இந்தியாவின் நிதியியல் தலைநகரமான மும்பையில் பல பில்லியனர்கள் இருக்கும் வேளையில் மும்பையின் பணக்கார பெண் யார் தெரியுமா..?இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி முதல் தனது சொத்து மதிப்பு ஜீரோ என வெளிப்படையாக கூறிய அனில் அம்பானியும் மும்பையில் தான் வசிக்கிறார். ஆனால் மும்பையின் பணக்காரர் பெண் என்ற சிறப்பு அடையாளம் இவருக்கு மட்டும் தான் உண்டு.
இந்தியாவின் இரண்டாவது பணக்கார பெண் மற்றும் மும்பையின் பெரும் பணக்காரர் பெயர் ரோஹிகா சைரஸ் மிஸ்திரி. இவர் மறைந்த சைரஸ் மிஸ்திரியின் மனைவியான ரோஹிகா மிஸ்திரி ஆவார். சைரஸ் மிஸ்திரி, இந்தியாவின் மிகவும் பழமையான கட்டுமான நிறுவனமான SP GROUP-ன் தலைவரான பல்லோன்ஜி மிஸ்திரியின் இளைய மகன் ஆவார்.

சைரஸ் மிஸ்திரி SP GROUP வளர்ச்சிக்கு முக்கிய பங்கு விகித்தது மட்டும் அல்லாமல் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்தார். இவர் தலைமையிலான டாடா குரூப் பல சர்ச்சைகளை எதிர்கொண்ட போது ரத்தன் டாடா இவர் மீது வழக்கு தொடுத்து பதவியில் இருந்து நீக்கினார். இந்த நிலையில் சைர்ஸ் மிஸ்திரி ஜூன் 2022 இல் கார் விபத்தில் இறந்தார்.
2023 ஆம் ஆண்டில் இந்தியாவில் பில்லியனர் என்ற அந்தஸ்து பெற்ற மூன்று பெண்களில் ரோஹிகா மிஸ்ட்ரியும் ஒருவர் ஆவார். அவரது நிகர மதிப்பு 7.4 பில்லியன் டாலர்களாகும், இது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 60,000 கோடி ரூபாய். இதன் மூலம் இந்தியாவின் இரண்டாவது பணக்காரப் பெண்மணியாகவும் உயர்ந்தார். முதல் இடத்தில் சாவித்ரி ஜிண்டால் 17 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் இந்தியாவின் பணக்கார பெண்மணி ஆவார்.
ரோஹிகா மிஸ்திரி, தனது கணவர் சைரஸ் மிஸ்திரி மறைவிற்கு பின்பு அவருடைய சொத்துக்களை பெற்ற பிறகு கோடீஸ்வரரானார். சைரஸ் மிஸ்திரி சொத்துக்களில் பெரும் பகுதி டாடா குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் தான். SP GROUP சுமார் 18.4% டாடா சன்ஸ் பங்குகளை வைத்துள்ளது.
இந்த பங்கு ஆதிக்கத்தை வைத்து தான் அக்டோபர் 2016 வரை நான்கு ஆண்டுகள் டாடா சன்ஸ் தலைவராக சைரஸ் மிஸ்திரி இருந்தார். சைரஸ் மிஸ்திரி சாலை விபத்தில் இறந்து சில மாதங்களிலேயே அவருடைய தந்தை இறந்தது பெரும் அதிர்ச்சியாக அமைந்தது.
ரோஹிகா மிஸ்திரி - சைரஸ் மிஸ்திரி 1992 இல் திருமணம் செய்து கொண்டனர், இவர்களுக்குல ஜஹான் மிஸ்திரி மற்றும் ஃபிரோஸ் மிஸ்திரி ஆகிய இரு மகன்கள் உள்ளனர். தற்போது இவரும் எஸ்பி குரூப் நிர்வாகத்தில் இணைந்துள்ளனர்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications