இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை பெட்ரோல், டீசல் கார்களை விடுத்து எலக்ட்ரிக் கார்கள் பக்கம் திரும்பி வருகிறது. இதற்கு ஏற்றார் போல் மக்களும் பெட்ரோல், டீசல் விலையைப் பார்த்து பயந்து போய் எலக்ட்ரிக் கார்களை வாங்குவதற்கு அதிகக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த வர்த்தகப் போக்கின் காரணமாக அனைத்து முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தற்போது எலக்ட்ரிக் கார்களைத் தயாரிக்கத் துவங்கியுள்ளது.
எலக்ட்ரிக் கார்
இந்தியாவில் பெரும் பகுதி எலக்ட்ரிக் கார் வர்த்தகத்தைக் கைப்பற்றிய டாடா மோட்டார்ஸ் அடுத்தடுத்து 10 மாடல் எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் இருக்கும் பெரும் பகுதி மிடில் கிளாஸ் மக்களைக் கவரும் வகையில் வெறும் 5 லட்சம் ரூபாயில் எலக்ட்ரிக் கார் அறிமுகம் செய்ய உள்ளது PMV நிறுவனம்.
மிடில் கிளாஸ் மக்கள்
பெரும்பாலான மிடில் கிளாஸ் மக்களுக்குக் கார் வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும் ஆனால் வாங்க முடியாது, இதேபோல் ஓரே பைக்கில் குடும்பத்தில் அனைவரும் பயணிக்கும் நிலையில் பலர் உள்ளனர்.
டாடா நேனோ கார்
ரத்தன் டாடா எப்படி மக்களின் இந்த நிலையைப் பார்த்து டாடா நேனோ கார் உருவாக்கினாரோ, அதேபோல் எலக்ட்ரிக் கார்கள் மீது மக்களுக்கு இருக்கும் மோகம் மற்றும் அதன் விலை காரணமாக எலக்ட்ரிக் கார்களை வாங்க முடியாமல் மாட்டிக்கொண்டு இருப்பவர்களைத் தனது வாடிக்கையாளர்களாக மாற்றிக்கொள்ள முடிவு செய்துள்ளது PMV Electric.
PMV Electric நிறுவனம்
மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் எலக்ட்ரிக் வாகன ஸ்டார்ட்அப் நிறுவனமான PMV Electric நிறுவனம் இந்தியாவில் மைக்ரோகார் பிரிவில் புதிதாக Eas-E என்ற பெயரில் வெறும் 4.79 லட்சம் என்ற அடிப்படை விலையில் புதிய எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்துள்ளது.
4.79 லட்சம் ரூபாய்
PMV Electric நிறுவனம் வெறும் 4.79 லட்சம் ரூபாயில் Eas-E காரை அறிமுகம் செய்துள்ளதால் இந்தியாவில் மலிவான பேசெஞ்சர் கார் என்ற பெயரைப் பெற்றுள்ளது. ஆனால் இந்த Eas-E கார் சாதாரணக் கார் போல் அல்லாமல் அளவிலும், இருக்கையிலும் குறைவானது.
இரு சீட் மட்டுமே
பொதுவாகக் கார்களில் 4 முதல் 5 இருக்கை இருக்கும் ஆனால் PMV Electric நிறுவனத்தின் Eas-E காரில் இரு சீட்டுகள் மட்டுமே இருக்கும், இதைக் கார் என்று அழைக்காமல் quadricycle என அழைக்கப்படுகிறது. இந்த PMV Electric நிறுவனத்தின் Eas-E காரில் 13hp திறன் கொண்ட எலக்ட்ரிக் மோட்டார் உள்ளது, இதை இயக்க 48V லித்தியம் ஐயன் பாஸ்பேட் பேட்டரி உள்ளது.
200 கிலோமீட்டர் ரேஞ்ச்
மேலும் இந்தக் கார 120, 160, 200 கிலோமீட்டர் வரையில் செல்ல கூடிய 3 கார்களாக அறிமுகம் செய்ய உள்ளது. PMV Electric நிறுவனத்தின் Eas-E கார்-ஐ புக் செய்ய 2000 ரூபாய் போதும் என்பது மட்டும் அல்லாமல் ஏற்கனவே இந்நிறுவனம் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுமார் 6000 கார்களுக்குப் புக்கிங் குவிந்துள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
2023ல் டெலிவரி
PMV Electric நிறுவனம் இந்தக் கார்கள் அனைத்தையும் புனே-வில் உள்ள தனது சொந்த தொழிற்சாலையில் தயாரிக்க உள்ளது, 2023 மத்தியில் 3 வருடம் அல்லது 50000 கிலோமீட்டர் வாரென்டி உடன் கார்களை டெலிவரி செய்ய உள்ளது PMV Electric.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications