன்ஸ் அறக்கட்டளை மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையேயான ஒரு கூட்டு முயற்சியாகும். இது அனைத்துப் பின்னணியிலிருந்தும் வரும் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் விளையாட்டை எளிதாக அணுகுவதை உறுதி செய்வதையும், இளம் மனங்களுக்கு ஊக்கமளிப்பதையும், அவர்களின் லட்சியங்களைத் தூண்டுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒவ்வொரு ஐபிஎல் சீசனிலும், மும்பை இந்தியன்ஸ் அணி இந்த நோக்கத்திற்காக ஒரு போட்டியை அர்ப்பணித்து வருகிறது. இதன் மூலம், ஆயிரக்கணக்கான ஏழைக்குழந்தைகள் நேரடி கிரிக்கெட் போட்டியின் உற்சாகத்தை அனுபவிக்கும் வாய்ப்பைப் பெறுவதோடு, கல்வி மற்றும் விளையாட்டின் முக்கியத்துவத்தையும் உணர்கிறார்கள்.

வருடாந்திர ஐபிஎல் போட்டியைத் தாண்டி, ESA initiative ஆண்டு முழுவதும் பல்வேறு செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம், பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு கல்வி, விளையாட்டு மற்றும் கலாச்சார அனுபவங்கள் வழங்கப்படுகின்றன. இந்த முயற்சியின் மூலம், ரிலையன்ஸ் அறக்கட்டளையின் விளையாட்டு சார்ந்த செயல்பாடுகள் நாடு முழுவதும் 23 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

இந்த நாளை மேலும் சிறப்பானதாக மாற்ற வீரர்களை வலியுறுத்திய நீதா அம்பானி, இது எனக்கும், பல ஆண்டுகளாக இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ள உங்களுக்கும் மிகவும் சிறப்பான ஆட்டம். நீங்கள் இந்தக் குழந்தைகளுக்கு ஒரு உத்வேகமாக இருக்க முடியும், மேலும் அவர்கள் என்னவாகக் கனவு காண்கிறார்களோ, அதுவாக அவர்கள் ஆக முடியும் என்பதை அவர்களுக்குக் காட்ட முடியும், என்று ஊக்கப்படுத்தினார்.

நடப்பு ஐபிஎல் 2025 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 9 போட்டிகளில் 5 வெற்றியும் 4 தோல்வியும் பெற்று, 10 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+