ஹைதராபாத் நகரின் பெரும் பணக்காரர் மற்றும் உலகின் பணக்கார விஞ்ஞானிகளில் ஒருவர் தான் முரளி. பள்ளியில் 2 முறை ஃபெயில் ஆகியும் எப்படி 97500 கோடி ரூபாய் சம்பாதித்தார்..?
முரளி திவி ஆந்திராவில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் பிறந்து வளர்ந்தவர். இவரது தந்தை ஒரு அரசு ஊழியர், ஒரு கட்டத்தில் முரளி திவியின் தந்தை தனது மொத்த குடும்பத்தையும் தனது மாதாந்திர ஓய்வூதியமான 10,000 ரூபாயில் நடத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் முரளி திவி தனது 12 ஆம் வகுப்பு தேர்வில் இரண்டு முறை தோல்வியடைந்தார், ஆனால் அவர் நம்பிக்கையை இழக்காமல் படித்து தேர்ச்சி பெற்றது மட்டும் அல்லாமல் எதிர்காலத்தை பிரம்மாண்டமாக உருவாக்க கடுமையாக உழைக்க முடிவு செய்தார்.
பள்ளிப்படிப்பை வெற்றிகரமாக முடித்த முரளி திவி தனது பட்டப்படிப்பை மணிபால் அகாடமி ஆஃப் ஹையர் எடுகேஷன் நிறுவனத்தில் முடித்தார். இதை தொடர்ந்து முரளி திவி மருந்தியல் அறிவியல் கல்லூரியில் இளங்கலை பார்மசி படிப்பை முடித்தார்.
1976 ஆம் ஆண்டில், முரளி திவி தனது 25 வயதில் அமெரிக்காவிற்குச் சென்று மருந்தகத்தில் பணியாற்றத் தொடங்கினார். முரளி திவி அமெரிக்கா செல்லும் போது, அவர் கையில் வெறும் 500 ரூபாய் மட்டுமே இருந்துள்ளது. ஆனால் மனதளவில் அதிகப்படியான நம்பிக்கையும், விடாமுயற்சி உடன் இருக்கும் வைராக்கியமும் இருந்தது.
அமெரிக்காவில் முரளி திவி டிரினிட்டி கெமிக்கல் மற்றும் ஃபைக் கெமிக்கல்ஸ் போன்ற நிறுவனங்களில் பணிபுரிந்து ஆண்டுக்கு 65,000 டாலர் வரையில் சம்பாதித்தார். சில வருடங்கள் அமெரிக்காவில் பணிபுரிந்த பிறகு, முரளி திவி தனது கைகளில் 40,000 அமெரிக்க டாலர்களுடன் இந்தியா திரும்ப முடிவு செய்தார்.
இந்தியா திரும்பிய முரளி திவி-க்கு எதிர்கால திட்டங்கள் எதுவும் இல்லாமல் தான் வந்தார். இந்த நிலையில் 1984 ஆம் ஆண்டில் முரளி திவி மற்றும் கல்லம் அஞ்சி ரெட்டியுடன் இணைந்து செமினார் (Cheminor) என்னும் நிறுவனத்தை உருவாக்கினார். இந்த நிறுவனம் 2000 ஆம் ஆண்டில் டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ் உடன் இணைக்கப்பட்டது.
முரளி திவி 1990 ஆம் ஆண்டு தனது கனவு நிறுவனமான Divi's Laboratories-ஐ தொடங்க முடிவு செய்வதற்கு முன்பு டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ் நிறுவனத்தில் சுமார் 6 ஆண்டுகள் பணிபுரிந்தார். Divi's Labs நிறுவனம் API மற்றும் இன்டர்மீடியேட் மருத்துகளை உற்பத்தி செய்து அதை சந்தைப்படுத்தும் திட்டத்தை அடிப்படையாக வைத்து துவங்கப்பட்டது.
இந்த திட்டம் கைகொடுத்த நிலையில் 1995 ஆம் ஆண்டில் முரளி திவி தெலுங்கானாவில் உள்ள சௌடுப்பல் (Choutuppal) பகுதியில் தனது முதல் உற்பத்தி ஆலையை நிறுவினார். 2002 ஆம் ஆண்டில், அவர் நிறுவனத்தின் இரண்டாவது உற்பத்தி தளத்தை விசாகப்பட்டினத்திற்கு அருகில் தொடங்கினார்.
இந்த நிலையில் முரளி திவி-யின் Divi's Laboratories ஹைதராபாத்தை தளமாகக் கொண்டு இந்தியா முழுவதிலும், உலகின் பல நாடுகளிலும் வர்த்தகம் செய்ய துவங்கிய நிலையில் மார்ச் 2022 உடன் முடிவடைந்த நிதியாண்டில் சுமார் 88 பில்லியன் வருவாய் ஈட்டியுள்ளது.
இதன் மூலம் Divi's Labs நிறுவனரான முரளி திவியின் நிகர சொத்து மதிப்பு சுமார் 53,000 கோடி ரூபாய். அவர் உருவாக்கிய Divi's Laboratories-ன் மொத்த சந்தை மதிப்பு 97,476 கோடி ரூபாய். 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் தான் ஒருவரின் வாழ்க்கையே மாற்றும் என கூறப்படும் வேளையில் முரளி திவி-யின் விடாமுயற்சி பலருக்கும் உத்வேகமாக இருக்கும்.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications