மும்பை: வீட்டு வாடகைகளில் மதிப்பு உயர்வதில் இந்தியாவின் பெருநகரங்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. சென்னை, மும்பை, பெங்களூரு , டெல்லி உள்ளிட்ட நகரங்களில் குறைந்தது இரண்டு படுக்கை அறை கொண்ட ஒரு வீட்டிற்கு வாடகைக்கு செல்ல வேண்டும் எனில் மாத சம்பளத்தில் கணிசமான தொகையை வழங்க வேண்டி இருக்கிறது. இந்த நிலையில் ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் கூட்டமைப்பான CREDAI-MCHI சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு அறிக்கையில் மும்பையில் ஒரு படுக்கை அறை கொண்ட வீட்டின் வாடகை ஆண்டுக்கு 5.18 லட்சம் ரூபாயாக இருக்கிறது என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
இது மும்பையில் ஜூனியர் அளவில் பணியாற்றும் ஊழியரின் சராசரி ஊதியமான 4.49 லட்சம் ரூபாயை விட அதிகமாகும். அதாவது சம்பளத்தை விட அதிக தொகையை ஊதியமாக செலுத்த வேண்டி இருக்கிறதாம். இந்த அறிக்கை இந்தியாவிலேயே மும்பை நகரத்தில் வீட்டு வாடகைகள் உச்சத்தில் இருப்பதாக தெரிவிக்கிறது.

இவ்வாறு வீட்டு வாடகை மதிப்பு உயர்ந்து கொண்டே சென்றாள் பல்வேறு துறை சார்ந்த ஊழியர்கள் மும்பையை விட்டு வேறு நகரங்களுக்கு இடம்பெற வேண்டிய சூழல் உண்டாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் ஒரு படுக்கையறை கொண்ட வீட்டிற்கு ஆண்டுக்கு 2.32 லட்சமும், டெல்லியில் ஆண்டுக்கு 2.29 லட்சமும் வாடகையாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கிறது. இதைவிட இரண்டு மடங்கு அதிகமான தொகையை மும்பையில் பணியாற்றுபவர்கள் வழங்க வேண்டியிருக்கிறது.
பெங்களூருவில் பணியாற்றும் ஒரு ஜூனியர் அளவிலான ஊழியரின் சராசரி ஆண்டு ஊதியம் 5.27 லட்சம் ரூபாய், டெல்லியில் இது 4.29 லட்சம் ரூபாயாக இருக்கிறது. இந்த இரண்டு நகரங்களிலும் வேலை செய்பவர்கள் தங்கள் ஊதியத்தில் கிட்டத்தட்ட பாதி தொகையை வீட்டு வாடகைக்கு வழங்க வேண்டி இருக்கிறது.
மும்பையில் அடிப்படை வாழ்க்கை செலவினங்கள் உயர்ந்து கொண்டே போவது ஒரு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் மேலும் ஆடம்பரமான மக்கள் மட்டுமே வாழும் நகரமாக மாறிவிடுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
ஏனெனில் மும்பையில் ஒரு சராசரி ஊதியத்தில் வேலைக்கு இருக்கும் நபர்கள் வீட்டு வாடகை, உணவு உள்ளிட்டவற்றுக்கு செலவு செய்து விட்டு அவர்களின் ஊதியத்தில் ஒரு ரூபாயை கூட மிச்சப்படுத்த முடியாது என்ற சூழலில் இருக்கிறார்கள் என கூறுகிறது.
மும்பையில் கணிசமான ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவர்கள் ஆண்டுக்கு சராசரியாக 15 லட்சம் ரூபாய் ஊதியம் பெறுகிறார்கள், இவர்கள் இரண்டு படுக்கையறை கொண்ட வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றால் ஆண்டுக்கு 7.5 லட்சம் ரூபாயை வாடகையாக செலுத்த வேண்டும். குறிப்பிடுகிறது இதுவே பெங்களூரு டெல்லி உள்ளிட்ட நகரங்களில் இதில் பாதி தொகையை வாடகையாக வழங்கினாலே போதுமாம்.
பெங்களூருவில் கணிசமான ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவர்கள் சராசரியாக 16 லட்சம் ரூபாயை ஊதியமாக பெறுகின்றனர். அதில் 4 லட்சம் ரூபாயை வீட்டு வாடகையாக செலுத்துகின்றனர். அதே டெல்லியில் ஆண்டுக்கு 14 லட்சம் ரூபாய் ஊதியம் பெறுபவர்கள் 3.5 லட்சம் ரூபாய் வாடகையாக செலுத்த வேண்டியிருக்கிறது. மும்பை நகரில் மூத்த அதிகாரி அளவில் வேலை செய்பவர்கள் சராசரியாக ஆண்டுக்கு 34 லட்சம் ரூபாய் ஊதியம் பெறுகிறார்கள் ஆனால் அதில் 14 லட்சம் ரூபாய் அவர்கள் வீட்டு வாடகைக்காகவே செலவிட வேண்டி இருக்கிறது.
Written by: Devika


Click it and Unblock the Notifications