கடந்த சில ஆண்டுகளாக பொதுமக்களுக்கு மியூச்சுவல் பண்ட் குறித்த விழிப்புணர்வுகள் அதிகமாகி வருகின்றன. வங்கிகளில் பிக்சட் டெபாசிட் செய்தால் அதிகபட்சமாக 6 சதவீதம் வட்டி மட்டுமே கிடைத்து வரும் நிலையில் மியூச்சுவல் ஃபண்ட் முறையில் முதலீடு செய்தால் வருடத்திற்கு குறைந்தது 10 முதல் 12% வருமானம் கிடைத்து வருகிறது என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.
எனவே ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்யும் SIP என்ற வகை மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் மொத்தமாக முதலீடு செய்யும் லம்ப்சம் ஆகியவற்றில் கடந்த சில ஆண்டுகளாக மக்கள் அதிகம் முதலீடு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மியூச்சுவல் ஃபண்ட் விதிமுறைகளை செபி மாற்றி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மியூச்சுவல் ஃபண்ட் விதிகள்
சந்தை கட்டுப்பாட்டாளர் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) இன்சூரன்ஸ் பாலிசிகளின் பயனாளிகள் சார்பாக பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்யும் ஸ்பான்சர்களுக்கு "அசோசியேட்" என்ற வரையறையின் பொருந்தக்கூடிய தன்மையை அகற்ற மியூச்சுவல் ஃபண்ட் விதிகளை திருத்தியுள்ளது.
செப்டம்பர் 3 முதல்
செபியால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி திருத்தப்பட்ட புதிய விதிகள் செப்டம்பர் 3ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிகிறது. ஒழுங்குமுறை வாரியம் கடந்த மாதம் திருத்தங்களுக்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்தது என கூறப்படுகிறது.
செபி
இன்சூரன்ஸ் பாலிசிகள் அல்லது பிற திட்டங்களின் பயனாளிகள் சார்பாக பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்யும் ஸ்பான்சர்களுக்கு "அசோசியேட்" என்ற வரையறை பொருந்தாது" என்று செபி கட்டுப்பாட்டாளர் கூறினார். இதனால் எந்த அளவுக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
"அசோசியேட்"
செபி விதிகளின் கீழ், "அசோசியேட்" என்பது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, தன்னால் அல்லது உறவினர்களுடன் இணைந்து, அசெட் மேனேஜ்மென்ட் கம்பெனி (AMC) அல்லது அறங்காவலர் போன்றவற்றின் மீது கட்டுப்பாட்டை கொண்டிருக்கும் ஒரு நபரை உள்ளடக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது
மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள்
தற்போது, 43 மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், கிட்டத்தட்ட ரூ.38 லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகிக்கின்றன என்றும், இது வரும் ஆண்டுகளில் இன்னும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

பங்குச்சந்தை பக்கம் தலை வச்சு கூட படுக்க கூடாது!! 6 லட்சம் கோடி அவுட்!! கதறும் முதலீட்டாளர்கள்!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஈரான் போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக நடந்த விலை மாற்றம்..!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:



Click it and Unblock the Notifications