கொரோனா பரவிகிட்டு இருக்கு.. உணவு எடுத்து செல்ல முடியாது.. டப்பாவாலாஸ் எடுத்த அதிரடி முடிவு..!

மும்பை: இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், நெரிசலான பகுதிகளை தவிர்க்க அரசு வலியுறுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக 155 ரயில்களை கூட ரத்து செய்துள்ளது ரயில்வே துறை.

பிரச்சனை இந்தளவுக்கு சென்று கொண்டிருக்கும் நிலையில், அதனை எப்படியேனும் குறைத்தாக வேண்டும் என ஒவ்வொரு துறையினரும் பல அதிரடி அறிவிப்புகளையும் பரிந்துரைகளையும் வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் மும்பையின் முக்கிய உழைப்பாளர்களான டப்பாவாலாஸ் ஒரு அதிரடியான முடிவினை எடுத்துள்ளனர். அது மார்ச் 31 வரை உணவுகளை எடுத்து செல்ல முடியாது என்பது தான்.

டப்பாவாலாஸ் வேலை

டப்பாவாலாஸ் வேலை

மும்பை டப்பாவாலாஸ் பற்றி நாம் முன்னரே அறிந்திருப்போம். எனினும் கொஞ்சம் தற்போதும் தெரிந்து கொள்வோமே. ஒருவரின் வீட்டிலிருந்து ட்பாபவைப் (டிஃபன் கேரியரை) பெற்றுக் கொண்டு அவர் பணியாற்றும் இடத்திற்கு அதைக் கொண்டு தரவேண்டும். சாப்பிட்ட பிறகு அதை மீண்டும் அவரின் வீட்டிற்கே கொண்டு செல்ல வேண்டும். இதை தான் டப்பாவாலாக்களின் வேலை.

டப்பாக்களை பெற வேண்டும்

டப்பாக்களை பெற வேண்டும்

டப்பாவாலாக்கள் தங்களது சைக்கிளில், மும்பையின் பல பகுதிகளுக்குச் செல்வார். அங்கு மும்பையில் உள்ள பல வீடுகளிலிருந்து டப்பாக்களை அவர் பெற்றுக் கொள்வார். இதில் பல நடைமுறைக் கஷ்டங்கள் உண்டு. ஒன்று மும்பையின் பல அடுக்கு மாடிக் கட்டிடங்கள். இவற்றில் பழங்காலத்தில் கட்டி முடிக்கப்பட்டவற்றில் லிஃப்ட் கிடையாது. ஆக அவற்றின் மேலேயும் கீழேயும் என்று ஏறி, இறங்கி இப்படிப் பல கட்டடங்களிலிருந்து ஒரு டப்பாவாலா டப்பாக்களைப் பெற வேண்டும்.

ரயில் நிலையத்துக்கு எடுத்து செல்ல வேண்டும்

ரயில் நிலையத்துக்கு எடுத்து செல்ல வேண்டும்

அப்படி பெறப்பட்ட டப்பாக்களை தங்களது சைக்கிளில் வைத்து கொண்டு அருகிலுள்ள ரயில் நிலையத்துக்குச் செல்வார். இவ்வாறு ரயில் நிலையத்தில் பல்வேறு திசைகளிலிருந்தும் பல டப்பாவாலாக்கள் தங்களது கலெஷ்சனுடன் காத்திருப்பார்கள். ஒவ்வொரு டப்பாவாலாவும் மும்பையின் ஒவ்வொரு பகுதிக்கு டப்பாக்களை எடுத்து செல்ல வேண்டும்.

ஏரியா வாரியாக பிரித்தல்

ஏரியா வாரியாக பிரித்தல்

மேலும் அவற்றை ரயில் நடைமேடைகளிலேயே டப்பாக்களை செல்ல வேண்டிய பகுதிக்கேற்ப பிரித்து அடுக்கிக் கொள்வார்கள். ஆக போக வேண்டிய இடத்திற்கேற்றபடி அந்த டப்பாக்கள் இடம்மாறும். இதற்காக பல கோடுவேடு எல்லாம் உண்டாம். ஏனென்றால் இதெல்லாம் குறிப்பிட்ட நேரத்திற்குள் சென்று சேர வேண்டுமே.

காத்திருக்கும் டப்பாவாலாக்கள்

காத்திருக்கும் டப்பாவாலாக்கள்

இப்படி ரயில் ஏற்றி சேர வேண்டிய ரயில் நிலையங்களில் இருந்து, அங்கு காத்திருக்கும் டப்பாவாலாக்கள் தங்கள் ஏரியாவில் உள்ள அலுவலகங்களுக்கு வந்து சேரும் டப்பாக்களை வண்டியில் ஏற்றிக் கொண்டு சேர வேண்டிய இடத்தை நோக்கி செல்வார்கள். இவ்வாறு கொடுக்கப்படும் டப்பாக்களை மீண்டும் குறிப்பிட்ட நேரம் கழித்து திரும்பவும் இதே முறையில் திரும்ப பெறப்பட்டு, வீட்டிற்கு கொண்டு செல்லப்படும்.

சரியான நேரத்தில் செல்ல வேண்டும்

சரியான நேரத்தில் செல்ல வேண்டும்

மிகவும் நெருக்கடியான சிக்கலான நெட்வொர்க்குடன் எண்ணற்ற நபர்களிடம் கைமாற்றப்பட்டாலும் சரியான நேரத்தில் துல்லியமாக விநியோகிக்க இவர்கள் ஒரு குழுவாக செயல்படுகின்றனர். இவர்கள் பெரும்பாலும் வேலை செய்வதே குழுவாகத் தான் செயல்படுகிறார்கள். ஆக டப்பாக்கள் பெரும்பாலும் சைக்கிளிலோ அல்லது உள்ளூர் ரயில்களிலோ கொண்டு செல்லப்படுவதால் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.

தொற்று ஏற்படலாம்

தொற்று ஏற்படலாம்

இதனால் இவர்கள் இப்படி ஒரு அதிரடி முடிவினை எடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து மும்பை டப்பாவாலாஸ் சங்கத்தின் தலைவர் சுபாஷ் தலேகர் வரும் வெள்ளிக்கிழமை முதல் இந்த டிபன் சர்வீஸ் நிறுத்தி வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

கூட்டம் வேண்டாமே

கூட்டம் வேண்டாமே

கொரோனா வைரஸினை தடுக்க உள்ளூர் ரயில்களில் கூட்டம் வேண்டாம் என முதலமைச்சர் உத்தவ் தாக்கரே வேண்டுகோள் விடுத்துள்ளார். எனவே அவரது வேண்டுகோளுக்கு பதிலளித்த சங்கம் இந்த சேவியினை நாளை முதல் நிறுத்த முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது டப்பாவாலாஸ் சங்கம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+