மும்பையில் இயங்கிவரும் 119 ஆண்டுகள் பழமையான இஸ்மாயில் கட்டிடத்தில் இருந்து பிரபல zara நிறுவனம் தனது கடையை மூடிவிட்டதையடுத்து தற்போது ஒருமாத வாடகையாக ரூ.3 கோடிக்கு என சொகுசு ஃபேஷன் பிராண்டான பர்பிள் ஸ்டைல் லேப்ஸ் நிறுவனம் குத்தகைக்கு எடுத்துள்ளது.
தெற்கு மும்பையின் கோட்டை பகுதியில் 119 ஆண்டுகள் பழமை வாய்ந்த இஸ்மாயில் கட்டிடம் அமைந்துள்ளது. 5 மாடிகளைக் கொண்ட இந்த கட்டிடத்தில் பல பிரபலமான கடைகள் செயல்பட்டு வருகிறது. அந்தவகையில், ஸ்பானிஷ் ஃபேஷன் பிராண்டான zara நிறுவனமும், இந்த கட்டிடத்தில் கடை நடத்தி வந்தது. துணிகளுக்கு பிரபலமான இந்த நிறுவனம், கடந்த 2016ம் ஆண்டு ரூ.2.25 கோடிக்கு 21 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்திருந்தது. சோபோ (SoBo) என்ற பெயரில் 8 ஆண்டுகளாக இயங்கி வந்த கடையை ஸாரா நிறுவனம், திடீரென மூடுவதாக அறிவித்துள்ளது. இருப்பினும், இந்த கடைக்கு ஒரு மாத வாடகையாக சுமார் ரூ.3 கோடி செலுத்தி வந்துள்ளது ஸாரா நிறுவனம். இதுதொடர்பாக கடையின் வெளியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதாவது, ஸாரா நிறுவனம் குத்தகைக்கு எடுத்தபோது, முதல் 5 மாதங்களுக்கு வாடகை இலவசம் என்றும், முதல் மூன்று ஆண்டுகள் முடிந்ததும் வாடகை 5 சதவீதம் உயர்த்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போதைய வாடகை ரூ 3 கோடி முதல் ஆண்டுக்கு ரூ.36 கோடி வரும் என்று மதிப்பிடப்படுகிறது. மேலும் இவ்வளவு அதிக வாடகை என்பதால் ஸாரா நிறுவனம் கடையை மூடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து ஸாரா நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், பிப்ரவரி 23ம் தேதியில் இருந்து ஸாரா நிறுவனம் தெற்கு மும்பையில் மட்டும் செயல்படாது என்றும் இந்த கடை தவிர, மற்ற கடைகள் எப்போதும் போல் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சொகுசு ஃபேஷன் பிராண்டான Purple Style Labs நிறுவனம், கட்டிடத்தில் 60,000 சதுர அடியில் கடையை 5 வருட வாடகையாக ரூ.36 கோடிக்கு குத்தகைக்கு எடுத்துள்ளது.
சொத்து பதிவு ஆவணங்களின்படி, புதிய குத்தகைதாரரான Purple Style Labs நிறுவனம் ஐந்து வருட குத்தகைக்கு அந்த இடத்தை எடுத்துள்ளது. ஐந்து வருட வாடகை ரூ.206 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது . தினசரி வாடகை ரூ. 10 லட்சம் என்று ஆவணங்களை மேற்கோள் காட்டி இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனம் 15 ஆண்டுகளுக்கு இந்த இடத்தில் வாடகைக்கு இருக்கப் போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த இடத்தில் ஹவுஸ் பாப் அப் என்னும் கடை அமையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கடையின் மாத வாடகை ரூ.3 கோடி, அதாவது முதல் வருடத்திற்கு ரூ.36 கோடி ஆண்டு வாடகை. இரண்டாம் வருடத்திற்கான ஆண்டு வாடகை ரூ.39 கோடியாகவும், மூன்றாம் வருடத்திற்கு ரூ.42 கோடியாகவும், நான்காவது வருடத்திற்கு ரூ.43.8 கோடியாகவும், ஐந்தாவது வருடத்திற்கு ரூ.45.6 கோடியாகவும் உயரும் என்று ஆவணங்களில் மதிப்பிடப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு அபிஷேக் அகர்வால் நிறுவிய பர்பிள் ஸ்டைல் லேப்ஸ் என்ற நிறுவனம், பெர்னியாவின் பாப்-அப் ஷாப் பிராண்டின் கீழ் உயர்நிலை டிசைனர் பிராண்டுகளை சில்லறை விற்பனை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications