பள்ளி படிப்பை முடித்துவிட்டு, ஒரு பெரிய கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு நல்ல நிறுவனத்தில் வேலைக்கு சென்றால் வாழ்க்கை செட்டில் ஆகிவிடும் , மாதந்தோறும் லட்சக்கணக்கில் சம்பளம் வரும் என்பதுதான் பெரும்பாலானவர்களின் மனநிலை. அதுவும் ஐடி வேலை என்றால் கேட்கவே வேண்டாம் பணம் கொட்டும் என்று தான் பலரும் நினைத்தார்கள்.
ஆனால் ஏஐ உள்ளிட்ட தொழில்நுட்பங்களின் வருகை பல்வேறு வேலைகளுக்கும் சவால்களை ஏற்படுத்தி இருக்கின்றன. குறிப்பாக டெக் துறை தான் இதில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஐடி வேலையில் லட்சக்கணக்கில் சம்பளம் தான் ஆனால் அந்த வேலை எப்போது வேண்டுமானாலும் பறிபோகலாம் என்பது தான் நிலைமை. அதுவும் இந்திய ஐடி நிறுவனங்களில் கடந்த சில ஆண்டுகளாக பெரிய அளவு சம்பள உயர்வு கூட கிடைக்கவில்லை.

ஐடி வேலையில் நிலைமை இப்படி இருக்க பிளம்பிங் வேலை செய்பவர் மாசம் 1.5 லட்சம் ரூபாய் சம்பாதிப்பதாக ஒரு இளைஞர் வெளியிட்டு இருக்கக்கூடிய பதிவு ஐடி ஊழியர்களை எல்லாம் உச்சி கொட்ட வைத்திருக்கிறது. மும்பையை சேர்ந்த ஒரு இளைஞர் தன்னுடைய ரெடிட் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதில் , எங்க ஏரியாவில் பிளம்பிங் வேலை செய்பவர் மாதம் 1.5 லட்சம் ரூபாயும் ஆண்டுக்கு 18 லட்சம் ரூபாயும் வருமானமாக பெறுகிறார் என கூறியுள்ளார்.
இதுதான் தற்போது பெரிய விவாத பொருளாக மாறி இருக்கிறது. தங்களுடைய வீட்டில் தண்ணீர் குழாயில் பிரச்சினை ஏற்பட்டதாகவும் இதற்காக பிளம்பரை வரவழைத்ததாகவும் கூறியுள்ளார். அப்போது அவரிடம் பேச்சு கொடுத்ததாகவும் அவர் ஒரு ஆண்டுக்கு 18 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டுவதாக கூறியதாகவும் தெரியப்படுத்தியுள்ளார்.

ரெடிட் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள போஸ்ட்டில் இது பலருக்கும் அதிர்ச்சி தரக்கூடிய ஒரு தகவலாக இருக்கும் , எங்களுடைய குடியிருப்பில் பிளம்பிங் செய்ய வேலை செய்ய வந்தவரிடம் நான் பேசினேன் அப்போது அவர் ஒரு ஆண்டுக்கு 18 லட்சம் ரூபாய் சம்பாதிப்பதாக தெரிவித்தார். சொந்தமாக கார் கூட இருக்கிறது, சொந்தமாக வீடும் வைத்திருக்கிறார் விவசாய நிலம் வைத்திருக்கிறார் என கூறியுள்ளார்.
தற்போது உலக அளவில் பிளம்பிங் வேலை , எலக்ட்ரிகல் வேலை , கட்டுமான பணி உள்ளிட்டவை தான் டிமாண்ட் அதிகமாக இருக்கிறது. இதில் திறன் மிகுந்தவர்களின் எண்ணிக்கை குறைவு டிமாண்ட் அதிகம் என்பதால் அதிக பணம் கொடுத்து இவர்களின் சேவைகளை பலரும் பெறுகிறார்கள் என ஒரு நபர் பதில் கூறியிருக்கிறார். ஒரு மணி நேரம் வேலைக்கு 500 ரூபாய் கேட்கிறார்கள் என பலரும் தங்கள் அனுபவத்தை பகிர்ந்துள்ளனர். ஒரு நபர், அவருடைய சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கு கூட எனக்கு இல்லை , இன்னும், 10 ஆண்டுகளில் என்னுடைய வேலை இருக்குமா என எனக்கு தெரியாது ஆனால் நிச்சயம் பிளம்பிங் வேலைகள் இருக்கும் என கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications