டெஸ்லாவின் அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டென்ஸ் பேக்கேஜை சீனாவில் ரோபோ டாக்ஸிகளில் நிறுவி சோதனை செய்ய எலான் மஸ்க் கூறியுள்ளார்.
இதுபற்றி டெஸ்லா சிஇஓவான எலான் மஸ்க் கூறுகையில், தனது நாட்டில் ரோபோ டாக்ஸிகளை பரிசோதிக்குமாறு டெஸ்லாவை சீனா வரவேற்றுள்ளது. இது ஒரு நல்ல முன்னுதாரணமாக இருக்கும் என்றார்.

ஆனாலும் சீன அரசு அதிகாரிகள் ரோபோ டாக்ஸியின் ஃபுல் செல்ஃப் டிரைவிங்- எப்எஸ்டி இயக்கத்துக்கு உடனடியாக அனுமதி அளிக்கவில்லை.
எப்எஸ்டி இயக்கத்தை முழுமையாக செயல்படுத்துவதற்கு முன்பாக டெஸ்லாவின் கார்களில் டிரைவர் அசிஸ்டென்ஸ் அம்சங்களை பரிசோதித்து உரிய டேட்டாக்களை சேகரித்து அனுமதி பெற வேண்டும்.
ஷாங்காயில் ரோபோ டாக்ஸியை அறிமுகப்படுத்த டெஸ்லா அனுமதி கோரியுள்ளதாக சீன அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. ஷாங்காயில் தான் டெஸ்லாவின் உலகின் மிகப் பெரிய உற்பத்தி ஆலை அமைந்துள்ளது.
இதுகுறித்து டெஸ்லாவும் ஷாங்காய் நகர அரசும் எந்தக் கருத்தையும் தெரிவிக்க முன்வரவில்லை.
கடந்த மாதம் சீன ப்ரீமியர் லீ ஜியாங்குடன் நடைபெற்ற சந்திப்பை அடுத்து டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் இந்த ரோபோ டாக்ஸி அறிவிப்பை வெளியிட்டார். தனது சீன பயணத்தின்போது எப்எஸ்டி இயக்கம் குறித்து விவாதிக்க இருந்ததாகத் தெரிகிறது. உரிய அரசு அனுமதிகளைப் பெற்று டேட்டா டிரான்ஸ்பர் செய்யப்பட்டால் அது மஸ்க்கின் திட்டத்துக்கு ஏதுவாக இருக்கும்.
எப்எஸ்டி என்பது ஆட்டோபைலட் சாப்ட்வேரின் முக்கியமான தானியங்கி வெர்ஷன் ஆகும். இது 2020இல் அறிமுகப்படுத்தப்பட்டது. செல்ப் பார்க்கிங், லேன் மாறுதல், டிராபிக் நேவிகேஷன் போன்ற அம்சங்கள் கொண்டது.
டெஸ்லாவின் மாடல் 3 மற்றும் ஒய் கார்களில் டேட்டா செக்யூரிட்டி ஒழுங்குமுறைகள் நிறுவப்பட்டுள்ளன.
இதனால் டெஸ்லா கார்களை சீனாவின் பல்வேறு பகுதிகளில் அனுமதிக்க லோக்கல் அரசுகளுக்கு வழிவகுக்கும். இதற்கு முன்பு இதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
பைடுவுடன் டெஸ்லா ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்மூலம் சீனாவின் மிகப் பெரிய டெக் நிறுவனத்தின் மேப்பிங் லைசன்ஸை வைத்து சீனாவின் பொது சாலைகள் பற்றிய டேட்டாக்களை பயன்படுத்தலாம்.
இதைத் தொடர்ந்து எப்எஸ்டி இயக்கத்துடன் கூடிய ரோபா டாக்ஸிகளை டெஸ்லா சீனாவில் இயக்க முடியும்.
Story written by: I.jayachandran
More From GoodReturns

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications