ரூ.1 லட்சம் முதலீடு இப்போ ரூ.15 லட்சம் வருமானம்..இதில் யாரெல்லாம் முதலீடு செய்துள்ளீர்கள்..?

நீங்கள் நீண்ட காலத்திற்கு மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்தால், நீங்கள் ஓய்வூதியத்திற்காக ஒரு பெரிய கார்பஸை உருவாக்கலாம். மாதந்தோறும் அல்லது தொடக்கத்தில் நல்ல முதலீடு செய்தால், பெரிய வருமானம் கிடைக்கும் என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன. ஆரம்பத்தில் உங்கள் முதலீட்டின் வளர்ச்சி அளவு சிறியதாக இருக்கும். ஆனால் ஆண்டுக்கு ஆண்டு அதன் மதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வருடங்கள் செல்லச் செல்ல உங்கள் கார்பஸூம் பெரிதாக வளரும். இது பவர் ஆஃப் கம்பவுண்டிங் என்று அழைக்கப்படுகிறது.

இந்த வகையான மியூச்சுவல் ஃபண்டுகளைத் தேடினால், அதில் DSP மிட்கேப் ஃபண்ட் சிறந்த வருமானம் தரும் மியூச்சுவல் ஃபண்டுகளில் ஒன்றாகும். இந்த மியூச்சுவல் ஃபண்டுகள் முதலீட்டாளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் அபரிதமான வருமானத்தை அளித்துள்ளன. இந்த மியூச்சுவல் ஃபண்ட் அதன் 65% நிதியை மிட் கேப் பங்குகளில் முதலீடு செய்கிறது.

 ரூ.1 லட்சம் முதலீடு இப்போ ரூ.15 லட்சம் வருமானம்..இதில் யாரெல்லாம் முதலீடு செய்துள்ளீர்கள்..?


இந்த டிஎஸ்பி மிட்கேப் ஃபண்டில் 1 வருடத்திற்கு முன்பு யாராவது முதலீடு செய்திருந்தால், அது இப்போது ரூ.1.44 லட்சமாக இருந்திருக்கும், மேலும் 44.2% வருமானம் கிடைத்திருக்கும். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் ரூ.1.67 லட்சமாக வளர்ந்து 18.79% வருமானம் கிடைத்திருக்கும். ஐந்தாண்டு காலத்தில் ரூ. 1 லட்சத்துக்கான முதலீடு ரூ.2.96 ஆக இருந்திருக்கும் மற்றும் 24.2 சதவீதம் வளர்ச்சியடைந்திருக்கும்.

இதேபோல், 10 ஆண்டுகளுக்கு முன்பு யாராவது இந்த ஃபண்டில் ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால், தற்போது ரூ.5.16 லட்சமாக இருந்திருக்கும். இந்த மியூச்சுவல் ஃபண்ட் ஆரம்பத்தில் ரூ.1 லட்சத்தை முதலீடு செய்திருந்தால், அந்தத் தொகை 15 மடங்கு அதிகரித்து, ஆகஸ்ட் 30, 2024 நிலவரப்படி ரூ.15.1 லட்சமாக இருந்திருக்கும்.

டிஎஸ்பி மிட்கேப் மியூச்சுவல் ஃபண்ட் நவம்பர் 14, 2006 அன்று தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துகள் கடந்த ஆகஸ்ட் 31, 2024 வரை ரூ. 20,068.84 கோடியாக உள்ளன.

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது அவரவர் விருப்பதிற்கானது. அதன்படி டிஎஸ்பி மிட்கேப் மியூச்சுவல் ஃபண்ட் அதன் ஆரம்ப காலம் முதல் தற்போது கடந்த ஆகஸ்ட் 30 வரை சிறப்பாக செயலாற்றியுள்ளது. இது நிறுவனம் குறித்த பதிவு மட்டுமே, இதில் முதலீடு செய்பவர்கள் முதலீட்டு முடிவை எடுப்பதற்கு முன் நிதி சார்ந்த ஆவணைங்களை கவனமாக தெரிந்து கொண்டு மியூச்சுவல் ஃபண்ட் ஆலோசகரின் ஆலோசனைகளை பெற்று உங்கள் விருப்பத்துடன் முதலீடு செய்துகொள்ளுங்கள்.

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+