ஒவ்வொரு மாநிலம் தங்களுடைய வளர்ச்சி அளவீட்டை பல மாறுப்பட்ட முறையில் காட்டுக்கின்றனர். தமிழ்நாட்டை பொருத்த வரையில் எந்த கட்சி ஆட்சியில் வந்தாலும் சரி அனைவருக்குமான வளர்ச்சி என்ற அடிப்படையை கொண்டு தமிழ்நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்று வருகின்றனர்.
ஆனால் பல மாநிலங்களில் முக்கியமான பகுதிகள், நகரங்கள் மட்டுமே அனைத்து விதமான வசதிகளும், சேவைகளும் கிடைக்கும் வகையில் அமைந்துள்ளது. பெரும்பாலான நடங்களில் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இருப்பது தான் நிஜம். இந்தியாவின் நிதியியல் தலைநகமான மும்பை இருக்கும் மகாராஷ்டிர மாநிலத்தில் ஒரு கிராமம் எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது என்றதை ஒரு லின்கிடுஇன் பதிவு காட்டுகிறது.

கிரஸ்ஸென்ஷியா ஸ்ட்ராட்டஜிஸ்ட்ஸ் இன்க் (Crescentia Strategists Inc) நிறுவனத்தின் இணை நிறுவனர் சஷாங்க் போரே தனது லின்க்டுஇன் பதிவில் மகாராஷ்டிரா-வின் ஒரு உண்மையை வெளிப்படுத்தியுள்ளார். மும்பை என்ற வணிக தலைநகரிலிருந்து வெறும் 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கசரா (Kasara) இது தானே மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம். இது ஆரஞ்சு நகரமாக அறியப்படுகிறது.
கசரா என்னும் இடத்தில் சென்றபோது, ஒரு பெரிய மாறுபாடு தெரிந்ததாக சஷாங்க் போரே தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
மும்பையில், டெஸ்லாவின் பிரமாண்டமான அறிமுகத்தை மக்கள் ஒருப்பக்கம் கொண்டாடி வரும் மக்கள், மெட்ரோ விரிவாக்கம், புல்லட் ரயில்கள், டேட்டா சென்டர், மற்றும் பளபளக்கும் கட்டிடங்கள் என மக்கள் உயர்தர வாழ்க்கையை அனுபவித்து வருகின்றனர்.
ஆனால், அதே நேரத்தில் கசராவில் அடிப்படை சேவைகள் கூட இப்பகுதி மக்களுக்கு இன்னும் கனவாகவே உள்ளன. ஒரு நாளுக்கு 4 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு நடக்கிறது, அதிலும் மின்சாரம் மாறுபாடுகள் (voltage fluctuations) காரணமாக இப்பகுதி மக்கள் ஜெனரேட்டர்களை நம்பியே இருக்க வேண்டியிருக்கிறது. குடிநீர் இல்லை, கோடை வெளியில் காலத்தில் தண்ணீர் டேங்கர்களையும், ஏரிகளும் தான் இப்பகுதி மக்களின் உயிர் காக்கும் ஆதாரமாக உள்ளன.

வளர்ச்சியில் பின்னடைவு:
இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆன பிறகும், மகாராட்டிரா போன்ற பொருளாதாரத்தில் முன்னிலை வகிக்கும் மாநிலத்தில் இந்த மாறுபாடு மனதை புண்படுத்துகிறது என சஷாங்க் போரே தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
2047-ஆம் ஆண்டுக்குள் ஒரு வளர்ந்த பொருளாதார நாடாக மாற வேண்டுமெனில், இந்த அடிப்படை பிரச்சனைகளை சரி செய்யாமல் எப்படி சாதிக்க முடியும்? இது ஒரு பெரிய கேள்வியை எழுப்புகிறது. சஷாங்க் போரே கூறியது போல, இந்தியாவின் வளர்ச்சி கதை மெட்ரோ நகரங்களை மட்டுமல்ல, ஒவ்வொரு கிராமமும், ஒவ்வொரு மாவட்டமும் இந்த வளர்ச்சி இலக்கில் உள்ளடக்க வேண்டும்.

உண்மையான முன்னேற்றம்:
ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அனைத்து மக்களும், அனைத்து விதிமான சேவைகளும் கிடைப்பது தான். உதாரணமாக இங்கு மும்பை மற்றும் கசரா போன்ற இடங்களுக்கு இடையே உள்ள இந்த மாறுபாட்டை நிரப்புவது தான் உண்மையான வளர்ச்சி என சஷாங்க் போரே தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
கிரஸ்ஸென்ஷியா ஸ்ட்ராட்டஜிஸ்ட்ஸ் இன்க் நிறுவனம் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (SME) வளர்ச்சி பயணத்தில் உதவி செய்கின்றன. ஆனால், நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அடிப்படை உள்கட்டமைப்பு மற்றும் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டியது அவசியம். இல்லையெனில், இந்த இரண்டு மாறுப்பட்ட இந்தியாவுக்குமான இடைவெளி நிரந்தரமாகி விடும். இந்த மாறுபாடு நிலை பொருளாதார வல்லுனர்களுக்கு முக்கிய விவாதமாக மாறக்கூடும்.


Click it and Unblock the Notifications