பொதுவாக பயணத்தை அதிகம் விரும்பாதவர்கள் கூட சுற்றுலா என்றால், கொஞ்சம் ஜாலி மூடிற்கு செல்வது இயல்பான ஒன்று தான். அப்படி குடும்பத்துடன் சென்று மகிழ, ஒரு பிரம்மாண்ட ஆப்சனை பற்றித் தான் நாம் இன்று பார்க்க விருக்கிறோம்.
எம்வி கங்கா விலாஸ் என்ற சொகுசு கப்பலில் 51 நாட்கள் பயணம் செய்ய நீங்கள் தயாரா? இந்த கப்பலில் எந்த மாதிரியான வசதிகள் எல்லாம் உள்ளது? இதற்கு எவ்வளவு கட்டணம் ? 51 நாள் எனும்போது லட்சக்கணக்கில் இருக்குமோ ? என்ற கேள்வியும் பலருக்கு எழுந்திருக்கலாம்.
சொகுசு கப்பல்
27 நதிகள் வழியாக பயணிக்கும் இந்த சொகுசு கப்பல் தான் உலகிலேயே மிக நீண்ட நதி வழி பயணத்துக்கானது எனலாம். இந்த கப்பலை இன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார்.
வாரணாசியில் இருந்து திப்ருகார்க் வரையில் பயணிக்கும் இந்த கப்பல் மூலம், 51 நாட்களில் 27 நதிகள் வழியாக 50-க்கும் மேற்பட்ட சுற்றுலா தளங்களையும் சுற்றி பார்க்கலாம். இதில் மிக பழமையான பல பிரபலமான இடங்களையும் நீங்கள் சுற்றி பார்க்க முடியும்.
எத்தனை கிலோமீட்டர் பயணம்?
இது சுமார் 3200 கிலோமீட்டர்கள் பயணிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கங்கா விலாஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கப்பல் உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் இருந்து பயணத்தை தொடங்கி, அசாம் மாநிலத்தின் திப்ருகரில் முடிவடைகிறது. இது கொல்கத்தா தாகா வழியாக தனது பயணத்தை தொடரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இயற்கை அழகையும் ரசிக்கலாம்
இந்த கப்பலில் இந்தியாவின் இயற்கை அழகை ரசித்தவாறே செல்வதற்கு ஏற்றது. மக்கள் வனவிலங்குகள் போன்றவற்றையும் ரசித்தவாறே செல்ல தேசிய சரணாலயங்கள் மற்றும் தேசிய பூங்காக்கள் வழியாகவும் பயணிக்கிறது. இதில் குறிப்பாக சுந்தரவனக் சதுப்பு நிலக் காடுகள் மற்றும் காசிரங்கா தேசியா பூங்காவினையும் பார்த்து ரசிக்க முடியும்.
ரசிக்க பல இடங்கள்
இந்த கப்பல் கங்கா, பிரம்மபுத்திரா, மேக்னா உள்ளிட்ட மூன்று நதிகளும் இந்த பயணத்தில் அடக்கம். பல்வேறு கலாச்சாரங்கள் அடங்கிய இந்த சுற்றுலா பயணத்தில், உலகின் மிகப்பெரிய சதுப்பு நிலக் காடுகளில் ஒன்றான கங்கா ஆர்த்தி மற்றும் மாயோங் போன்ற இடங்களையும் இந்த பயணத்தில் ரசிக்கலாம். இந்த பயணத்தில் ஆற்றுத் தீவான மாஜூலியையும் கண்டு ரசிக்க முடியும்.
யார் இயக்கம்?
இந்த கப்பலை இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணையம் (IWAI), அன்டாரா சொகுசு நதி கப்பல்கள் மற்றும் ஜேஎம் பாக்ஸி ரிவர் குரூப் ஆகியவற்றால் பிபிபி (PPP) மாதிரியின் கீழ் இந்த கப்பல் இயக்கப்படும்.
இந்த சொகுசு கப்பலில் முதல் கட்டமாக சுவிட்சர்லாந்தை சேர்ந்த 36 பயணிகள் பயணிக்க உள்ளனர்.
என்னென்ன வசதிகள்?
மூன்று அடுக்கு கொண்ட இந்த கப்பலில் 18 சூட் ரூம்கள் உள்ளன.
இந்த கங்கா விலாஸ் கப்பலில் எல்இடி டிவி, ஸ்மோக் டிடெக்டர்கள், பாதுகாப்பு உடைகள், ஸ்பிரிங்லர்கள், பிரெஞ்ச் பால்கனி, மாற்றத்தக்க படுக்கை வசதிகள், ஷவர்களுடன் கூடிய பாத்ரூம் என 40 இருக்கைகள் கொண்ட உணவகம், ஸ்பா மற்றும் சன்டெக்ஸ் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளது.
கட்டணம் எவ்வளவு?
இந்த பிரம்மாண்ட கப்பலில் பயணிக்க ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 24,962.25 ரூபாய் அல்லது 300 டாலராகும். 51 நாள் பயணத்தை முழுமையாக அனுபவிக்க 12.50 லட்சம் ரூபாய்க்கு மேலாக செலுத்த வேண்டியிருக்கும்.


Click it and Unblock the Notifications