தனியார் துறையை சேர்ந்த நிதி நிறுவனமான முத்தூட் பைனான்ஸ் தனது செப்டம்பர் காலாண்டு அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
இது குறித்து பங்கு சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில், கடந்த செப்டம்பர் காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகரலாபம் 2.5 சதவீதம் அதிகரித்து, 930.80 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுவே கடந்த ஆண்டு இதே காலாண்டில் 908.54 கோடி ரூபாயாக அதன் நிகரலாபம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
வருவாய் அதிகரிப்பு
இந்த நிறுவனத்தின் வருவாய் 17.4 சதவீதம் வளர்ச்சி கண்டு, 2,824.19 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும், இது முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 2,406.39 கோடி ரூபாயாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளது. இதே நிர்வாகத்தின் கீழ் உள்ள ஒருங்கிணைந்த சொத்து மதிப்பு 29 சதவீதம் அதிகரித்து 52,286 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
முத்தூட்டின் துணை நிறுவனங்கள்
இந்த நிறுவனத்தின் முடிவுகளில், அதன் துணை நிறுவனங்களான முத்தூட் ஹோம்பின் (இந்தியா) லிமிடெட், பெல்ஸ்டார் மைக்ரோபைனான்ஸ் லிமிடெட், முத்தூர் இன்சூரன்ஸ் புரோக்கர்ஸ் பிரைவேட் லிமிடெட், முத்தூட் மணி லிமிடெட், ஆசியா அசெட் பைனான்ஸ் பில்சி ஆகியவை அடங்கும்.
நிகரலாபம் அதிகரிப்பு
மதிப்பாய்வு செய்யப்பட்ட இந்த காலாண்டில் முத்தூட் பைனான்ஸின் நிகரலாபம் 894.39 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 857.92 கோடி ரூபாயாக இருந்தது கவனிக்கதக்கது. இதே இந்த நிறுவனத்தின் வருவாய் 2,584.47 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 2,140.55 கோடி ரூபாயாக இருந்தது.
தங்கம் கடன் அதிகரிப்பு
இந்த நிறுவனம் கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் கடந்த காலாண்டினை விட, தங்களது போர்ட்போலியோவில் தங்க கடன் அதிகரித்துள்ளதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அதோடு இந்த காலாண்டில் தங்கம் கடன் இலாக்காவில் எங்களால் வளர்ச்சியினை அடைய முடியும் என்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
சரிவில் பங்கு விலை
இதே அதன் துணை நிறுவனங்களில் தங்கம் அல்லாத கடன் போர்ட்போலியோவில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த கடன் 11 சதவீதம் என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் இந்த நிறுவனம் 4.40 லட்சம் புதிய வாடிக்கையாளர்களுக்கு, 3,653 கோடி ரூபாய் கடனை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது கிட்டதட்ட 4% அதிகரித்து 1,190 ரூபாயாக வீழ்ச்சி கண்டு காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications