ஐந்து முறை ஐபிஎல் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து திடீரென நீக்கப்பட்டு இருப்பது சமூக வலைத்தளத்தில் கடுமையான விமர்சனத்தை அம்பானி குடும்பமும், மும்பை இந்தியன்ஸ் அணியின் நிர்வாகமும் எதிர்கொண்டு வருகிறது.
மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா பொறுப்பேற்றுள்ளார் என்ற செய்தி இந்த அணியின் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருப்பது மட்டும் அல்லாமல் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

இதன் எதிரொலியாக ரோஹித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து சுமார் 1.5 லட்சம் இன்ஸ்டாகிராம் பாலோவர்களை மும்பை இந்தியன்ஸ் இழந்துள்ளது. இந்த எதிர்பாராத முடிவு மும்பை இந்தியன்ஸ் ஆதரவாளர்கள் மத்தியில் ஏமாற்றம் அடைய செய்துள்எளது.
உலக கோப்பை போட்டியில் இந்தியா தோல்வியை சந்தித்த நிலையில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருப்பது ஐபிஎல் போட்டிக்காக தான். அதுவும் குறிப்பாக சிஎஸ்கே அணிக்காக இந்த வருடம் தோனி விளையாட உள்ளது உறுதியான பின்பு கிரிக்கெட் ரசிகர்களும், தோனி வெறியர்களும் குத்தாட்டம் போட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சியின் விளைவாக தற்போது கிட்டத்தட்ட 4 லட்சம் பாலோவர்களை இழந்து 12.8 மில்லியன் பாலோவர்களாக உள்ளது.
ரோஹித் சர்மா 2013 முதல் 2023 வரை தனது கேப்டன்சி கீழ் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சுமார் ஐந்து ஐபிஎல் கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியில் அடையாளம், பேஸ்மெண்ட், தூண் என எப்படி வேண்டுமானாலும் கூறலாம். சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் ரோஹித் சர்மா இல்லையெனில் மும்பை இந்தியன்ஸ் அணி இல்லை என கிரிக்கெட் ரசிகர்கள் நம்புகின்றனர்.
ரோஹித் சர்மா தலைமையின் கீழ் 158 ஐபிஎல் போட்டிகளில் சுமார் 56.33% போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது மும்பை இந்தியன்ஸ். ரோஹித்தின் பங்களிப்பு ஈடு இணையற்றது அவரை மாற்றுவதற்கான முடிவு அணியின் எனர்ஜியை குறைத்துள்ளது.


Click it and Unblock the Notifications