விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகை மட்டும் அல்லாமல் ஒவ்வொரு ஊரிலும், தெருவிலும் மக்கள் ஒன்று கூடி கொண்டாடப்படுவது என்பதால் இது மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது.
விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நாள் ஒவ்வொரு மாநிலத்திலும் மாறுபடுகிறது, பொதுவாக விநாயகர் சதுர்த்தி 9 நாள் கொண்டப்படுகிறது. இந்த 9 நாளும் சில மாநிலங்களில் கோலாகலமாக இருக்கும்.

கிராமங்களில் எப்படி ஒவ்வொரு தெரு அல்லது பகுதிகளில் இருக்கும் மக்கள் பணத்தை திரட்டி ஒன்று கூடி பொதுவாக ஒரு விநாயகர் சிலையை வாங்கி கொண்டாடுகிறோமோ அதேபோல் பெரு நகரங்களில் பல அமைப்புகள், வர்த்தகர்கள் இணைந்து பிரம்மாண்ட முறையில் விநாயகர் சிலையை அலங்காரம் செய்வார்கள்.
இப்படி மும்பையில் ஜிஎஸ்பி மண்டல் எனப்படும் ஒரு அமைப்பு ஒட்டுமொத்த மும்பையிலும் மிகவும் காஸ்ட்லியான விநாயகர் சிலையை உருவாக்கி இந்திய மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஜிஎஸ்பி மண்டல் தனது 69வது விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு 360.45 கோடி ரூபாய் இன்சூரன்ஸ் உடன் கொண்டாடியுள்ளது கூடுதல் வியப்பளிக்கும் விஷயமாகும்.
மும்பையில் ஜிஎஸ்பி மண்டல் அமைப்பு 69 கிலோ தங்கம், 336 கிலோ வெள்ளி ஆபரணங்கள் உடன் அலங்கரிக்கப்பட்டு பார்ப்பவர்களை வாயை பிளக்க வைத்துள்ளது. இது மட்டும் அல்லாமல் ஜிஎஸ்பி மண்டல் எனப்படும் Gaud Saraswat Brahmin (GSB) Mandal அமைப்பின் பண பலத்தையும் இதன் மூலம் காட்டியுள்ளது.
எஸ்பி மண்டல் தனது 69வது விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் குறித்து இந்த அமைப்பின் துணை தலைவப் ராகவேந்திரா ஜி பட் பேசுகையில் இந்த வருடம் சுமார்360.45 கோடி ரூபாய் இன்சூரன்ஸ் பாதுக்காப்புடன் விழா-வை ஏற்பாடு செய்துள்ளோம், இதில் 31.97 கோடி ரூபாய் தங்கம், வெள்ளி மற்றும் பிற ஆபரண பொருட்களுக்கான பாதுகாப்பு.

மீதமுள்ள இன்சூரன்ஸ் பாதுகாப்பு அனைத்தும் பந்தல், விழாவுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்புக்கு எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் விழாவுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் digital facial recognition பதிவு செய்யப்பட உள்ளது, மேலும் நன்கொடைகளை டிஜிட்டல் முறையில் செலுத்தும் சேவைகள் கொண்டு வரப்பட்டு உள்ளது என ராகவேந்திரா தெரிவித்தார்.
பெரு நகரங்களில் பல்வேறு வர்த்தக அமைப்புகள் மத்தியில் யார் பெரிய அல்லது ஆடம்பரமாக விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கொண்டாடுகிறார்கள் என்பதில் பெரும் போட்டியே இருக்கும், இதனாலேயே பெரிய விநாயகர் சிலையை வாங்குவதில் கடும் கட்டுப்பாடுகள் இந்த முறை பல மாநிலங்களில் வைக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications