இந்திய ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை குழுவின் 2 நாள் கூட்டத்தின் முடிவுகளை ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் ரெப்போ விகிதம், பணவீக்க கணிப்பு, ஜிடிபி வளர்ச்சி கணிப்புகளை வெளியிட்டுள்ளது. இதோடு டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தில் சில முக்கியமான மாற்றத்தையும் அறிவித்துள்ளது.
இந்தியாவில் பெரும்பாலான சேவைகளுக்குத் தற்போது டிஜிட்டல் பேமெண்ட் சேவைகள் வந்துள்ள நிலையில், ஒவ்வொரு மாதமும், அல்லது காலாண்டு, அரையாண்டு, வருடாந்திர அடிப்படையில் செலுத்த வேண்டிய பேமெண்ட்-க்கும் டிஜிட்டல் சேவை உள்ளது. முன்பு இத்தகைய பேமெண்ட்கள் மக்களிடம் எவ்விதமான அனுமதியும் இல்லாமல் பேமெண்ட் நிறுவனங்கள் அவர்களின் வங்கி கணக்கில் இருந்து பெற்று வந்தது.

இதை முறைப்படுத்த முறைப்படுத்தவும், ஒழுங்கு முறைப்படுத்தவும் ஆர்பிஐ கூடுதல் அனுமதி (additional factor authentication - AFA) இல்லாமல் ரெக்கரிங் பேமெண்ட் செய்யக் கூடாது என அறிவித்தது. இதற்காக 15000 ரூபாய் என்ற அளவீட்டையும் ஆர்பிஐ கொண்டு வந்தது.
அதாவது 15000 ரூபாய்க்கு அதிகமான தொகை கொண்ட ஆட்டோ ரெக்கரிங் பேமெண்ட் சேவைக்குக் கட்டாயம் வாடிக்கையாளர்களிடம் இருந்து பணத்தை டெபிட் செய்ய OTP வாயிலாக அனுமதி பெற வேண்டும் என்ற கட்டமைப்பைக் கடந்த ஆண்டு நடைமுறைக்குக் கொண்டு வந்தது.
இன்றைய ஆர்பிஐ அறிவிப்பில், இந்த 15000 ரூபாய் வரம்பு சில முக்கியமான சேவைக்கு மட்டும் 1 லட்சம் ரூபாய் வரையில் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ரூ.1 லட்சம் வரை பணம் செலுத்துவதற்கு OTP அடிப்படையிலான அங்கீகாரம் தேவையில்லை.
இந்தப் புதிய வரம்பு மியூச்சுவல் ஃபண்ட் சந்தாக்கள், காப்பீட்டுப் பிரீமியம் சந்தாக்கள் மற்றும் கிரெடிட் கார்டு கடனை திருப்பிச் செலுத்துதல் ஆகியவற்றுக்கு மட்டுமே பொருந்தும் என்று ஆர்பிஐ விளக்கம் கொடுத்துள்ளது.
இதேபோல் மற்ற அனைத்திற்கும் தற்போது பயன்பாட்டில் இருப்பது போலவே UPI மூலம் ஆட்டோ பேமெண்ட் செலுத்தும் போது பேமெண்ட் தொகை 15,000 ருபாயை தாண்டும்போது OTP அடிப்படையிலான முன் அனுமதி கட்டாயம் தேவை என்பதையும் விளக்கியுள்ளது.
ஆர்பிஐ கூடுதல் அனுமதி (AFA) நடைமுறைப்படுத்திய பின்பு ஒரு மாதத்திற்கு 8.5 கோடி பரிவர்த்தனையின் கீழ் 2800 கோடி ரூபாய் பரிமாற்றம் நடந்து வருகிறது. இதன் மூலம் அதிகப்படியான தொகையைக் கொண்ட ரெக்கரிங் டெபாசிட் முறையை ஆர்பிஐ ஜூன் 2022 முதல் ஓழுங்குமுறைப்படுத்தியுள்ளது.
தற்போது மியூச்சுவல் ஃபண்ட் சந்தாக்கள், காப்பீட்டுப் பிரீமியம் சந்தாக்கள் மற்றும் கிரெடிட் கார்டு கடனை திருப்பிச் செலுத்துதல் ஆகிய 3 பேமெண்ட்-க்கு மட்டுமே 1500 ரூபாய் என்ற அளவீட்டை 1 லட்சம் ரூபாயாக உயர்த்தியுள்ளது.
More From GoodReturns

RBI அதிரடி நடவடிக்கை.. இனி பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!



Click it and Unblock the Notifications