டெல்லி: முருகப்பா குழுமத்தை சேர்ந்த எம்வி முருகப்பனின் மூத்த மகள் வள்ளி அருணாச்சலம், தங்களுக்கு 8.15% பங்குகள் உள்ள அம்பாடி இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட் நிறுவனத்தில் பதவி மறுக்கப்பட்டதாகவும், இதனால் அப்பங்குகளை விற்க உள்ளதாகவும், பங்குகளை வாங்க மறுத்தால் பதவி வேண்டும் என்றும் கடந்த வாரம் கூறியிருந்தார்.
இந்த நிலையில் அவரது உறவினர்கள் அதற்கு ஏதேனும் மறுப்பு தெரிவித்தால், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தார்.
கடந்த 1900ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்தின் மதிப்பு சுமார் 36,893 கோடி ரூபாயாகும். இந்தியாவில் உள்ள முன்னணி நிறுவனங்களில் ஒன்றான இது, சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு சுமார் 28 தொழில்களை நிர்வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஐந்தாவது தலைமுறை
முருகப்பா குழுமம் கடந்த 1,900லிருந்து நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக சொல்லப்போனால் ஐந்து தலைமுறைகளாக குடும்ப வணிகத்தை மேற்கொண்டு வருகிறது. அதிலும் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஒரு குடும்ப வணிகமாகும். இதன் ஆரோக்கியமான நிர்வாக நடைமுறைகள் பலரால் கவனித்து வரப்படும் நிலையில், இது அடுத்த தலைமுறையினருக்கும் ஒரு எடுத்துகாட்டாக இருக்கும் என்றும் சுட்டிக் காட்டப்படுகிறது.
பதவி பிரச்சனை
இந்த நிலையில் முருகப்பா குழுமத்தை சேர்ந்த முன்னாள் நிர்வாக தலைவரான எம்வி முருகப்பனின் மூத்த மகள் தான் வள்ளி அருணாச்சலம். முருகப்பா குழுமம் பங்கு வைத்திருக்கும் நிறுவனமான அம்பாடி இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட் நிறுவனத்தில் வள்ளி அருணாச்சலத்திற்கு பதவி மறுக்கப்பட்டதாக கடந்த சில வாரங்களாகவே கூறப்பட்டு வருகிறது.
பெண்களின் பங்கு இல்லை
முருகப்பா குழுமம் போன்ற தலைமுறை தலைமுறையாக வியாபாரம் செய்து வரும் ஒரு நிறுவனத்தில், பெண்களின் பங்கு இன்றைய நாளிலும் பெரியதாக இல்லை. ஏனெனில் சட்ட வாரிசுகள் வெளிப்படையாக ஆண்களே உள்ளனர். எனினும் இந்தியாவில் பல குடும்ப வணிகத்தில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வரும் நிலையில், வரும் காலத்தில் இது பெரிய மாற்றங்களை காணலாம் என்று கூறுகின்றனர் வல்லுனர்கள்.
பெண்களின் பங்கு அதிகரிக்கும்
மேலும் லூபின், டிவிஎஸ் போன்ற நிறுவனங்களை சேர்ந்த பெண் வாரிசுகள் இன்றும் வணிகத்தில் கலக்கி வருகின்றனர். எனினும் முருகப்பா போன்ற குழுமங்களில் இன்று வரையில் ஆண் வாரிசுகளே பதவி வகித்து வருகின்றனர். இதனால் எதிர்காலத்தில் இதுபோன்ற வழக்குகள் வரும் காலத்தில் அதிகரிக்கலாம் என்றும் பெரும்பாலானவர்கள் நம்புகின்றனர். ஆக எதிர்காலத்தில் இந்திய குடும்பத் தலைமையிலான வணிகங்கள் பெண்கள் சக்தியை பயன்படுத்தலாம் என்றும் நம்பப்படுகிறது.
திருத்தம் முக்கியம்
வள்ளி அருணாச்சலத்தின் பிரச்சனை தீவிரமாக மாறுவதற்கு முன்பு அரசியலமைப்பை மதிப்பாய்வு செய்து, திருத்தம் செய்வது முக்கியம் என்று இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர். 120 வயதான முருகப்பா குழுமத்தின் நீண்ட பயணத்தை பேங்க் குறிப்பிடுகிறார். இது 4-வது அல்லது 5வது தலைமுறை உறுப்பினர்களால் வழி நடத்தப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
ஆணதிக்கத்தை தவிர்த்து திறனை கருத்தில் கொள்ள வேண்டும்
நிறுவனங்களில் ஆணாதிக்க சமூக மனப்பான்மையை பாலின விஷயங்களை கருத்தில் கொள்ளாமல், திறனை உள்ளடக்கிய ஒரு மன நிலையை ஏற்படுத்த வேண்டும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். ஆக நிச்சயம் வள்ளி அருணாச்சலத்தின் போராட்டம், பின்னால் வரும் பல பெண்களுக்கு வெற்றி பாதையாக மாறும் என்று நாமும் நம்புவோம்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications