செப்டம்பர் 30 ஆம் தேதி நெருங்கி வரும் வேளையில், இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் முக்கியமாக செய்ய வேண்டிய ஒரு பணிக்கான காலக்கெடு முடிய உள்ளது.
செப்டம்பர் 30 ஆம் தேதி மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளுக்கான நாமினேஷனை தாக்கல் செய்ய கடைசி வாய்ப்பாக உள்ளது. இந்த முக்கியமான பணியை செய்ய தவறவிட்டால் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் மீட்புகள் மற்றும் வித்டிராவல் உட்பட அனைத்து டெபிட் பரிவர்த்தனைகளும் முடக்கப்படும். இதனால் ஏற்கனவே வாங்கியவற்றை விற்பனை செய்ய முடியாது.

இதை முதலீட்டாளர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டும், இல்லையெனில் பெரும் முதலீடுகள் சிக்கலில் மாட்டிக்கொள்ளும். இந்த நிலையில் ஒருவர் எப்படி தங்களுடைய மியூச்சுவல் பண்ட் திட்டத்திற்கு நாமினேஷன் செய்யப்பட்டு உள்ளதா இல்லையா என தெரிந்துக்கொள்வது..? இதை ஆன்லைனில் செக் செய்யலாம் அல்லது AMC நிறுவனத்திடம் கோரிக்கை வைத்து இதற்கான விபரத்தை பெறலாம்.
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு நாமினியை நியமிக்க இரண்டு வாய்ப்புகள் உள்ளது. முதலாவது நீங்கள் ஒருவர் முதல் மூன்று பேர் வரை நாமினியாக நியமிக்கலாம். இரண்டாவது யாரையும் நாமினியாக நியமிக்க விருப்பமில்லை என்று தெரிவிக்கலாம். ஆனால் இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்தாக வேண்டும் என்பது கட்டாயம்.
ஆன்லைன் மூலம் மியூச்சுவல் பண்ட் கணக்குகளை திறந்திருந்தால், கணக்கில் லாக்கின் செய்து, முதலீட்டாளர்கள் நாமினேஷன் விபரம் கொடுத்து OTP மூலம் உறுதி செய்யலாம். இதுவே கூட்டு முதலீடாக இருந்தால் இருவரும் நாமினி டிக்ளர் செய்ய வேண்டும்.
நீங்கள் நீண்ட காலம் முன்பு பேப்பர் அப்ளிகேஷன் வாயிலாக முதலீடு செய்திருந்தால், registrar and transfer agent (RTA) அல்லது மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தின் பேப்பர் விண்ணப்பம் கொடுத்து நாமினி டிக்ளர் செய்யலாம். இந்த நிலையில் பொருளாதார நிபுணரான ராஜேஷ் டிவிட்டவரில் ஒரு வழிமுறையை கொடுத்துள்ளார்.
உங்களது டீமேட் கணக்கில் லாகின் செய்து, ப்ரோபைல் செட்டிங்க்ஸ் (profile settings) சென்று, நாமினிக்கான ஆப்ஷன்-ஐ தேர்வு செய்து, உங்களது முடிவை தெரிவிக்கலாம். NSDL ல் உங்களது டீமேட் கணக்கு இருந்தால் (எப்படி தெரிந்து கொள்வது? - உங்கள் டீமேட் கணக்கில், CML அதாவது Client Master List ஐ தரவிறக்கி பார்க்கவும்), கீழ்காணும் வழியை பின்பற்றவும்.
https://eservices.nsdl.com/instademat-kyc-nomination/#/login என்ற இணைய பக்கத்திற்கு சென்று, DP ID, Client ID, PAN ஆகிய விபரத்தை கொடுத்து போனில் பெற்ற OTP உடன் சேர்த்து உள்ளிடவும். உள்ளே சென்று Nominate அல்லது Opt Out என்பதில் உங்களுக்கு விருப்பமான ஒன்றை தேர்வு செய்யவும். நாமினேஷன் கொடுத்த உடன் ஆதார் OTP மூலம் ஈ-சைன் செய்தால் போதும் என தெரிவித்துள்ளார்.
நாமினேஷன் என்றால் என்ன? : உங்களுக்குப் பிறகு, உங்களது டீமேட் கணக்கில் உள்ள சொத்துக்கள் யாருக்கு சென்றடைய வேண்டுமென்பதை அதிகாரப்பூர்வமாக நீங்கள் தெரிவிப்பதே நாமினேஷன் எனப்படும்.
யார் யாரை நாமினியாக நியமிக்கலாம்? : உங்கள் விருப்பப்படி யாரை வேண்டுமானாலும் நியமிக்கலாம். ஒன்று முதல் மூன்று நபர்கள் வரை நியமிக்க வழியுண்டு. அவரவருக்கான பங்கீடு எவ்வளவு என்பதையும் நீங்கள் குறிப்பிட வேண்டும். தனி நபர்கள் மட்டுமே நாமினியாக நியமிக்கப்பட வேண்டும்.
ஒருமுறை கொடுத்த நாமினியை மாற்ற முடியுமா? : நீங்கள் உங்கள் நாமினியை எவ்வளவு முறை வேண்டுமானாலும் மாற்றலாம்.


Click it and Unblock the Notifications