கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் பங்கு வர்த்தகம் என்றால் என்னவென்றே தெரியாத நிலை இருந்தது.
ஆனால் தற்போது கல்லூரி மாணவர்கள் முதல் ஓய்வு பெற்றவர்கள் வரை பல்வேறு விதமான பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பங்கு வர்த்தகத்தில் ஈக்யூடிட்டி பங்கு வர்த்தகம், கமாடிட்டி பங்கு வர்த்தகம், கரன்சி வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு வகைகள் உள்ளன. இந்த நிலையில் மியூச்சுவல் ஃபண்டில் பெரும்பாலானோர் முதலீடு செய்து வரும் நிலையில் நேரடி பங்கு வர்த்தக முதலீட்டிற்கும், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டிற்கும் என்ன வித்தியாசம் என்பதை பார்ப்போம்.
நேரடி பங்குவர்த்தகம்
நேரடியாக பங்கு வர்த்தகத்தில் நாம் ஒரு நிறுவனத்தின் பங்கை வாங்கும்போது நாம் நிறைய ஹோம் வொர்க் செய்ய வேண்டும். இல்லையென்றால் திடீரென்று ஒருநாள் நாம் முதலீடு காணாமல் போய்விடும். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தினால் திடீரென இந்திய பங்குசந்தை சரிகிறது. உக்ரைன் போருக்கும் இந்திய பங்குச் சந்தைக்கும் என்ன சம்பந்தம் என்று நாம் யோசிக்கும் முன்பே நமது முதலீடு காலியாகிவிடும்.
பங்குவர்த்தகத்தில் லாப-நஷ்டம்
அதேபோல்தான் கமாடிட்டி சந்தையில் தங்கம், வெள்ளி போன்றவைகளை வர்த்தகம் செய்யும்போது ஒரே நாளில் லட்சக்கணக்கில் லாபம் கிடைக்கவும் வாய்ப்புண்டு, அதேபோல் நஷ்டமடையும் அதிக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நான்கு நாட்கள் தொடர்ச்சியாக லாபம் பெற்றவர்கள் அந்த லாபத்தை விட பல மடங்கு ஐந்தாவது நாள் நஷ்டத்தை சந்திப்பது உண்டு.
மியூச்சுவல் ஃபண்ட்
ஆனால் மியூச்சுவல் ஃபண்ட் என்பது பாதுகாப்பான மற்றும் நிரந்தரமான குறிப்பிட்ட சதவீத வருமானத்தை தரும் முதலீடு என்பதால் பெரும்பாலானோர் தற்போது தங்கள் முதலீடுகளை மியூச்சுவல் ஃபண்டில் செய்கிறார்கள். மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் போது நம்முடைய முதலீடு குறித்து நாம் எந்தவிதமான கவலையும் பட வேண்டிய அவசியம் இல்லை. எந்த நாட்டில் போர் வந்தாலும், எந்த பெரிய பொருளாதார பிரச்சனை வந்தாலும் நாம் கண்டுகொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
ஃபண்ட் மேனேஜர்
ஏனெனில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் ஒரு ஃபண்ட் மேனேஜர் இருப்பார். அவருக்கு நாம் ஒரு சிறிய கட்டணத்தைக் கொடுத்துவிட்டால் அந்த ஃபண்ட் மேனேஜர், நம்முடைய மியூச்சுவல் ஃபண்டை ஆய்வு செய்து முதலீட்டிற்கு ஆபத்து என்றாலோ அல்லது குறைந்த வருமானம் வரும் வகையில் இருந்தாலோ உடனே வேறு நிறுவனத்தில் முதலீட்டை மாற்றிவிடுவார். ஃபண்ட் மேனேஜர்கள் நமது முதலீட்டை பாதுகாப்பது மட்டுமின்றி முதலீட்டு கணக்கியல் மற்றும் நிர்வாகத்தையும் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.
பாதுகாப்பான முதலீடு
ஒரு ஃபண்ட் மேனேஜர் ஒரு மியூச்சுவல் ஃபண்டை வாங்கும் போதும் விற்கும் போதும் அதன் பின்னணி குறித்து அலசி ஆராய்ந்து நஷ்டம் ஏற்படாத வகையில் சேவை செய்வார். இதற்காக அவருக்கு ஒரு சிறு கட்டணத்தை நாம் கொடுத்து விட்டால் நம்முடைய முதலீடு பாதுகாப்பாகவும் நிரந்தர வருமானம் தரக்கூடியதாகவும் இருக்கும்.
ரிஸ்க் இல்லை
எனவே ரிஸ்க் இல்லாமல் 10 முதல் 12 சதவீதம் நமது முதலீட்டுக்கு வருமானம் வேண்டுமென்றால் மியூச்சுவல் ஃபண்டில் தாராளமாக முதலில் செய்யலாம். அதே நேரத்தில் நீங்கள் நேரடியாக பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டால் முழுநேரமாக அதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதும், சிறிது கவனக்குறைவாக இருந்தாலும் மிகப்பெரிய நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications