எஸ்பிஐ வங்கி ஊழியர் செய்த நூதன மோசடி.. ரூ.7.5 லட்சம் திருட்டு.. மக்களே உஷார்..!

மும்பையைச் சேர்ந்த பெண் வாடிக்கையாளர் ஒருவருடைய கணவர் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.7.5 லட்சம் பணத்தை ஏமாற்றியதாக செய்திகள் வெளியாகி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளருக்கு உதவி என்ற பெயரில் வங்கி ஊழியர் ஏமாற்றிய மற்றொரு ஆன்லைன் வங்கி மோசடி வழக்கு மும்பையில் பதிவாகியுள்ளது.

மும்பையில் 26 வயதான பெண் ஒருவர் புதன்கிழமை எஸ்பிஐ வங்கியின் ஊழியர் ஒருவரால் சுமார் ரூ.7.5 லட்சத்திற்கு மேல் பணத்தை இழந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மோசடியில் ஈடுபட்ட வங்கி ஊழியர்!

மோசடியில் ஈடுபட்ட வங்கி ஊழியர்!

மும்பை, காண்டிவலியில் (கிழக்கு) பகுதியில் வசிப்பவர் ஜானகி சௌபே, பேமெண்ட் சீட்டை சரியான முறையில் நிரப்ப எஸ்பிஐ வங்கி ஊழியரான தினேஷ் பைசான்-யிடம் அடிக்கடி உதவி கேட்டுக் கொண்டிருந்தார். எஸ்பிஐ வங்கி ஊழியரான பைசானே ஜானகி சௌபே-க்கு தொகையைக் கணக்கிடவும், சீட்டை நிரப்பவும், மீதித் தொகையைக் குறிப்பிடவும் உதவியுள்ளார்.

கஸ்டமர் ஐடி, பாஸ்வோர்ட்

கஸ்டமர் ஐடி, பாஸ்வோர்ட்

பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் ஜானகி சௌபே-யை எஸ்பிஐ வங்கி ஊழியரான பைசானே இணைய வங்கி மற்றும் மொபைல் பேங்கிங்கிற்கு அறிமுகப்படுத்தியதாகவும், அவரது பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல் அதாவது பாஸ்வோர்ட் அவர் அறிந்திருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

தொலைபேசி

தொலைபேசி

ஒவ்வொரு முறையும் ஜானகி எந்தவொரு பரிவர்த்தனைக்காகவும் வங்கிக்குச் சென்றாலும், பரிவர்த்தனையைக் கையாளவும் OTP ஐ வழங்கவும் பைசானே வேண்டுமென்றே தனது தொலைபேசியை வாங்கி தன் பொருப்பில் வைத்திருப்பார் என்று போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஏதோ சரியில்லை!

ஏதோ சரியில்லை!

கடந்த ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி பணத்தை டெபாசிட் செய்வதற்காக தனது நண்பருடன் ஜானகி வங்கிக்குச் சென்றபோது ஏதோ சரியாக இல்லை என்பதை ஒருநாள் உணர்ந்தார். பாஸ்புக்கைப் புதுப்பித்த பிறகு, 12 லட்சம் ரூபாய் இருக்கும் என எண்ணியபோது, கணவரின் கணக்கில் 5 லட்சம் மட்டுமே இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பேலன்ஸ்

பேலன்ஸ்

இதை கவனித்த ஜானகி பைசானிடம் பேலன்ஸ் குறைவாக இருப்பது குறித்து கேட்டதற்கு, பாஸ்புக் அச்சிடும் இயந்திரத்தில் பிரச்சனை இருக்கலாம் என மழுப்பலான பதில்களை அளித்துள்ளார்.

சில நாட்களுக்குப் பிறகு, ஜானகி, தினேஷிடம் மீண்டும் ஒரு வங்கி அறிக்கையைக் கேட்டுள்ளர், அவர் கணக்கில் ரூ.12,26,259 இருப்பதாகக் காட்டினார். ஆனால் பைசேன் வழங்கிய பாஸ்புக்கின் ஸ்டேட்மென்ட்களை கிராஸ் செக் செய்யதபோது, அதில் முரண்பாடுகள் இருந்ததை அவர் கண்டுபிடித்துள்ளார்.

புகார்!

புகார்!

அதனைத் தொடர்ந்து பெண் வாடிக்கையாளர் வங்கி மேலாளரை சந்தித்து, தனது உண்மையான வங்கி அறிக்கையை அளித்துள்ளார். அதில் அவர் வங்கி கணக்கில் ரூ.12 லட்சம் இருக்க வேண்டும், ஆனால் வெறும் ரூ.5,29,046 மட்டமே இருப்பதாகவும், வங்கி அறிக்கையை ஆராய்ந்த பிறகு, கிரெடிட் கார்டு பணம் செலுத்துதல் என்ற போர்வையில் ஏராளமான சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளைக் கண்டறிந்ததாகவும் கூறியுள்ளார்.

வங்கி ஊழியர் கைது!

வங்கி ஊழியர் கைது!

பாதிக்கப்பட்ட பெண் வாடிக்கையாளர் அளித்த புகாரின் பேரில் மார்ச் 6ஆம் தேதி, இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகள் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 66 டி (கணினி வளத்தைப் பயன்படுத்தி நபர் மூலம் ஏமாற்றுதல்) ஆகியவற்றின் கீழ் மோசடி, மோசடி செய்ததாக வங்கி ஊழியர் தினேஷ் மீது பாங்கூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

வங்கி ஊழியர், பெண் வாடிக்கையாளர் கணக்கிலிருந்து சுமார் ரூ.7,63,196 மதிப்பிலான 12 மோசடி பரிவர்த்தனைகள் மேற்கொண்டதாக போலீஸார் கூறுயுள்ளனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+