அண்மை காலமாக இந்திய மக்களிடையே ஆர்கானிக் வகை உணவுகளுக்கு வரவேற்பு பெரிய அளவில் அதிகரித்துள்ளது. விலை எவ்வளவு இருந்தாலும் உரம் இல்லாமல் இயற்கையான முறையில் கிடைக்கும் பொருட்களை வாங்க முன்னுரிமை கொடுப்பது அதிகரித்துள்ளது. இதன் அடிப்படையில் உருவான பெங்களூருவை சேர்ந்த ஒரு ஸ்டார்ட் அப்பின் வெற்றி கதை தான் இது.
நுவேடோ (Nuvedo): பெங்களூருவை சேர்ந்த ஜஸித் ஹமீத் மற்றும் பிரித்வி கினி ஆகியோர் இணைந்து காளான் வளர்ப்பை அடிப்படையாக கொண்டு நுவேடோ நிறுவனத்தை உருவாக்கி வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர்.

பிட்ஸ் பிலானியில் உற்பத்தி துறை சார்ந்த பொறியியல் படிப்பு முடித்தவர் ஜஸீத். இவர் ஆதித்யா பிர்லா ஃபேஷன் நிறுவனத்தில் ஆப்ரேஷன்ஸ் மேனேஜராக பதவி வகித்தார். மற்றொரு புறம் பிரித்வி தொழில்நுட்ப துறையில் பணியாற்றி வந்தார்.
6 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் சந்தித்த போது காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டனர். இருவருக்குமே சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையிலான உணவுகள் மீது ஆர்வம் இருந்தது.
கொரோனா காலத்தில் ஏற்பட்ட யோசனை: அமெரிக்காவை சேர்ந்த ஒரு நண்பர் மூலம் காளான் சாறு குறித்த அறிமுகம் கிடைத்துள்ளது. அமெரிக்காவில் இருந்து அதனை வாங்கி இருவரும் பயன்படுத்தி வந்துள்ளனர்.
இருவருக்கும் அலர்ஜி உள்ளிட்ட பிரச்னைகள் இருந்த நிலையில் காளான் சாறு அதனை குணப்படுத்தியது. எனவே தொடர்ச்சியாக அமெரிக்காவில் இருந்து காளான் சாறினை வரவழைத்து உட்கொண்டுள்ளனர்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் போடப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக இவர்களால் அமெரிக்காவில் இருந்து காளான் சாறை வரவழைக்க முடியவில்லை. எனவே இந்தியாவிலேயே கிடைக்குமா என தேட தொடங்கினர். அப்போது இந்தியாவில் அவ்வாறு பொருட்கள் கிடைப்பதில்லை என உணர்ந்து, அதையே தங்களின் ஸ்டார்ட் அப்-ஆக மாற்றினர்.
இப்படி உதயமானது தான் நுவேடோ. பெங்களூரை அடிப்படையாக கொண்டு இந்த நிறுவனம் காளான் வளர்ப்பு தொகுப்பு மற்றும் காளான் சாறுகளை விற்பனை செய்து வருகிறது. இவர்களிடம் காளான் வளர்ப்பு தொகுப்பை வாங்குபவர் வீட்டிலேயே காளானை வளர்க்க முடியும். பல்வேறு வகையான காளான்கள் இவர்களிடம் கிடைப்பதால் மக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது.
காளான் வளர்ப்பு தொகுப்பு: ரசாயனம் ஏதும் கலக்காத காளான் வளர்ப்பு முறை, அதாவது 100% இயற்கையான முறையில் இருக்கும் தொகுப்பு என்பது தான் இவர்களின் செல்லிங் பாயிண்ட்.
இயற்கையான காளான், உங்கள் வீட்டிலேயே உங்கள் கண் முன்பே வளர்த்து பயன்படுத்தி கொள்ளலாம் என விளம்பரம் செய்கின்றனர். இந்த தொகுப்பில் ஒரு கியூ ஆர் கோடு அச்சிடப்பட்டிருக்கும். அதனை ஸ்கேன் செய்தால் காளான் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு, காளான் உண்பதால் கிடைக்கும் நன்மைகள், அதில் செய்ய கூடிய உணவு வகைகள் என அனைத்து தகவல்களும் கிடைக்கும்.
2022இல் 10 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட நுவேடோ நிறுவனம் முதல் ஆண்டில் 6 லட்சம் ரூபாய் வருமானத்தையும் இரண்டாவது ஆண்டில் 25 லட்சம் ரூபாய் வருமானத்தையும் ஈட்டி தந்துள்ளது.
Story Written by : Devika
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications