இந்தியாவில் ரியல் எஸ்டேட் மதிப்பு வேகமாக உயர்ந்து வரும் நகரம் மும்பை. இங்கே சொந்தமாக வீடு வாங்க கோடி கோடியாக வேண்டும் என்றால் தற்போது கார் நிறுத்தத்திற்கான இடத்திற்கே 1 கோடி ரூபாய் கேட்பதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
ஒரு கோடி ரூபாய் இருந்தால் இந்தியாவில் நாம் என்ன வாங்க முடியும் ? சென்னை போன்ற நகரத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாங்கலாம் சற்று புறநகர் பகுதியாக இருந்தால் பெரிய வில்லா வாங்கலாம். ஆனால் நீங்கள் தெற்கு மும்பையில் வசிக்கிறீர்கள் என்றால் ஒரே ஒரு பார்க்கிங் ஸ்லாட் மட்டுமே வாங்க முடியும் என எக்ஸ் தலத்தில் மருத்துவரான அனிருத்தா மால்பானி வெளியிட்டுள்ள பதிவு தற்போது வேகமாக பரவி வருகிறது.

தெற்கு மும்பை பகுதியில் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கார் நிறுத்தங்களுக்கான இடங்களை ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனை செய்வதாக அவர் தன்னுடைய பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். அனிருத்தா மால்பானியின் இந்த பதிவு பலரின் கவனத்தை பெற்றுள்ளது. மும்பையில் ரியல் எஸ்டேட் மதிப்புகள் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில் கார் நிறுத்தங்களுக்கான தேவை பல மடங்கு அதிகரித்திருப்பதாகவும் தற்போது அதை வைத்து ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் பல கோடி ரூபாய் சம்பாதிப்பதாகவும் அவருடைய பதிவு தெரிவிக்கிறது.
கார் நிறுத்தத்திற்கு ஒரு கோடி ரூபாயா என பலரும் அவருடைய பதிவுக்கு கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் மும்பையில் ஆடம்பர குடியிருப்புகள் நிறைந்த வார்லி சீ ஃபேஸ் பகுதி. சமுத்திர மகாகி இடங்களில் எல்லாம் கார் நிறுத்தத்திற்கு மட்டுமே ஒரு கோடி ரூபாய் வாங்கப்படுகிறது. தெற்கு மும்பையில் பல்வேறு இடங்களில் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வீடு கட்டி வருகின்றன. இதில் சராசரியாக கார் நிறுத்தங்களுக்கு மட்டும் 25 லிருந்து 60 லட்சம் ரூபாய் வரை கட்டணமாக பெறுகின்றனவாம்.
மும்பையில் இதற்கான தேவை அதிகரித்திருப்பதால் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் அதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அதிக பணம் சம்பாதிக்கின்றன. தெற்கு மும்பை பகுதியில் இனி இல்லை என்ற அளவுக்கு வீடுகள் பெருகிவிட்டன. குறிப்பாக ஆடம்பர குடியிருப்புகளை வாங்குவோர் எண்ணிக்கை உயர்ந்துவுட்டது. நிறைய ஆடம்பரக்கார்கள் வந்துவிட்டன ஆனால் அவற்றை நிறுத்துவதற்கு போதிய கார் நிறுத்தங்கள் இல்லை அந்த பகுதியில் கார் நிறுத்தங்களை கட்டுவதற்கு கூட இடம் கிடையாது என ஒரு பயனர் பதில் அளித்துள்ளார்.
கார் நிறுத்தங்களை வாடகைக்கு விடுபவர்களே மாதம் 30,000 வரை வசூல் செய்கிறார்களாம். மும்பையில் கார் நிறுத்தங்களை வாடகைக்கு விடுவதே ஒரு தொழிலாகிவிட்டது என பலரும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications