டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடாவின் அலுவலகத்தில் பொது மேலாளராக இருந்த சாந்தனு நாயுடு, தனது குரு மற்றும் நண்பருக்கு ஒரு உருக்கமான பிரியாவிடை பதிவை எழுதியுள்ளார். நாயுடு பல ஆண்டுகளாக ரத்தன் டாடாவுடன் நெருக்கமாக பணியாற்றினார், அவர்களின் பிணைப்பு அவரது உருக்கமான அஞ்சலியில் தெளிவாக தெரிந்தது.
ரத்தன் டாடாவுக்கு 75 வயதாக இருக்கும் போது, சாந்தனு நாயுடு-வுக்கு 23-25 வயது மட்டுமே இருக்கும், இருவரும் ஓன்றாக பயணிப்பது, ஒன்றாக நிர்வாக பணிகளை மேற்கொள்வது என ரத்தன் டாடா - சாந்தனு நாயுடு டீம்-ஐ மொத்த இந்திய தொழிற்துறையும் ஆச்சரியத்தில் பார்த்தது.

இந்த நிலையில் லிங்க்டின தளத்தில் ரத்தன் டாடா மறைவையொட்டி சாந்தனு நாயுடு ஒரு முக்கியமான பதிவை வெளியிட்டார். இதில் சாந்தனு நாயுடு தனது "அன்பான என் கலங்கரை விளக்கு" என ரத்தன் டாடா-வை அழைத்து, அவருடைய இழப்பின் துக்கத்தை வெளிப்படுத்தினார்.
சாந்தனு நாயுடு தனது பதிவில், "எங்களுடைய நட்புறவில் ரத்தன் டாடா-வின் இழப்பால் ஏற்பட்டு இருக்கும் ஓட்டையை நான் என் வாழ்நாள் முழுவதும் நிரப்ப முயற்சித்தாலும் போதாது. துக்கம் என்பது அன்பிற்காக செலுத்த வேண்டிய விலை." என்று தனது பதிவை முடித்துள்ளார்.
டாடா குழுமத்தின் ஐந்தாம் தலைமுறை ஊழியரான சாந்தனு நாயுடு, ரத்தன் டாடாவுடன் ஒரு தனித்துவமான நட்புறவை கொண்டுள்ளார். சாந்தனு நாயுடு , ரத்தன் டாடாவுடன் நெருக்கமான தொடர்பை வளர முக்கியமான காரணமாக இருந்தது இருவருக்கும் நாய்கள் மீதாந இருந்த அன்பு தான். இதுதான் அவர்களுக்கு இடையே ஒரு வலுவான பிணைப்பை உருவாக்கியது.
ரத்தன் டாடாவின் உடல் மும்பையில் அவரது வீட்டில் இருந்து National Centre of Performing Arts சென்டருக்கு கொண்டு செல்லப்பட்டது, அங்கிருந்து அவை வோர்லி சுடுகாட்டுக்கு கொண்டு செல்லப்படும், அங்கு ரத்தன் டாடா உடலுக்கு அரசு மரியாதை செய்யப்படும். இந்த இறுதி பயணம் டாடா குழுமத்திற்கும் இந்தியா முழுமைக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்த இந்த மனிதருக்கு ஒரு பொருத்தமான அஞ்சலி செலுத்தும்.

ரத்தன் டாடாவின் உடல் மும்பையில் அவரது வீட்டில் இருந்து National Centre of Performing Arts சென்டருக்கு கொண்டு செல்லப்பட்டும் போது சாந்தனு நாயுடு, டாடாவின் உடல் கொண்டு செல்லப்படும் வாகனத்தை பின்தொடர்ந்து சென்றார். இன்று காலை முதல் ரத்தன் டாடா விட்டிலேயே இருக்கிறார் சாந்தனு நாயுடு.
ரத்தன் டாடா திருமணம் செய்து கொள்ளவில்லை. அவருக்குக் குழந்தைகள் இல்லை என்றாலும், அவர் சாந்தனுவை எப்போதும் தனது மகனைப் போலவே நடத்தினார்.
புனேவில் பிறந்து வளர்ந்த சாந்தனு, 2014 இல் புனே பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் பட்டப்படிப்பை முடித்தார். அதைத் தொடர்ந்து 2016 இல் கார்னல் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ படிப்பை முடித்தார். படிப்பை முடித்த பின்னர் டாடா எல்க்ஸி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.
தான் சாலையைக் கடந்து வரும்போது ஏராளமான நாய்கள் வாகனங்களில் அடிபட்டு இறந்து கிடந்ததைப் பார்த்த சாந்தனு நாயுடு இதைத் தடுக்க, நாய்களுக்கு இரவில் ஒளிரும் காலர்களை தயாரிக்கும் யோசனையை முன்வைத்தார். இந்த யோசனையை ரத்தன் டாடாவிடம் பகிர்ந்து கொண்டபோது, டாடா அவரை ஊக்கப்படுத்தி தனது அலுவலகத்தில் பணிபுரிய அழைத்தார்.

ரத்தன் டாடாவின் உதவியாளராகப் பணிபுரியத் தொடங்கிய சாந்தனு, பின்னர் பொது மேலாளராக நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து மூத்த குடிமக்களுக்கு உதவும் ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தைத் தொடங்கினார். இந்த நிறுவனம் தற்போது 5 கோடி ரூபாய் மதிப்புடையதாக உள்ளது.
ரத்தன் டாடா மற்றும் சாந்தனு நாயுடு இருவரும் நாய்களை மிகவும் விரும்பியதால், அவர்களது நட்பு வலுவாக இருந்தது. சாந்தனு, ரத்தன் டாடாவை தனது குருவாகவும், தந்தையாகவும் பார்த்தார். ரத்தன் டாடாவின் மறைவுக்கு பின்னர், சாந்தனு தனது இழப்பை வெளிப்படுத்தி, அவரது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
இவ்வாறு ஒரு இளைஞனின் கனவை நனவாக்கி, அவனை ஒரு தொழிலதிபராக உருவாக்கிய ரத்தன் டாடாவின் தாராள குணம் மற்றும் மனிதநேயம் இன்றும் போற்றப்படுகிறது.


Click it and Unblock the Notifications