தமிழ்நாட்டின் முருகப்பா குழுமத்தின் கீழ் இயங்கும் சிஜி பவர் அண்ட் இண்டஸ்ட்ரியல் சொல்யூஷன்ஸ் (CG Power) அமெரிக்க டேட்டா சென்டர் துறையில் பெரிய அளவில் நுழைந்துள்ளது. ஏஐ தொழில்நுட்பத்திற்கு டேட்டா சென்டர் தான் முதுகெலும்பாக இருக்கும் வேளையில் இத்துறையில் வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள் தற்போது முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகப்படியான கவனத்தை ஈர்த்து வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்க நிறுவனமான டால்கிராஸ் இன்டிகிரேட்டட் லாஜிஸ்டிக்ஸ் சொல்யூஷன்ஸிடமிருந்து சுமார் ரூ.900 கோடி மதிப்பிலான பவர் டிரான்ஸ்பார்மர் சப்ளை ஆர்டரை பெற்றுள்ளது சிஜி பவர் நிறுவனம். ஒரு டேட்டா சென்டர் அமைப்பதிலும், இயக்குவதிலும் வெறும் தொழில்நுட்பம் மற்றும் சிப் மட்டும் போதாது, கூலிங் சிஸ்டம் முதல் மின்சாரம் வரையில் பல நிறுவனங்கள் பணியாற்ற வேண்டியுள்ளதால், தற்போது உலகம் முழுவதும் டேட்டா சென்டர் உருவாக்குவதிலும், இயக்குவதிலும் இருக்கும் 2ஆம் நிலை நிறுவனங்கள் முக்கியமானதாக மாறியுள்ளது.

சிஜி பவர் நிறுவனம் ஜனவரி 18 அன்று பங்குச் சந்தைக்கு சமர்ப்பித்த அறிக்கையில் இந்த 900 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம் குறித்து முதலீட்டாளர்களும், பங்குச்சந்தைக்கும் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இந்த 900 கோடி ரூபாய் ஆர்டர் என்பது சிஜி பவர் குழுமத்தின் வரலாற்றில் இதுவரை பெற்ற "மிகப்பெரிய சிங்கிள் ஆர்டர்" என்று இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் இது நேரடி ஏற்றுமதி ஆர்டர் என்றும், மேலும் இவை ஹைபர்ஸ்கேல் டேட்டா சென்டர்-களுக்கு ஏற்ப தனிப்பட்ட முறையில் தயாரிக்கப்பட்ட பவர் டிரான்ஸ்பார்மர்களாகும். இந்த ஆர்டரை சிஜி பவர் சுமார் 12 முதல் 20 மாத காலத்தில் நிறைவேற்றப்படும் என அறிவித்துள்ளது.

சிஜி பவர் ஏற்கனவே செமிகண்டக்டர் துறையில் பெரிய அளவில் நுழைந்துள்ளது வேளையில் தற்போது புதிதாக டேட்டா சென்டர் வர்த்தகத்திலும் இறங்கியுள்ளது. சிஜி பவர் அண்ட் இண்டஸ்ட்ரியல் சொல்யூஷன்ஸ் (CG Power) துணை நிறுவனமான CG Semi ஆகஸ்ட் 2025-ல் குஜராத்தின் சனந் என்னும் பகுதியில் OSAT ஆலையை தொடங்கியது.
இந்நிறுவனம் ஜப்பான் நாட்டை சேர்ந்த ரெனெசாஸ் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தாய்லாந்தின் ஸ்டார்ஸ் மைக்ரோஎலக்ட்ரானிக்ஸ் உடன் இணைந்து புதிய சிஜி செமி என்ற நிறுவனத்தை துவங்கி தற்போது செமிகண்டக்டர் துறையில் இயங்கி வருகிறது. இந்த திட்டத்திற்காக 7,600 கோடி ரூபாய் முதலீட்டை 5 ஆண்டுகளில் இந்த திட்டம் நிறைவேற்றப்படும்.
சிஜி செமி நிறுவனம் இந்தியாவில் ஆட்டோமோட்டிவ், நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ், தொழில்துறை பயன்பாடுகளுக்கான "மேட்-இன்-இந்தியா" சிப்களை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

சிஜி பவர் நிறுவனம் தமிழ்நாட்டின் பழமையான வர்த்தக சாம்ராஜ்ஜியங்களில் ஒன்றான முருகப்பா குழுமத்தின் கீழ் இயங்குகிறது. தமிழ்நாட்டை தலைமையிடமாகக் கொண்ட இக்குழுமம் 2020-ல் அவந்தா குழுமத்திடமிருந்து சிஜி பவர் நிறுவனத்தின் கட்டுப்பாட்டை பெற்றது.
டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆஃப் இந்தியா லிமிடெட் மூலம் சுமார் 56% பங்குதாரர் பங்கு உள்ளது முருகப்பா குழுமம். சிஜி பவர் நிறுவனத்தை முன்பு க்ராம்டன் கிரீவ்ஸ் என்று அழைக்கப்பட்ட இந்நிறுவனம் இப்போது முருகப்பா குழுமத்தின் இன்ஜினியரிங் மற்றும் கேப்பிட்ல் கூட்ஸ் பிரிவின் முக்கிய பகுதியாக உள்ளது. தற்போது டேட்டா சென்டர் துறையில் இறங்கியது மூலம் புதிய வர்த்தக பாதையை தேர்வு செய்துள்ளது.
வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் சிஜி பவர் நிறுவனத்தின் பங்குகள் 2.82 சதவீதம் சரிந்து 560.65 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications