சீனா வெளியிட்ட டீப்சீக் (DeepSeek) என்ற ஏஐ செயலி குறித்து தான் உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தமிழ்
திரையுலகையை சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ்
நாராயணன் டீப்சீக் செயலி சூப்பராக இருக்கிறது என கருத்து தெரிவித்துள்ளார்.
ஜெனரேட்டிவ் ஏஐ பிரிவில் முன்னோடியாக இருக்கும் அமெரிக்காவின் சாட்ஜிபிடி, ஜெமினியை மிஞ்சும் வகையில் டீப்சீக் செயலியின் செயல்பாடு இருக்கிறது. பல கோடி ரூபாய் முதலீடு செய்து கூகுள், மெட்டா, எக்ஸ் மற்றும் ஓபன் ஏஐ ஆகிய நிறுவனங்கள் சாட் ஜிபிடி, ஜெமினி உள்ளிட்ட ஏஇ செயலிகளை சந்தையில் அறிமுகம் செய்தன.ஆனால் சீனாவின் டீப் சீக் செயலி சில ஆண்டுகளிலேயே உருவாக்கப்பட்டு அறிமுகம் செய்த சில நாட்களிலேயே முதல் இடத்தை பிடித்திருக்கிறது.

இதனிடையே பிரபல இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் டீப் சீக் செயலி சிறப்பாக இருக்கிறது என தெரிவித்துள்ளார். சூர்யாவின் ரெட்ரோ மற்றும் சல்மான் கானின் சிக்கந்தர் படங்களுக்காக இசை அமைத்து வரும் சந்தோஷ் நாராயணன், தான் டீப்சீக் செயலியை பயன்படுத்தியதாகவும்
தன்னுடைய ஸ்டெம் எக்ஸ்போர்ட் நேரத்தை இது 60 சதவீதத்திற்கும் அதிகமாக குறைத்துள்ளது என்றும் பாராட்டியுள்ளார்.
டீப்சீக் பயன்படுத்தி ரிப்பர் கோடிங் செய்வது தனக்கு எளிமையானதாக இருக்கிறது என்றும் சந்தோஷ் நாராயணன் கூறியுள்ளார். செயற்கை நுண்ணறிவு மற்றும் ஜெனரேட்டிவ் ஏஐ தொழில்நுட்பங்களின் சிறந்த காலத்தை நாம் காண இருக்கிறோம் என சந்தோஷ நாராயணன் பதிவு செய்துள்ளார். இது போன்ற செயற்கை நுண்ணறிவு செயலிகளை கொண்டு படைப்பாளிகளால் சிறப்பாக செயல்பட முடியும் என சந்தோஷ்
நாராயணன் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த பதிவு ஆயிரக்கணக்கானவர்களின் பார்வையையும் லைக்குகளையும்
பெற்றுள்ளது.
ஒரு பயனர் நீங்கள் டீப்சீக் செயலியை ப்ரமோஷன் செய்கிறீர்களா என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதில் அளித்துள்ள சந்தோஷ்
நாராயணன் நான் ஏன் இதனை ப்ரமோஷன் செய்ய வேண்டும்,
ஏற்கனவே இது அமெரிக்க டெக் உலகை ஆட்டிப்படைத்து வருகிறது என பதிலளித்துள்ளார்.
பலரும் டீப் சீக் செயலியை நாங்கள் பயன்படுத்த தொடங்கி இருக்கிறோம் சாட் ஜிபிடி விட இது சிறப்பாக இருக்கிறது என கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக மறைந்த பாடகர்களின் குரலுக்கு மீண்டும் உயிர் தரக் கூடிய வகையில் ஏஐ செயலிகள் பரவலாக பயன்படுத்தப்படுவதை நாம் காண முடிகிறது.
அண்மையில் பல்வேறு திரைப்படங்களில் இசையமைப்பாளர்கள்
இவ்வாறு பாடல்களை உருவாக்கினர். விஜய்யின் நடிப்பில் வெளிவந்த கோட் படத்தில் சின்ன சின்ன கண்கள் பாடல் மறைந்த பாடகி பவதாரணியின் குரலை கொண்டு ஏஐ தொழில்நுட்பத்தால்
உருவாக்கப்பட்டது.
இதே போல இசையமைப்பாளர் அனிருத் ரஜினியின் வேட்டையன் திரைப்படத்தில் மலேசியா வாசுதேவனின் குரலை ஏஐ
தொழில்நுட்பத்தின் மூலம் கொண்டு வந்து பயன்படுத்தி இருந்தார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், தமன் உள்ளிட்டோரும் கூட ஏஐ செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர்.
Story Written By: Devika
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது



Click it and Unblock the Notifications