தமிழ்நாட்டில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் மாபெரும் வர்த்தக சாம்ராஜ்ஜியமான முருகப்பா குழுமம், தனது வர்த்தகம், சொத்துக்களைத் தனது குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் பிரிப்பதற்கு 2 ஆண்டுகளுக்கும் அதிகமாக முயற்சி செய்து வருகிறது. ஆனால் இந்த பணியில் முருகப்பா குடும்ப உறுப்பினர்கள் தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர்.
முருகப்பா குரூப் சாம்ராஜ்ஜியத்தை நிர்வாகம் செய்யும் குடும்பம் ஐந்து தலைமுறைகளாக ஒன்றாக பணியாற்றிய பிறகு, இந்த 9 பில்லியன் டாலருக்கும் அதிகமான வருவாய் கொண்ட பன்முகப்படுத்தப்பட்ட வணிக சாம்ராஜ்யத்தை மூன்று குடும்பங்களுக்குச் சமமாகப் பிரிப்பதற்கான திட்டம் தீட்டப்பட்டு வரும் வேளையில் இதில் தொடர்ந்து தடை பெற்று வருவதாக எக்னாமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

முருகப்பா குரூப் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய சி.ஜி. பவர் நிறுவனத்தை, டியூப் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் ஆப் இந்தியா (TII) வாங்கிய நிலையில் இதன் மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்த தடாலடி வளர்ச்சி குடும்பத்தின் வெவ்வேறு பிரிவுகளுக்கு இடையே முக்கிய பிரச்சனையாக மாறியுள்ளது.
முருகப்பா குரூப் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய ஏஎம் முருகப்பா செட்டியார்-ன் 3 மகன்களான ஏஎம்எம் முருகப்பா செட்டியார், ஏஎம்எம் வெள்ளையன் செட்டியார், ஏஎம்எம் அருணாச்சலம் செட்டியார் ஆகியோரின் வாரிசுகள் தான் தற்போது இந்த சாம்ராஜ்ஜியத்தை நிர்வாகம் செய்து வருகின்றனர். இந்த 3 குடும்பங்கள் மத்தியில் தான் தற்போது சொத்துக்களும், வர்த்தகங்களும் பிரிக்கப்பட உள்ளது.
வெண்ட் இந்தியா மற்றும் சாந்தி கியர்ஸ் உள்ளிட்ட நான்கு முருகப்பா குழும நிறுவனங்களின் பங்குகள் 2023 ஆம் ஆண்டில் 50% க்கும் அதிகமான லாபத்தைத் தனது முதலீட்டாளர்களுக்குக் கொடுத்துள்ளது. ஆனால் டிஐஐ வாங்கிய சி.ஜி. பவரின் பங்கு விலை 15 மடங்கு அதிகரித்துள்ளது.
முருகப்பா குழுமத்தின் முக்கிய நிதி சேவை நிறுவனமான சோழமண்டலம் இன்வெஸ்ட்மெண்ட் அண்ட் ஃபைனான்ஸ் கோ லிமிடெட்டின் செயல்திறன் மற்றொரு சிறப்பம்சமாகும். இது ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமான சந்தை மதிப்பீட்டைக் கொண்டுள்ள ஒரு நிறுவனமாகும்.
சில முருகப்பா குழுமத்தின் கீழ் இயங்கும் பல நிறுவனங்களின் மதிப்பு அதிகரித்தாலும், குடும்பத்தின் மூன்று பிரிவுகளில் குறைந்தது இரண்டு பிரிவுகளுக்கும் இடையே கடுமையான கருத்து வேறுபாடுகள் சொத்து பிரிவில் இருந்து வருகிறது.
தற்போது இந்த சாம்ராஜ்ஜியத்தில் மூன்று சமமான குழு நிறுவனங்களை எவ்வாறு பிரிப்பது என்பது குறித்தும் பெரும் பிரச்சனையாக உள்ளது, இதே வேளையில் பல ஆண்டுகளாக இருந்து வரும் பழைய குடும்ப ஒப்பந்தத்தின் விதிமுறைகளைத் திருத்தாமல் இதை எப்படி செய்வது குறித்துத் தொடர்ந்து வாதம் எழுந்துள்ளது. முருகப்பா குடும்பம் Ambadi Investment என்ற ஹோல்டிங் நிறுவனத்தின் வாயிலாகப் பல நிறுவனங்களின் பங்குகளை வைத்துள்ளது.
முருகப்பா குழுமம் 2024 பார்க்ளேஸ் - ஹூரன் இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க குடும்ப வணிகங்களில் 10வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் சமீபத்தில் முகேஷ் அம்பானி, காட்ரேஜ், தமிழ்நாட்டில் டிவிஎஸ் சாம்ராஜ்ஜியங்கள் தனது குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் சொத்துக்களைப் பிரித்துள்ளனர்.
124 வயதான இந்த முருகப்பா குழுமத்தில் சுமார் 30 நிறுவனங்கள் உள்ளன, அவற்றில் மூன்றில் ஒரு பங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் சர்க்கரை, உரங்கள், அப்ரேசிவ்ஸ் பொருட்கள், சைக்கிள்கள், பாலிமர்கள், நிதி சேவைகள் மற்றும் இன்ஜினியரிங் துறைகளில் உள்ளது.
நீண்ட கால சண்டையின் பிறகு, மறைந்த எம்.வி. முருகப்பன் அவர்களின் மூத்த மகள் வள்ளி அருணாச்சலம் மற்றும் குடும்பத்தின் மற்றவர்களுக்கு இடையேயான பிரச்சனைக்குத் தீர்வு காணப்பட்ட ஒரு வருடத்திற்குள் சொத்துக்களை 3 குடும்பத்தினர் மத்தியில் சமமாக பிரிப்பதில் கருத்து வேறுபாடு நிலவுகிறது.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications