1 ரூபாயுடன் சென்னை வந்து.. ரூ.6,000 கோடி பிசினஸை உருவாக்கிய நபர்! கோல்டு வின்னருக்கு பின்னடி இப்படி ஒரு கதையா?

தொழில் தொடங்க எல்லா வசதிகளும் இருந்தும் சிலர் தோல்வி பயத்தினால் பின் வாங்குகின்றனர். ஆனால் கையில் வெறும் 1 ரூபாயை வைத்துக் கொண்டு தொழில் தொடங்கிய ஒருவர்.. இன்று பல ஆயிரம் கோடி மதிப்புள்ள ஒரு பெரு நிறுவனத்தை உருவாக்கி இருக்கிறார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?

வாழ்க்கையில் முன்னேறுவதற்கு கடின உழைப்பும், வைராக்கியமும் முக்கியம் என்பதை ஜி.முனுசாமி நிரூபித்துக் காட்டியுள்ளார். 1 ரூபாயை வைத்துக் கொண்டு சென்னைக்கு வந்த அவர்.. இன்று பல கோடி மதிப்புள்ள "காளீஸ்வரி ரிஃபைனரி" என்ற மாபெரும் நிறுவனத்தை நிறுவியுள்ளார். இதன் மூலமாக கோல்டு வின்னர் என்னும் சமையல் எண்ணெயை மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளார்.

1 ரூபாயுடன் சென்னை வந்து.. ரூ.6,000 கோடி பிசினஸை உருவாக்கிய நபர்! கோல்டு வின்னருக்கு பின்னடி இப்படி ஒரு கதையா?

சிறுவயதில் தொடங்கிய பயணம்: ஜி.முனுசாமி தன்னுடைய 15-வது வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறினார். வேலை தேடி எங்கெங்கோ அலைந்து ஒரு மளிகை கடையில் வேலைக்கு சேர்ந்தார். அந்த கடை தான் அவருக்கு வர்த்தகத்தின் அடிப்படை மற்றும் வாடிக்கையாளர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்ற விஷயங்களை கற்றுத் தந்தது.

கோபிநாத் உடனான ஒரு யூடியூப் இன்டர்வியூவில் தன்னுடைய வாழ்க்கை குறித்த பல சுவாரசியமான விஷயங்களை முனுசாமி பகிர்ந்திருந்தார். அதில் தன் பெற்றோரின் உழைக்கும் குணம் தன்னை எப்படி மாற்றியது என்பது குறித்தும் கூறியிருந்தார். யாரிடமும் எதற்கும் கையேந்த கூடாது என்ற பெற்றோரின் அறிவுரையே அவருடைய வணிக வாழ்க்கைக்கு அடித்தளமாக அமைந்தது.

1 ரூபாயுடன் சென்னை வந்து.. ரூ.6,000 கோடி பிசினஸை உருவாக்கிய நபர்! கோல்டு வின்னருக்கு பின்னடி இப்படி ஒரு கதையா?

இன்டர்வியூவில் கோபிநாத் 1962-ஆம் ஆண்டில் நீங்கள் ஒரு ரூபாய் நாணயம் மற்றும் ஒரே ஒரு சட்டையோடு சென்னைக்கு வந்ததாக சொல்வார்கள். அப்போது உங்களுடைய மனநிலை எப்படி இருந்தது என்று கேட்பார். அதற்கு முனுசாமி காலத்துக்கும் பாதுகாப்பாக இருக்கிறது என்பதற்காக கடையிலேயே இருக்கக் கூடாது என்று பதில் அளிப்பார்.

அவர் மளிகை கடையில் பணிபுரிந்த போது தன் தேவையை ஓட்டும் அளவிற்கு வருமானம் இருந்துள்ளது. இருந்தும் தன்னுடைய கம்ஃபர்ட் சோனை தாண்டியது தான் அவர் இவ்வளவு பெரிய சாதனை எட்ட காரணமாக அமைந்தது.

மார்க்கெட் பற்றிய விபரங்களை எப்படி தெரிந்து கொண்டீர்கள் என்று கோபிநாத் கேட்க.. வியாபாரிக்கு உடம்பெல்லாம் கண்ணிருந்தால்தான் தொழில் செய்ய முடியும் என்று பதில் அளித்திருப்பார்.

1968-ஆம் ஆண்டு தொடங்கிய வணிகம்: 1968 ஆம் ஆண்டில் சொந்தமாக தொழில் தொடங்கினார் முனுசாமி. 1973-ஆம் ஆண்டில் சென்னையில் சமையல் எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட ஆரம்பித்தார். இவர் தொழில் தொடங்கும் காலத்தில் சமையல் எண்ணெய் விற்பனை செய்வதற்கு பாக்கெட் எதுவும் கிடையாது. சில்லறை விற்பனை மட்டுமே நடந்தது.

இதற்கென தனியாக பாட்டில்களை பயன்படுத்தினர். வீட்டில் இருந்து எடுத்து வரப்படும் டப்பாக்களில் எண்ணெய் விற்பனை செய்யப்பட்டது. இதை மாற்ற நினைத்தார் முனுசாமி. இன்னும் தரமான முறையில் பாக்கெட்களில் அடைத்து விற்பனை செய்தால் மக்கள் மத்தியில் பிராண்டை கொண்டு சென்றுவிடலாம் என்று யோசித்தார்.

அவருடைய சிந்தனையின் விளைவாகப் பிறந்தது தான் "கோல்ட் வின்னர்" என்ற மாபெரும் பிராண்ட். ஆரம்பத்தில் உடனடியாக லாபம் பார்க்க வேண்டும் என்று முனுசாமி நினைக்கவில்லை. வாடிக்கையாளர்களிடம் நம்பிக்கை பெற வேண்டும் என்பதில் தான் உறுதியாக இருந்தார்.

கோல்டு வின்னரை விற்பனை செய்ய தொடங்கியது முதல் தரமான பொருட்களையும், சீரான விலையையுமே நம்பி இருந்தார். நாட்கள் செல்ல செல்ல முதல் முறை வந்த வாடிக்கையாளர்கள் மீண்டும் மீண்டும் எண்ணெய் வாங்கத் தொடங்கினர்.

காலத்திற்கு ஏற்ப சிறுக சிறுக மாறிய வணிகம்: மார்க்கெட்டில் தொடர்ந்து புதுப்புது பிராண்டுகள் எண்ணெய் விற்பனையைத் தொடங்கியது. இதனால் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தனது தயாரிப்பையும் விரிவு படுத்தினார். இவருடைய கோல்டு வின்னர் பிராண்ட் சந்தைக்கு வந்த போது பாமாயிலும் பிரபலமாகத் தொடங்கியது.

காளீஸ்வரி ரிஃபைனரி நிறுவனத்தில் சூரியகாந்தி எண்ணெயோடு சேர்த்து நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், ரைஸ் பிரான் ஆயில் என பிற தயாரிப்புகளையும் கொண்டு வந்தார். சென்னை மட்டுமின்றி சிங்கப்பூர், ஓமன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை, மலேசியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா என பெரும்பாலான நாடுகளுக்கு இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் வெற்றிகரமாக ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

பிசினஸை பொருத்தவரையில் லாபம் சீராக இருக்காது. ஒரு வருடம் நல்ல லாபம் கிடைக்கும். மறு வருடம் அவ்வளவாக லாபம் இருக்காது. இதே நிலைதான் காளீஸ்வரி பிராண்டுக்கும் ஏற்பட்டது. Tracxn தரவுகளின் படி காளீஸ்வரி ரிஃபைனரி நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வருவாய் 2016-ஆம் ஆண்டு நிதியாண்டில் ரூ.3,289 கோடியாக இருந்தது.

2022-ஆம் நிதியாண்டில் ரூ.5,584 கோடியை எட்டி சாதனை படைத்தது. பின்னர் 2023-ஆம் நிதியாண்டில் ரூ5,330 கோடியாகவும், 2024-ஆம் நிதியாண்டில் ரூ.4,742 கோடியாகவும் சரிந்தது. ஆனால் இதிலிருந்து மீண்டு மீண்டும் 2025-ஆம் நிதியாண்டில் வணிகம் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பியது. 2024-ஆம் ஆண்டைக் காட்டிலும் வருமானம் சுமார் 24 சதவீதம் வரை அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியது.

நிறுவனத்தின் லாபம் 2024-ஆம் நிதியாண்டில் ரூ.110 கோடியாக இருந்தது. ஆனால் 2025-ஆம் நிதியாண்டில் ரூ.233 கோடியாக கிட்டத்தட்ட 2 மடங்கு அதிகரித்தது. முனுசாமிக்கு இந்த வெற்றி உடனடியாக கிடைக்கவில்லை. பல பிரச்சினைகளை எதிர் கொண்ட பிறகே இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கியிருக்கிறார்.

ஆனால் தனக்கு எவ்வளவோ பிரச்சனைகள் ஏற்பட்ட போதிலும் கடன் வாங்குவதை மட்டும் தவிர்த்து வந்தார். தொழில் தொடங்கி ஆரம்பத்தில் லாபம் கிடைத்தாலும்.. அந்த லாபத்தையே மீண்டும் முதலீடு செய்து படிப்படியாக வளர வேண்டும் என்ற கொள்கையை பின்பற்றினார்.

இன்றைய இளம் தொழில் முனைவோருக்கு முனுசாமி சொல்லும் அறிவுரை என்ன தெரியுமா? தேவையற்ற கடனில் சிக்கிக் கொள்ளாமல் கவனமாக வணிகத்தை தொடங்க வேண்டும் என்பதுதான். வெறும் ஒரு ரூபாயுடன் சென்னைக்கு வந்த முனுசாமி இன்று பல்லாயிரம் கோடி மதிப்புள்ள ஒரு சாம்ராஜ்யத்தை நிறுவியிருக்கிறார். விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால் எதுவும் சாத்தியம் என்பதற்கு இவருடைய கதை ஒரு சிறந்த உதாரணம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+