மியூச்சுவல் பண்டு என்பது ஒரு முதலீட்டு குழுவினர் பல முதலீட்டாளர்களிடம் இருந்து திரட்டிய பணத்தை ஒன்றாக சேர்த்து பல வகையான பங்குகள், பாண்டுகள், பணச் சந்தை பத்திரங்களில் முதலீடு செய்வார்கள். இந்தப் பணத்தை தொழில்முறை பண்டு மேனேஜர் ஒருவர் நிர்வகிப்பார். இந்த பண்டின் நோக்கத்தைப் பொறுத்து அவர் முதலீடுகளை கவனித்து வருவார்.
நீங்கள் முதலீடு செய்வதற்கு முன்பாக மியூச்சுவல் பண்டு தொடர்பான அபாயங்களைத் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். உங்களால் ஏற்றுக் கொள்ளக்கூடிய அபாயங்கள் மற்றும் முதலீட்டு இலக்கு ஆகியவற்றைப் பொறுத்து பண்டுகளை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

மியூச்சுவல் பண்டு முதலீடுகள் சந்தை அபாயத்துக்குள்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன்பாக திட்டத்தின் அனைத்து நிபந்தனைகளையும் ஆவணங்களையும் நன்கு படித்து அறிந்து கொள்ள வேண்டும். இந்தத் திட்டங்களின் முந்தைய செயல்பாடுகள் எதிர்காலத்தில் வரக்கூடிய செயல்பாடுகளை ஒத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
மியூச்சுவல் பண்டுடன் தொடர்புடைய சில அபாயங்கள்: மார்க்கெட் ரிஸ்க்: இந்த அபாயத்தினால் உங்களது முதலீட்டின் மதிப்பு மார்க்கெட்டில் உள்ள நிலவரத்துக்கு ஏற்ப குறையக்கூடும். பொருளாதார தேக்கம், வட்டி விகிதம் உயர்வு, அரசியல் நிலைத்தன்மை இல்லாதது போன்ற பல்வேறு காரணங்களுக்காக இந்த மாற்றங்கள் நிகழும்.
பங்குகள் சார்ந்த அபாயம்: உங்களது மியூச்சுவல் பண்டில் உள்ள ஒரு குறிப்பிட்ட பங்கின் மதிப்பு குறையக்கூடும். பங்கின் நிறுவனம் கடனை செலுத்தாமலோ அல்லது நம்பகத்தன்மை குறையும்போதோ இந்த அபாயம் ஏற்படலாம்.
லிக்குடிட்டி அபாயம்: அவசரத் தேவைக்கு என உங்களது மியூச்சுவல் பங்குகளை எளிதாக அல்லது விரைவாக விற்க முடியாத அபாயம் ஏற்படலாம். இந்த நிலைமை சந்தையில் விற்பனைக்கான அதிக அழுத்தம் ஏற்படும் போதோ அல்லது மியூச்சுவல் பண்ட் கலைக்க முடியாத நிலையில் இருக்கும்போதோ ஏற்படலாம்.
நிர்வாக அபாயம்: பண்டின் மேனேஜர் லாபம் தராத முதலீட்டு முடிவுகளை எடுக்கும்போது உங்களது மியூச்சுவல் பண்டின் செயல்பாடு பாதிக்கப்படலாம்.
கட்டணங்கள் மற்றும் செலவுகள்: மியூச்சுவல் பண்ட்கள் செலவு விகிதம், எக்ஸிட் லோடு, டிரான்ஸாக்ஷன் கட்டணம் போன்ற பலவிதமான கட்டணங்களை விதிக்கக்கூடும். முதலீடு செய்வதற்கு முன்பாக இதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். மியூச்சுவல் பண்டில் உள்ள அபாயங்களின் அளவுகள் அந்த பண்டின் வகை மற்றும் முதலீட்டு இலக்குகளை சார்ந்திருக்கும்.

மியூச்சுவல் பண்டில் உள்ள அபாயங்களைக் குறைப்பதற்கான டிப்ஸ்கள்:
ஆய்வு: எந்தவொரு மியூச்சுவல் பண்டிலும் முதலீடு செய்வதற்கு முன்பாக அதன் ப்ரஸ்பெக்டஸை வாங்கி கவனமாகப் படித்து அறிய வேண்டும். ஆவணங்கள் உங்களுக்கு பண்டின் முதலீடு நோக்கங்கள், அபாயங்கள், கட்டணங்கள் மற்றும் செலவுகள் ஆகிய தகவல்களை தெரிவிக்கும்.
போர்ட்போலியோக்களை பன்முகப்படுத்துதல்: உங்களது போர்ட்போலியோவை பன்முகப்படுத்துவதால் உங்களது பணம் பல வேறு சொத்து வகைகள், முதலீடுகளில் பரவலாக்குவதால் அபாயங்கள் குறையும்.
நீண்டகாலம் முதலீடு செய்தல்: பங்குச்சந்தைகள் குறுகிய காலத்துக்கு மாறுதல்களை சந்திக்கலாம். ஆனால் நீண்டகால அடிப்படையில் மதிப்புகள் உயர்ந்துதான் உள்ளது. நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்தால் சந்தை ஏற்றத்தாழ்வுகளை சமாளிக்கலாம். அத்துடன் உங்களது பைனான்சியல் இலக்குகளை அடையும் வாய்ப்பு அதிகரிக்கும்.
உங்கள் போர்ட்போலியோவை அவ்வப்போது சரிசெய்தல்: உங்களது நிதி நிலைமையும் இலக்குகளும் மாறும் என்பதால் நீங்கள் உங்களது போர்ட்போலியோவை அவ்வப்போது ரீபேலன்ஸ் செய்து கொண்டால் உங்களது ரிஸ்க் டாலரன்ஸ் உடன் இணைந்திருப்பீர்கள்.
மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்வதற்கு முன்பாக சான்று பெற்ற நிபுணர்களுடன் ஆலோசித்து எந்தவொரு முதலீட்டு முடிவையும் எடுக்க வேண்டும். இது தெரிந்த முடிவுகளை எடுப்பதற்கும் தவறுகளை களைவதற்கும் உதவும்.
More From GoodReturns

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!



Click it and Unblock the Notifications