சமீப காலமாக தங்கள் சொந்த ஊரை விடுத்து வேலை வாய்ப்புக்காக பிற ஊர்களுக்கு பலரும் செல்கின்றனர். இதன் காரணமாக அங்கு வாடகை வீட்டில் வசிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அதிலும் மும்பையில் வசிப்பவர்களுக்கு வீட்டு வாடகை பெரும் சுமையாக உள்ளதாக புதிய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. வீட்டு வாடகை செலவுகள், சம்பளத்தில் பெரும் பகுதியை எடுத்துக்கொள்வதால், மும்பை வாசிகள் தங்கள் வாழ்க்கைச் செலவுகளை சமாளிக்க சிரமப்படுகின்றனர்.
CREDAI-MCHI-இன் அறிக்கையின்படி, மும்பையில் 1 BHK பிளாட்டின் வாடகை செலவு ஆண்டுக்கு ரூ.5.18 லட்சம் என்று கூறப்பட்டுள்ளது. இது ஜூனியர் லெவல் ஊழியர்களின் சராசரி ஆண்டு வருமானமான ரூ.4.49 லட்சத்தை விட அதிகமாகும்.

பெங்களூரு மற்றும் டெல்லி-என்சிஆர் போன்ற நகரங்களில், 1 BHK ஃப்ளாட்டுக்கான வருடாந்திர வாடகை, மும்பையின் செலவில் கிட்டத்தட்ட பாதி, அதாவது பெங்களூரில் ரூ.2.32 லட்சம் மற்றும் ரூ.2.29 லட்சமாகும்.
பெங்களூரு மற்றும் டெல்லியில் உள்ள ஊழியர்களின் சராசரி ஆண்டு சம்பளம் ரூ.5.27 லட்சம் மற்றும் ரூ.4.29 லட்சமாக உள்ளதாக அறிக்கை கூறுகிறது. மேலும் அந்த அறிக்கையில் மும்பையில் உள்ள மக்களின் செலவழிக்கக் கூடிய வருமானம் குறைவாக உள்ளதை சுட்டிக்காட்டுகிறது. வாடகை செலவு, உணவு மற்றும் பில்கள் போன்ற அத்தியாவசிய செலவுகளை செலுத்திய பிறகு ஒரு நபரிடம் குறைவாக பணம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
மும்பையில் ஆண்டுக்கு ரூ.15.7 லட்சம் சம்பாதிக்கும் நடுத்தர நிலை ஊழியர்களுக்கு 2 BHK அடுக்குமாடி குடியிருப்பில் குடியேற கிட்டதட்ட பாதி சம்பளத்தை செலவு செய்ய வேண்டியுள்ளது. அதாவது சுமார் 7.5 லட்சத்தை வாடகைக்காக ஒதுக்க வேண்டியதாக அறிக்கை கூறுகிறது. இது பெங்களூர் டெல்லி போன்ற நடுத்தர அளவிலான ஊழியர்களின் வாடகை செலவை விட அதிகமாகும்.
அதேபோல பெங்களூருவில் ஆண்டுக்கு ரூ.16.45 லட்சம் சம்பாதிப்பவர்கள் வாடகைக்காக ரூ.3.90 லட்சத்தை செலவழிக்கின்றனர். டெல்லியில் ரூ.14.7 லட்சம் சம்பாதிப்பவர்கள் வாடகைக்காக 3.55 லட்சத்தை செலவிடுவதாகவும் அறிக்கை கூறுகிறது.
ஆனால் மும்பையில் ஆண்டுக்கு சுமார் 33.95 லட்சம் சம்பாதிக்கும் சீனியர் லெவல் ஊழியர்களும் 3 BHK வீட்டுக்கு ரூ.14.5 லட்சத்தை வாடகைக்காக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு நேர் மாறாக பெங்களூரு மற்றும் டெல்லியில் மூத்த ஊழியர்கள் இதே போன்ற தங்குமிடத்திற்கு ரூ.6.25 லட்சம் மற்றும் ரூ.5.78 லட்சத்தை செலவழிக்கின்றனர். இது மும்பையை விட மிகக் குறைவாகவே உள்ளது. இதன் காரணமாக பல சீனியர் லெவல் ஊழியர்களும் தங்களுடைய சேமிப்பை அதிகரிக்க பிற மலிவு விலை நகரங்களுக்கு குடி பெயர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications