ஒரு சதுர அடி விலை.. பலரின் ஒரு வருட சம்பளம்.. மும்பையில் காஸ்ட்லியான வீடு !!

மும்பை: இந்தியாவில் பெரும் பணக்காரர்கள் பலரும் வசிக்கும் பகுதியாக மும்பை இருக்கிறது. எனவே ரியல் எஸ்டேட் மதிப்பும் இங்கே அதிகம். குறிப்பாக ஒரு சதுர அடி விலையே லட்சங்களில் தான் பேசப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவிலேயே இரண்டாவது காஸ்ட்லியான வீட்டு மனை விற்பனை மும்பையில் நடந்துள்ளது.

யுஎஸ்வி மருந்து நிறுவனத்தின் தலைவரான லீனா காந்தி திவாரி மும்பையின் வார்லி பகுதியில் 639 கோடி ரூபாய் கொடுத்து இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கி இருக்கிறார். நமான் சனா ரெசிடென்சியல் காம்ப்ளக்ஸ் (Naman Xana ) என்ற பெயரில் மும்பையின் வார்லி பகுதியில் கடல் தெரியும் வகையில் 40 அடுக்கு மாடி குடியிருப்பு கட்டப்பட்டிருக்கிறது. ஆடம்பரமான முறையில் டியூப்ளக்ஸ் முறையில் இங்கே வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

ஒரு சதுர அடி விலை.. பலரின் ஒரு வருட சம்பளம்.. மும்பையில் காஸ்ட்லியான வீடு !!

இதில் இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளை லீனா காந்தி திவாரி வாங்கி இருக்கிறார். இவர் வாங்கிய குடியிருப்புகள் 32 மற்றும் 35 வது தளங்களில் அமைந்துள்ளன .மொத்தம் 22,572 சதுர அடி பரப்பளவிலான வீடுகளை இவர் வாங்கி இருக்கிறார். ஒரு சதுர அடிக்கு 2.83 லட்சம் ரூபாயை இவர் கட்டணமாக செலுத்தி இருப்பது தெரிய வந்திருக்கிறது.

அண்மையில் தான் கோடக் மகேந்திரா நிறுவனர் உதய கோடக் வார்லி பகுதியில் அதிகபட்ச தொகையை கொடுத்து வீடுகளை வாங்கினார். அவருக்கு அடுத்ததாக இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய வீடு ஒப்பந்தமாக இது பார்க்கப்படுகிறது. வார்லி சீ ஃபேஸ் பகுதியில் 131 கோடி ரூபாய் கொடுத்து எட்டு அடுக்குமாடி குடியிருப்புகளை உதய் கோடக் வாங்கினார். ஒரு சதுர அடிக்கு 2.89 லட்சம் ரூபாயை அவர் செலுத்தி இருந்தார்.

முன்னதாக இதே அடுக்குமாடி குடியிருப்பில் ஷாலு ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் இயக்குனரான தானியா 10,436 சதுர அடி கொண்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாங்கி இருக்கிறார் . 225 கோடி ரூபாயை இதற்காக இவர் செலுத்தியதாகவும் ஒரு சதுர அடிக்கு 2.16 லட்சம் ரூபாய் வழங்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மும்பையின் ஆடம்பரமான பகுதியாக வார்லி பகுதி பார்க்கப்படுகிறது. இங்கே கடல் தெரியும் வகையில் கட்டப்படும் வீடுகளுக்கு அதிக டிமாண்ட் இருக்கிறதாம்.

கடந்த ஆண்டு கூட மெட்ரோ பிரான்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர்கள் 405 கோடி ரூபாய் கொடுத்து இங்கே ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாங்கினர். அதேபோல ராதாகிஷன் தமானி 1238 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2023 ஆம் ஆண்டிலேயே அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கினார். இந்தியாவில் மும்பை நகரம் ஆடம்பர மற்றும் சொகுசு வீடுகளுக்கான ரியல் எஸ்டேட் சந்தையில் முன்னிலை வகிக்கிறது.

உயர் சொத்து மதிப்பு கொண்ட தனி நபர்கள் பலரும் மும்பையில் அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்குகின்றனர். உலக அளவில் இருக்கும் செல்வந்தர்களில் 3.7 சதவீதம் பேர் இந்தியாவில் இருக்கின்றனர், இவர்களில் 85,698 பேர் உயர் சொத்து மதிப்பு கொண்ட தனி நபர்கள் என தெரிய வருகிறது. உயர் சொத்து மதிப்பு கொண்டு தனி நபர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தில் இருக்கிறது. முதல் இடத்தில் அமெரிக்காவும் இரண்டாவது இடத்தில் சீனாவும் மூன்றாவது இடத்தில் ஜப்பானும் இருக்கின்றன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+